TA/Prabhupada 0651 – மொத்த யோகத்தின் விழைவு – நம் மனதை நன்பனாக்கிக் கொள்வதே



Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பிரபுபாதர்: எல்லாப் புகழும் கூடியுள்ள பக்தர்களுக்கே!

பக்தர்கள்: எல்லாப் புகழும் உங்களுக்கே ஸ்ரீல பிரபுபாதர.

பிரபுபாதர்: பக்கம்?

பக்தர்: ஆறாவது ஸ்லோகம்.

பக்தர்: "மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பன் ஆகும். ஆனால் அவ்வாறு செய்யத் தவறும் அவனுக்கு அதுவே மிகப் பெரிய விரோதி ஆகும். (BG 6.6)."

பிரபுபாதர்: ஆமாம். இந்த மனம், அவர்கள் இந்த மனத்தைப் பற்றி தான் பேசுகிறார்கள். யோக முறை முழுவதும் இந்த மனதை நண்பன் ஆக்குவதற்கான வழியாகும். மனம் ஜட தொடர்புடன்... உதாரணமாக குடிபோதையில் இருக்கும் ஒருவனுக்கு அவன் மனம் எதிரி. சைதன்ய சரிதாம்ருதத்தில் ஒரு நல்ல ஸ்லோகம் உள்ளது.

க்ருஷ்ண புலிய ஜீவ போக வாஞ்சா கரே பாஷ
தேமாயா தாரே ஜாபடியா தரே
(ப்ரேம-விவர்த)

மனம்.... நான் ஆத்மா முழுமுதற் கடவுளின் அங்கம் ஆவேன். மனம் கலப்படம் அடையும்போது நான் எதிர்க்கிறேன் ஏனெனில் எனக்கு சிறிது சுதந்திரம் கிடைக்கிறது. "கிருஷ்ணர் அல்லது கடவுளுக்கு நான் ஏன் சேவை செய்ய வேண்டும். நானே கடவுள்." மனதில் இருந்து வரும் ஒரு கட்டளை தான் அதுவே நிலைமையை முழுவதுமாக மாற்றி விடுகிறது. அவன் ஒரு தவறான நினைப்பில், மாயையில் இருக்கிறான், வாழ்க்கை முழுவதுமே கெட்டுப் போகிறது. அங்கனம் செய்ய தவறியவன் மனதை வெல்ல தவறியவன், நாம் பலவற்றையும் வெல்ல முயற்சிக்கின்றோம், நாடு, ஆனால் மனதை வெல்ல தவறுகிறோம், அப்போது நாட்டை வென்றால் கூட அதுவும் தோல்வி தான். அவன் மனமே அவனுக்கு மாபெரும் எதிரி ஆகிவிடும். மேலே சொல்லுங்கள்.

பக்தர்: "மனதை வென்றவன் அமைதி அடைந்து விட்டதால் பரமாத்மா அவனுக்கு ஏற்கனவே அடையப்பட்டு விடுகின்றார். அத்தகு மனிதனுக்கு துன்பம் குளிர் வெப்பம் மான அவமானம் எல்லாம் சமமே. (ப.கீ. 6.7)

பிரபுபாதர்: தொடருங்கள்.

பக்தர்: ஒருவன் ஞானத்தின் ஆளும் விஞ்ஞானத்தின் ஆளும் முழு திருப்தி அடையும் போது அவன் தன் உணர்வில் நிலை பெற்றவன் என்றும் யோகி என்றும், அழைக்கப்படுகிறான். அத்தகையவன் உன்னதத்தில் நிலைபெற்று தன்னடக்கத்துடன் உள்ளான். அத்தகையவன் உன்னதத்தில் நிலைபெற்று தன்னடக்கத்துடன் உள்ளான். கூழாங்கற்களை கற்களோ தங்கமும் அவன் அனைத்தையும் சமமாக காண்கிறான். (ப.கீ. 6.8)."

பிரபுபாதர்: ஆமாம். மனம் சமநிலையில் இருக்கும் பொழுது இந்த நிலை வரும். கூழாங்கற்கள், கற்கள், தங்கம் அனைத்தும் ஒன்றாக தோன்றும்.