TA/Prabhupada 0639 - தனிப்பட்ட ஆத்மா ஒவ்வொரு உடம்பிலும் உள்ளது - பரமபுருஷனே உண்மையான உரிமையாளர்
Lecture on BG 2.30 -- London, August 31, 1973
ஆகையால் விலங்கினை போன்ற தாழ்ந்த வாழ்க்கை நிலையிலும் கிருஷ்ணர் அங்கிருக்கிறார். அவர் கூறுகிறார் தேஹே ஸ்ர்வஸ்ய பாரத. மற்றொரு இடத்தில், கிருஷ்ணர் கூறுகிறார் தேஹி அல்லது க்ஷேத்ர-ஞான, உடலுக்கு சொந்தக்காரர் அங்கிருக்கிறார், மேலும் அங்கு மற்றோரு க்ஷேத்ர-ஞான, மற்றோரு சொந்தக்காரர். அவர்தான் கிருஷ்ணர். க்ஷேத்ர-க்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ-க்ஷேத்ரேஷு பாரத (ப.கீ. 13.3). தனிப்பட்ட ஆன்மா உடலில் இருப்பது போல், பரமாத்மா, கிருஷ்ணரும் அங்கு இருக்கிறார். இருவரும் அங்கு இருக்கிறார்கள். இருவரும் அங்கு இருக்கிறார்கள். ஆகையால் அவர் அனைத்து உடல்களுக்கும் உரிமையாளர். அனைத்து உடல்களுக்கும். சில நேரங்களில் அயோகியர்களால் குற்றம் சாட்டப்படுகிறார், அதாவது "அவர் ஏன் மாற்றான் மனைவியுடன் நடனம் ஆடுகிறார்?" ஆனால் உண்மையிலேயே அவர்தான் உரிமையாளர். தேஹி ஸர்வஸ்ய பாரத. நான் உரிமையாளர் அல்ல. அவர்தான் உரிமையாளர். ஆகையால் உரிமையாளர் நடனம், நான் சொல்வதாவது, அவருடைய பெண் பணியாளருடன், அல்லது பக்தருடன், ஆடினால் என்ன தவறு? ஆடினால் என்ன தவறு? அவர் அவர்களுடைய உரிமையாளர். நீங்கள் உரிமையாளர் அல்ல. தேஹி ஸர்வஸ்ய பாரத. அவர் தான ... தனிப்பட்ட ஆன்மா, மேலும் பரமாத்மா, அனைத்து உடலிலும் உள்ளது, பரமாத்மா உண்மையான உரிமையாளர். கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (ப.கீ. 5.29). மஹேஷ்வரம், அவர் நித்தியமான உரிமையாளர். ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம். அவர் உண்மையான நண்பன். எனக்கு ஒரு காதலர் இருந்தால், நான் நண்பன், ஆனால் நான் நண்பன் அல்ல. உண்மையான நண்பன் கிருஷ்ணர் ஆவார். ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம். அதில் சொல்லப்பட்டிருப்பது போல், தஸ்மாத் ஸர்வாணி பூதாணி. உண்மையான நண்பன் கிருஷ்ணர் ஆவார். ஆகையால் கோபிகள் உண்மையான நண்பனுடன் நடனம் ஆடினால், அங்கு என்ன தவறு இருக்கிறது? அங்கு என்ன தவறு இருக்கிறது? ஆனால் அயோகியர்கள், கிருஷ்ணரைப் பற்றி அறியாதவர்கள், இது நெறியற்றது என்று நினைக்கிறார்கள். அது நெறியற்றது அல்ல. அது சரியான விஷயமே. சரியான விஷயம். கிருஷ்ணர் தான் உண்மையான கணவர். ஆகையினால், அவர் 16108 மனைவியர்களை மணந்தார். ஏன் 16,000? அவர் லட்சக் கோடி , நூறு கோடி மனைவிகளை மணந்தால், அதில் என்ன தவறு? ஏனென்றால் அவர்தான் உண்மையான கணவர். ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (ப.கீ. 5.29).
ஆகையால் கிருஷ்ணரைப் பற்றி அறியாதவர், அயோகியர், அவர்கள் கிருஷ்ணரை குற்றம் சாட்டுகிறார்கள் நெறியற்றவர் அல்லது பெண் பொறுக்கி என்று. மேலும் அவர்கள் இதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆகையினால், அவர்கள் கிருஷ்ணரின் சித்திரங்களை தீட்டுகிறார்கள், கோபியர்களுடன் கள்ளக்காதல் என்று. ஆனால் அவர் எவ்வாறு கம்சனை, அரக்கர்களை கொன்றார் என்று காட்டும் சித்திரம் தீட்டவில்லை. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதுதான் ஸஹஜியா. அவர்களுடைய ஒழுக்கக் கேடான, அவர்களுடைய தவறான தொழிலுக்காக, கிருஷ்ணரின் துணையை நாடுகிறார்கள். "கிருஷ்ணர் இதை செய்தார்." "கிருஷ்ணர் நெறியற்றவராகிறார். ஆகையினால் நாமும் நெறியற்றவர்கள். நாம் கிருஷ்ணரின் பிரமாதமான பக்தர், ஏனென்றால் நாம் நெறியற்றவர்கள்." இது நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால், கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்ள, இன்னும் நல்ல அறிவாற்றல் தேவைப்படுகிறது. நல்ல அறிவாற்றல். பஹுனாம் ஜன்மனாம் அந்தே க்ஞானவான் (ப.கீ. 7.19). க்ஞானவான் என்றால் முதல் தரமான அறிவாற்றல் உள்ளவர். மாம் ப்ரபத்யதே. கிருஷ்ணர் யார் என்று அவருக்கு புரியும். வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: இத்தகைய அறிவாற்றல் உள்ள மஹாத்மா ... அயோக்கிய மஹாத்மாவை நீங்கள் கண்டுபிடிக்கலாம், கிருஷ்ண உணர்வு இல்லாமல், வெறுமனே ஆடைகளை மாற்றிக் கொண்டு, தான் பகவான் அல்லது கிருஷ்ணர் என்று பிரகடனம் செய்துக் கொண்டிருப்பது. அவர்கள் முகத்தில் உதையங்கள். கிருஷ்ணர் இந்த அயோக்கியர்களிடமிருந்து வேறுபட்டவர். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொண்டால், நீங்கள் அதிர்ஷடசாலியாக இருந்தால் - எய் ரூபே ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ (சி.சி. மத்திய 19.151). மிகவும் அதிர்ஷ்டம் உடையவர்களால் மட்டும் தான் கிருஷ்ணர், யார் என்று புரிந்துக் கொள்ள முடியும்.