TA/Prabhupada 0648 – இயற்கையாக நாம் வாழும் ஜீவிகள் - செயல்பட்டே ஆகவேண்டும்



Lecture on BG 6.2-5 -- Los Angeles, February 14, 1969

பக்தர்: பொருளுரை: "பகவானின் உன்னத தொண்டில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர், தன்னிலேயே சந்தோஷமாக இருக்கிறார் எனவே அவர் புலன் இன்பத்திலோ பலநோக்கு செயல்களிலோ ஈடுபடுவதில்லை. இல்லையேல், ஒருவர் புலன் இன்பத்தில் ஈடுபட்டு ஆக வேண்டும் ஏனெனில் எந்த ஈடுபாடும் இல்லாமல் வாழ்வது முடியாது."

பிரபுபாதர்: ஆமாம் அதுதான் விஷயம். நமக்கு ஏதாவது ஒரு வேலை இருக்க வேண்டும். நாம் எதையும் நிறுத்த முடியாது, அதே உதாரணம் தான். ஒரு குழந்தையை செயலாற்றுவதில் இருந்து நிறுத்த முடியாது. இயற்கையில் நாம் ஜீவாத்மாக்கள் செயலாற்றி தான் ஆக வேண்டும். செயலை நிறுத்துவது சாத்தியமில்லை. "வேலையற்று இருக்கும் புத்தி அசுரனின் பட்டறை" என்று கூறுவது போல. நமக்கு சரியான வேலை இல்லை என்றால் ஏதாவது ஒரு முட்டாள்தனமான வேலையில் ஈடுபட்டுதான் ஆகவேண்டும். சரியான கல்வியில் ஈடுபடுத்தப்படாத குழந்தை கெட்டுப் போவதை போன்றது இதுவும். அதுபோல்தான் நமது இரண்டு வேளைகளும்: ஜட உலகின் புலனின்பமோ, கிருஷ்ண உணர்வோ, பக்தியோகமோ, யோகமோ. எனவே நான் யோக முறையில் ஈடுபடவில்லை என்றால் புலன் இன்பத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். புலன் இன்பத்தில் இருக்கிறேன் என்றால் யோகத்திற்கு அங்கு இடமில்லை. மேலும்.

பக்தர்: "கிருஷ்ண உணர்வு இல்லை என்றால் ஒருவர் எப்போதுமே சுய நன்மை கருதியோ சுயநல செயல்களிலோ தான் ஈடுபடுவர். ஆனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவன் கிருஷ்ணரின் திருப்திக்காக எதை வேண்டுமானாலும் செய்வான் அதன் மூலமாக புலன் இன்பத்தில் இருந்து முற்றிலுமாக விலகி இருப்பான். இத்தனை உணர்வு உள்ளவன் இயந்திரத்தனமாக வாழ்வது ஜட ஆசைகளில் இருந்து விலகி இருக்க முயல வேண்டும். யோகத்தின் உயர்ந்த தட்டை அடைவதற்கு முன்னர்."

பிரபுபாதர்: "யோக ஏணி". யோக ஏணி, யோகம் ஒரு ஏணிக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது. படிகளை போல பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் படிகள் இருப்பதைப் போல. ஒவ்வொரு படியும் ஒரு முன்னேற்றம் அது உண்மை. எனவே அனைத்து படிகளையும் கொண்ட அந்த அணிக்கு யோக முறை என்று பெயர். ஒருவர் ஐந்தாவது படியில் இருக்கலாம் ஒருவர் ஐம்பதாவது படியில் இருக்கலாம், மற்றொருவர் 500வது படியிலும், ஒருவர் வீட்டின் உச்சியிலும் இருக்கலாம். முழு ஏணியும் யோகமுறை என்று கூறப்பட்டாலும், ஐந்தாவது படியில் இருக்கும் ஒருவர், ஐம்பதாவது படியில் இருப்பவருக்கு இணை ஆகிவிட முடியாது. அதுபோல ஐம்பதாவது படியில் இருப்பவரை ஐனூராவது படியில் இருப்பவரோடு ஒப்பிட முடியாது. அதைப்போல கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்று நாம் பகவத் கீதையில் காண்கின்றோம். அனைத்தும் யோகம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. ஏனெனில் முழு படியும் கடைசி தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையுமே கிருஷ்ணருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு மனிதனுமே கடைசி தளத்தில் இருக்கிறான் என்று ஆகாது. கடைசி தளத்தில் இருப்பவன், கிருஷ்ண உணர்வு உடையவன் என்று கொள்ள வேண்டும். மற்றவர்கள், ஐந்திலோ ஐம்பதிலோ ஐனூரிலோ இருப்பது போல் தான். அந்த மொத்தத்திற்கும் பெயர் ஏணி.