TA/Prabhupada 0642 - கிருஷ்ணப் பிரக்ஞை பயிற்சியானது பௌதிக உடம்பை ஆன்மிக உடம்பாக மாற்றும்



Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

பக்தர்: பிரபுபாதர்? தாங்கள் கூறினீர்கள் அதாவது, ஆன்மீக ஆத்மா தலை முடியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதி என்று. ஆன்மீக வானில், ஆன்மீக ஆத்மா இன்னமும் அந்த அளவு பெரிது தானா?

பிரபுபாதர்: ஹம்?

பக்தர்: ஆன்மீக ஆத்மா வீடு பேறு அடைந்த பின்...

பிரபுபாதர்: அது அவருடைய, மன ஆக்க நலத்துக்குரிய நிலை. ஆன்மீக வானில் அல்லது பௌதிக வானில், அவர் ஒரே மாதிரியே. ஆனால் நீங்கள் பௌதிக உலகில் வளரும் போது பௌதிக உடலே, அதேபோல் ஆன்மீக உலகில் நீங்கள் ஆன்மீக உடலை வளர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு புரிந்ததா? உங்கள் நிலை அத்தகை சிறிய துகள், ஆனால் ஆன்மீகம் விரிவடையும். பௌதிக உலகில் இந்த விரிவாக்கம் பருப்பொருளின் தொடர்பால் செய்யப்படுகிறது. மேலும் ஆன்மீக உலகில், அந்த விரிவாக்கம் ஆன்மாவில் செய்யப்படலாம். இங்கு பௌதிக உலகில் நான் ஆன்மீக ஆத்மா. இந்த உடலிலிருந்து நான் வேறுபட்டுள்ளேன், ஏனென்றால் இந்த உடல் பருப்பொருள் மேலும் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் விசை, ஆனால் இந்த பௌதிக உடல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் விசை அல்ல. ஆனால் ஆன்மீக உலகில் அனைத்தும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் விசை. அங்கு இறந்த பருப்பொருள் இல்லை. ஆகையினால் உடலும் ஆன்மீகமாகும். எவ்வாறு என்றால் நீரும் நீரும், நீர், அவ்வளவுதான். ஆனால் நீரும் எண்ணையும் - வித்தியாசமானது. அதேபோல், நான் ஆன்மீக ஆத்மா, நான் எண்ணெய் என்று வைத்துக் கொள்வோம். ஆக நான் நீரில் இருக்கிறேன், ஆகையால் அங்கு வித்தியாசம் உள்ளது. ஆனால் நான் நீரில் போடப்பட்டால், பிறகு அனைத்தும் சரியாகிவிடும். ஆகையால் மாயாவதிகள், உடலை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் வெறுமனே ஆன்மீக துகளாக இருக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய எண்ணம். ஆனால் நாம் வைஷ்ணவர்கள், நாம் கிருஷ்ணருக்கு தொண்டு செய்ய விரும்புகிறோம், ஆகையினால் நமக்கு கைகள், கால்கள் மேலும் வாயும் நாக்கும், அனைத்தும் தேவைப்படுகிறது. ஆகையால் நமக்கு அத்தகைய உடல் கொடுக்கப்பட்டுள்ளது. தாயின் கர்பத்திலிருந்து நீங்கள் இந்த உடலைப் பெற்றுக் கொண்டிருப்பது போல், அதேபோல் ஆன்மீக உலகில் நாம் உடலைப் பெறுவோம். தாயின் கர்பத்திலிருந்து அல்ல, ஆனால் அதை பெறுவதற்கு ஒரு செயல்முறை உள்ளது, நீங்கள் பெறலாம்.

பக்தர்: இருந்தாலும் அது செயற்கை முறையில் செயல்படுத்த முடியாது. தந்திரம் போல் ஒருவராலும் செய்ய முடியாது.

பிரபுபாதர்: செயற்கையாக?

பக்தர்: ஆம், ஒருவராலும் ஆன்மீக உடலை தன் சொந்த திடீர் விருப்பத்தால் வளர்க்க முடியாது, "ஓ நான் ஆன்மீக உடலை வளர்க்கிறேன். பயிற்சியால்."

பிரபுபாதர்: இந்த கிருஷ்ண உணர்வு பயிற்சி இந்த பௌதிக உடலை ஆன்மீக உடலாக மாற்றுகிறது. அது எவ்வாறு செய்யப்படுகிறது? இந்த உதாரணத்தை நான் பலமுறை அளித்திருக்கிறேன், அதாவது நீங்கள் இரும்பை தீயில் போடுங்கள். அது அதிகமாக சூடாக, நெருப்பாகிறது. இரும்பு சூடேறி சிவப்பானால் - இரும்பு நெருப்பின் தன்மைகளை பெற்றுவிட்டது என்று அர்த்தம் - நீங்கள் இரும்பை எங்கு தொட்டாலும், அது நெருப்பைப் போல் செயல்படும். அதேபோல், இந்த உடல், அது பௌதிக உடலாக இருந்தாலும் - அங்கு பல உதாரணங்கள் உள்ளன. ஒரு உலோகம், மின்சாரமளிக்கப்பட்டால், உலோகம் மின்சாரமாகாது. ஆனால் அதற்கு மின்சாரமளிக்கப்பட்டால், நீங்கள் உலோகத்தைத் தொட்டால், உங்களுக்கு உடனடியாக மின்சார அதிர்வு எற்படும். வெறுமனே மின்சார கம்பி போல். செம்பு, அது செம்பாகும். ஆனால் அது மின்சாரம் அளிக்கப்பட்டவுடனே, நீங்கள் தொடுங்கள், உங்களுக்கு மின்சார அதிர்வு எற்படும். அங்கு பல உதாரணங்கள் உள்ளன. அதேபோல், உங்கள் உடல் ஆன்மீக உணர்வுடன் இருந்தால், பிறகு அந்த பௌதிக செயல் இருக்காது. பௌதிக செயல் என்றால் புலன்திருப்தி. அதிகமாக ஆன்மீக உணர்வு எற்படும் போது, பௌதிக தேவைகள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். பௌதிக செயல்கள் முடிவடைந்துவிடும்.

ஆக உங்களால் அதை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? அதே உதாரணம்: நீங்கள் இரும்பை தீயில் தொடர்ந்து போடுங்கள். உங்களை தொடர்ந்து கிருஷ்ண உணர்வில் அமர்த்திக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் இந்த உடல்கூட, பௌதிக உடல், ஆன்மீக உணர்வு பெற்றுவிடும். மயத், மயத்-ப்ரத்யாய என்று அழைக்கப்படும் ஒரு சமஸ்கிரதம் இலக்கண சட்டம் உள்ளது. மயத் என்றால், அங்கு ஒரு வார்த்தை உள்ளது, ஸ்வர்ணமய போல். ஸ்வர்ணமய என்றால் பொன். கலப்பற்ற பொன்னால் செய்யப்பட்டதை, பொன் என்று கூறலாம், அதுவும் பொன்தான். மேலும் அது வேறு எதிலும் செய்து தங்க முலாம் பூசப்பட்டிருந்தாலும், அதிகமான பொன்னால், அதுவும் பொன்தான். அதேபோல், இந்த பௌதிக உடல், ஆன்மீக செயல்களால் மட்டும் நிறைந்திருந்தால், இதுவும் ஆன்மீகம்தான். ஆகையினால் புனிதர்கள், நிச்சியமாக உங்கள் நாட்டில் இறந்தவர்கள் எல்லோரும் கல்லறையில் புதைக்கப்படுகிறார்கள், ஆனால் இந்தியாவில் வேத முறைப்படி, உயர்ந்தவர்கள் மட்டும், பக்தர்கள், அவர்கள் உடல் எரியூட்டப்படுவதில்லை. அது ஆன்மீகமாக கருதப்படுகிறது. ஒரு சந்நியாசியின் உடல் எரிக்கப்படுவதில்லை ஏனென்றால் அது ஆன்மீகமாக கருதப்படுகிறது. ஆக அது எவ்வாறு ஆன்மீகமானது? அதே உதாரணம்தான்: இந்த உடலுக்கு எந்த பௌதிக செயல்களும் இல்லாத போது, வெறுமனே கிருஷ்ண உணர்வில் ஆன்மீக செயல்கள் இருந்தால், அந்த உடல் ஆன்மீகம்தான்.

ஆக இந்த உலகம் கிருஷ்ண உணர்வால் நிறைந்த்திருந்தால், ஒருவரும் புலன் திருப்திக்காக தொழில் செய்யாமல், கிருஷ்ணரின் திருப்திக்காக மட்டும் செய்தால், இந்த உலகம் உடனடியாக ஆன்மீக உலகமாகிவிடும். இதைப் புரிந்துக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும். கிருஷ்ணருக்காக பயன்படுத்தும் எதுவும், வெறுமனே கிருஷ்ணரின் திருப்திக்காக, அது ஆன்மீகமாகும். எவ்வாறு என்றால் நாம் இந்த ஒலிவாங்கியை கிருஷ்ணரைப் பற்றி உரையாட பயன்படுத்துகிறோம், பிறகுஅது ஆன்மீகமாகும். மற்றபடி இந்த ப்ரஸாததிற்கும் மற்றும் சாதாரண உணவிற்கும் இடையில் என்ன வித்தியாசம்? நாங்கள் ப்ரஸாதம் விநியோகிக்கிறோம், மக்கள் கூறுவார்கள், "ஏன் அங்கு ப்ரஸாதம் கொடுக்கிறார்கள்? நாம் உண்ணும் அதே பழங்கள், மேலும் நீங்கள் துண்டுகளாக வெட்டுகிறீர்கள் அது ப்ரஸாதம் ஆகிவிட்டது?" அவர்கள் கூறலாம். அது எப்படி ப்ரஸாதம் ஆகும்? ஆனால் அதுதான் ப்ரஸாதம். நீங்கள் தொடர்ந்து ப்ரஸாதம் உண்ணுங்கள், நீங்கள் ஆன்மீக உணர்வு பெறுவீர்கள். உண்மையில் அது ப்ரஸாதம். சும்மா அதே உதாரணம்தான், நான் அந்த இரும்பை எடுத்து, சூடான இரும்பு, நான் "இது நெருப்பு." என்று கூறுவது போல். யாராவது கூறலாம், "ஓ, ஏன் அது நெருப்பு? அது இரும்பு." நான் கூறுகிறேன், " அதை தொடுங்கள்." நீங்கள் பார்த்திர்களா? இவை பண்படா உதாரணங்கள், ஆனால் அதுதான்... உங்களுடைய செயல்கள் - உண்மையில் உயர்ந்த உணர்வில் அங்கு நீங்கள் பார்த்திர்களா? இவை பண்படா உதாரணங்கள், ஆனால் அதுதான்.

பருப்பொருள் இல்லை. அங்கு பருப்பொருள் இல்லை, அனைத்தும் ஆன்மீகம் ஏனென்றால் கிருஷ்ணர் ஆன்மீகமாவார். கிருஷ்ணர் முழுமையான ஆத்மா, மேலும் பருப்பொருள் கிருஷ்ணரின் சக்திகளில் ஒன்றாகும். ஆகையினால் அதுவும் ஆத்மாவாகும். ஆனால் அது தகாத வழியில் பயன்படுத்தப்படுவதால், கிருஷ்ணரை இலக்காக கொள்ளவில்லை, ஆகையினால் அது பருப்பொருள். ஆகையால் நம் கிருஷ்ண உணர்வு இயக்கம் ஆன்மீக உணர்வு பெறுவதற்கானது, அனைத்தையும் மீண்டும் ஆன்மீக உணர்வாக்குதல். அனைத்து சமூக நிலையும், அரசியல் நிலையும், எதுவும். இது மிகவும் சிறந்த இயக்கம். மக்கள் அதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேலும் அது உண்மையிலேயே உலகம் முழுவதும் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தினால் - நிச்சயமாக அது சாத்தியமில்லை, ஆனால் அதுவே இலட்சியம். ஆனால் குறைந்தது தனிநபர் ஒருவர் மீண்டும் ஆன்மீக உணர்வை பெறும் முறையை முயற்சித்தால், அவருடைய வாழ்க்கை பூரணமாகும்.