TA/Prabhupada 0660 – நீங்கள் பாலியல் விவகாரங்களைக் கட்டுபடுத்தினால், மிகவும் சக்திவாய்ந்தவராய் ஆகலாம்



Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969

தமால் கிருஷ்ணா: பதிமூன்று மற்றும் பதினான்கு: "உடம்பு, கழுத்து, தலை ஆகியவற்றை நேராக வைத்திருக்க வேண்டும் பின்பு மூக்கின் நுனியை விடாமல் பார்க்க வேண்டும். இதோடு புலனின்ப வாழ்க்கையை முற்றும் துறந்த, சலனமற்ற, பணிவான, பயமற்ற, மனதுடன், என்னை தன் மனதில் வைத்து ஒருவர் தியானம் செய்ய வேண்டும், என்னையே வாழ்வின் இறுதி நோக்கமாகக் கொள்ளவேண்டும். (ப.கீ. 6.13)."

பிரபுபாதர்: இதுவே வழிமுறை. முதலில் நீ சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், தனிமையான இடம். நீ தனியாகத்தான் செயல்பட வேண்டும். யோகா வகுப்பில் சேர்ந்து பணம் கட்டி உடலை வளைப்பது அல்ல, அதன் பின் வீட்டிற்கு வந்து எது வேண்டுமோ அதை செய்வதல்ல. தெரிகிறதா? இத்தகைய வேடிக்கையான செயல்களில் மாட்டிக் கொள்ளக்கூடாது தெரிகிறதா? வெறுமனே... இத்தகைய சமுதாயமானது, ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் அடங்கிய சமுதாயம் ஆகும் என்றே நான் பிரகடனம் செய்கிறேன். தெரிகிறதா? இதுவே பயிற்சி முறை. இங்கு நீங்கள் பார்க்கலாம். இது முழுமுதல் அதிகாரியான கிருஷ்ணரால் கூறப்பட்டது. கிருஷ்ணரை விட சிறந்த யோகி வேறு எவரும் இருக்கிறாரா?

இதுவே அதிகாரப்பூர்வமான அறிக்கை. இப்படித் தான் பயிற்சி செய்ய வேண்டும். இப்போது ஒருவர் தன் உடம்பை பற்றிக் கொள்ளவேண்டும்... முதலில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, புனித தலம், தனியாக, பிரத்தியேக இருக்கை அமைத்து கொள்ள வேண்டும். பிறகு இப்படி நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். "ஒருவர் தனது உடம்பு, கழுத்து, தலை ஆகியவற்றை நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டும்" இதுவே யோகப் பயிற்சி. இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும். அதுதான். ஆனால் யோகத்தின் உண்மையான குறிக்கோள் கிருஷ்ணரை மனதில் நிலையாக வைப்பதுதான். இங்கு கூறப்பட்டிருக்கிறது, "ஒருவர் தன் உடம்பு, கழுத்து, தலை ஆகியவற்றை நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டும் பின் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்." இங்கு கவனிக்கப்பட வேண்டும். தியானம் என்று கண்களை மூடினால் தூக்கம் வந்துவிடும் நான் பார்த்திருக்கிறேன். தியானிப்பவர்கள் பலரும் இப்போது தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் நான் பார்த்து இருக்கிறேன் தெரியுமா? ஏனெனில் கண்களை மூடிய உடன் இயல்பாகவே தூக்கம் வந்துவிடும். இல்லையா? எனவே கண்களை பாதியாக‌‌ மூடிக்கொள்ள வேண்டும். அதுவே முறை. இரண்டு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்க வேண்டும். இவ்வாறு சஞ்சாரமற்ற மனதுடன்.... இது மனதை ஒருநிலைப்படுத்தி சஞ்சலமற்ற பணிவான பயம் அற்ற தன்மை பெற உதவும். ஆமாம். ஏனெனில் அது அவசியம். பொதுவாக யோகிகள் காட்டிலிருந்து தியானம் செய்வார், அப்போது ஏதாவது புலி வருமோ என்று எண்ணினால் என்னவாகும்? பாம்பு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் நீங்கள் தனியாக காட்டில் அமர்ந்து இருக்க வேண்டும். அங்கு பல மிருகங்கள் இருக்கும். புலிகள் மான்கள் பாம்புகள். அதனால்தான் "பயமற்ற" என்று முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மான் தோல் யோகாசனத்தில் இதற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது அதில் சில மருத்துவ குணங்கள் இருப்பதால் பாம்புகள் அண்டுவதில்லை. அந்தக் குறிப்பிட்ட தோளின்மேல் அமர்வதால் பாம்புகளோ மற்ற பிராணிகளோ அங்கு வருவதில்லை. அதுவே குறிக்கோள். தொந்தரவு ஏற்படாது. பயமற்ற, புலனின்ப வாழ்க்கை முற்றிலும் துறந்த. அதாவது புலனின்ப வாழ்க்கையில் ஈடுபட்டால், மனதை எதன் பேரிலும் ஒருநிலைப்படுத்த முடியாது. அதுவே பிரம்மச்சாரி வாழ்க்கையின் பயன். புலன் இன்ப வாழ்க்கை அற்ற பிரம்மச்சாரியாக இருக்கும்போது மனம் வைராக்கியத்துடன் இருக்கும்.

இந்தியாவில் மகாத்மா காந்தி இதற்கு ஒரு நடைமுறை உதாரணம். இப்போது, அவர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார், அகிம்சை ஒத்துழையாமை. அந்த இயக்கம், மிக வலிமையான ஆங்கிலேயர்களை எதிர்த்து பிரகடனம் செய்யப்பட்டது. "நான் ஆங்கிலேயர்களுடன் அஹிம்சையாக போரிடுவேன் எந்தவித ஆயுதங்களும் இன்றி" என்று அவர் உறுதியுடன் இருந்தார். இந்தியா சார்புடன் இருந்தமையால் ஆயுதங்கள் எதுவும் இல்லை. பலமுறை ஆயுதப் போர் தொடுக்க முயன்றது. ஆனால் ஆங்கிலேயர்கள் வறியவர்களாக இருந்தபடியால் அதனை முறியடித்து விட்டார்கள். அதனால் காந்தி இந்த முறையை உருவாக்கினார் "ஆங்கிலேயர்களுடன் போரிடுவேன், அவர்கள் வன்முறையை கடைபிடித்தாலும், நான் வன்முறையை கடைபிடிக்க மாட்டேன். அதனால் எனக்கு உலகின் நன்மதிப்பு கிட்டும்." எனவே இதுவே அவருடைய திட்டம். அவர் பெரும் தேசியவாதி. ஆனால் அவருடைய வைராக்கியம் மிகவும் திடமாக இருந்ததிற்கு காரணம் அவர் பிரம்மச்சாரியாக இருந்தார். அவர் தனது முப்பத்தாறு வயது முதல் கைவிட்டுவிட்டார். அவருக்கு மனைவி இருந்தார் ஆனால் அவர் புலன் இன்ப வாழ்வை நிறுத்திவிட்டார். அவர் ஒரு குடும்பஸ்தர். அவருக்கு மனைவி குழந்தைகள் உண்டு. ஆனால் தனது முப்பத்தாறு வயதில் அத்தகைய இளம் வயதில் தனது மனைவி உடனான புலன் இன்ப வாழ்க்கையை கைவிட்டார். அது அவரை மிகவும் வைராக்கியகாரர் ஆக்கியது, "இந்த ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து துரத்துவேன்," என்று சொல்லி அத்தனையையும் செய்து முடித்தார். தெரியுமா? உண்மையில் அவர் அதை செய்து முடித்தார். எனவே புலன் இன்ப வாழ்க்கையை கட்டுப்படுத்துதல், அல்லது கைவிடுதல் மிகவும் வலிமை வாய்ந்தது. வேறு ஒன்றும் செய்யா விட்டால் கூட குறைந்த வாழ்க்கையை கட்டுப்படுத்தினால் நீ மிக வலிமையான மனிதன் ஆகிவிடுவாய். மக்களுக்கு இந்த ரகசியம் தெரிவதில்லை. எனவே எது செய்தாலும், ஒரு வைராக்கியத்துடன் செய்ய வேண்டும் என்றால், புலன் இன்ப வாழ்க்கையை கைவிட வேண்டும். அதுவே ரகசியம்.

எந்த வழி முறையாக இருந்தாலும் வேத வழி முறையில். யோக வழியோ பக்தி வழியோ ஞான வழியோ, எதிலும் புலன் இன்ப வாழ்க்கை அனுமதிக்கப்படவில்லை. புலனின்ப வாழ்க்கை குடும்ப வாழ்வில் குழந்தைகள் பெறுவதற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவ்வளவுதான். பாலுறவு வாழ்க்கை புலன் இன்பத்திற்காக அல்ல. அதன் தன்மை இன்பம் தருவதாக இருந்தாலும். இன்பம் இல்லை என்றால் ஒருவர் ஏன் என் குடும்ப வாழ்க்கை என்னும் பொறுப்பை ஏற்பார்? அதுவே இயற்கையின் பரிசின் ரகசியம். ஆனால் அதை நாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதுவே வாழ்க்கையின் ரகசியங்கள். இவையே வாழ்க்கையின் ரகசியங்கள். யோகப் பயிற்சி செய்யுங்கள், அது மிகவும் நல்லது. பாலுறவு வாழ்வில் ஈடுபடுவது தேவையற்றது மிகவும் தேவையற்றது. யாராவது பாலுறவு வாழ்க்கையை நீங்கள் விரும்பியவரை தொடருங்கள் என்றால், அதே சமயம் யோகியாகவும் இருக்கலாம், எனக்கு பணம் மட்டும் கட்டுங்கள். நான் உங்களுக்கு ஒரு 'அதிசய மந்திரத்தை' அளிக்கிறேன் என்றால் அதெல்லாம் வெறும் அயோக்கியத்தனம். ஆனால் நாம் ஏமாற்றப்பட விரும்புகிறோம். ஏமாற்றப்பட விரும்புகிறோம். மிக உயர்ந்தது மிகக் குறைந்த விலையில் தேடுகிறோம். அதனால் ஏமாற்றப்படுகிறோம். சிறந்த பொருள் வேண்டும் என்றால் அதற்கு தகுந்த விலை கொடுக்கத்தான் வேண்டும். "இல்லை, நான் கடைக்கு செல்கிறேன், ஐயா, நான் பத்து சென்டுகள் தருகிறேன் எனக்கு மிகச் சிறந்த பொருளை தாருங்கள்" என்றால் பத்து சென்ட் கணக்கு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு சிறந்த பொருளை வாங்க நினைத்தால் அதாவது தங்கத்தை வாங்க நினைத்தால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டும். அதுபோல்தான் யோகப்பயிற்சியில் முழுமை பெற வேண்டுமென்றால் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதனை குழந்தைத்தனமான செயலாக மாற்றக்கூடாது. அதுவே பகவத்கீதையின் பரிந்துரை வழிகாட்டுதல். அதனை குழந்தைத்தனமாக ஏறிட்டால் ஏமாற்றமே அடைவோம். பல ஏமாற்றுக்காரர்கள் உங்களை ஏமாற்ற காத்திருக்கிறார்கள் உங்களிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டு செல்ல. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிக்கை இதுதான். பாலுறவு வாழ்க்கையில் இருந்து விடுபடுதல்.