TA/Prabhupada 0698 – புலன்களுக்கு தொண்டாற்றுவதைவிட, ராதா-கிருஷ்ணருக்கு சேவையாற்றுவதால் மகிழ்ச்சி பெறலாம



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர்: நீங்கள் ஏன் ராதா-கிருஷ்ணர் பக்தியை கற்பிக்கிறீர்கள்?

பிரபுபாதா: ஹ்ம்?

பக்தர்: நீங்கள் ஏன் ராதா-கிருஷ்ணர் பக்தியை கற்பிக்கிறீர்கள்?

பிரபுபாதா: ஏனென்றால் நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதுவே உங்கள் இயல்பான நிலை. நீங்கள் ராதா-கிருஷ்ணரின் சேவையை மறந்துவிட்டீர்கள், எனவே நீங்கள் மாயாவுக்கு சேவை செய்கிறீர்கள் நீங்கள் மாயாவின் வேலைக்காரன், உங்கள் புலன்கள் எனவே நான் கற்பிக்கிறேன், "நீங்கள் உங்கள் புலன்களுக்கு சேவை செய்கிறீர்கள், இப்போது நீங்கள் உங்கள் சேவையை ராதா மற்றும் கிருஷ்ணருக்கு திரும்புங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் நீங்கள் வழங்க வேண்டிய சேவை. ராதா-கிருஷ்ணர் அல்லது மாயா, - மாயை, புலன்கள். எல்லோரும் புலன்களுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையா?" ஆனால் அவர் திருப்தி அடையவில்லை. அவரை திருப்தி செய்ய முடியாது எனவே நான் அவர்களுக்கு சரியான தகவல்களைத் தருகிறேன் - நீங்கள் சேவை செய்ய வேண்டும் ஆனால் உங்கள் உணர்வுகளுக்கு சேவை செய்வதற்கு பதிலாக, தயவுசெய்து ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள், பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு சேவார்த்தி எனும் நிலை அப்படியே உள்ளது, ஆனால் நான் ஒரு நல்ல சேவையை வழங்குகிறேன். நீங்கள் ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்யவில்லை என்றால், நீங்கள் உங்கள் புலன்களுக்கு சேவை செய்ய வேண்டி வரும், மாயா. எனவே உங்கள் சேவை நிலை தொடர்ந்து இருக்கும். நீங்கள் ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்யாவிட்டாலும் கூட. எனவே சிறந்த அறிவுறுத்தல் என்னவென்றால், உங்கள் விருப்பம் போல உங்கள் புலன்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக தயவுசெய்து ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அவ்வளவுதான்

பக்தர்: பிரபுபாதா? இந்த கேள்வி கேட்கப்படுவதற்கு முன்பு நீங்கள் இறைவன் சைதன்யா எங்களுக்காக கொடுத்த ஸ்லோகாக்களைப் பற்றி பேசுகிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருபுறம் அவர் இந்த பௌதீக கடலில் இருந்து விடுவிக்க பட விரும்பவில்லை என்று கூறுகிறார், நாங்கள் சேவை செய்ய மட்டுமே விரும்புகிறோம் பின்னர், மற்ற ஒன்றில், அவரை விடுவிக்குமாறு கிருஷ்ணரிடம் மன்றாடுகிறார் மரணத்தின் இந்த கடலில் இருந்து விடுபட்டு, அவரது தாமரை கால்களின் அணுக்களில் ஒன்றாக சேர இது எனக்கு ஒரு முரண்பாடாகத் தெரிகிறது, என்னால் …...

பிரபுபாதா: அந்த முரண்பாடு என்ன? விளக்கவும்.

பக்தர்: எனக்கு தோன்றுவது…... இந்த பொருள் கடலில் இருந்து விடுவிக்க நாம் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கக்கூடாது என்று நீங்கள் இதற்கு முன் விளக்கினீர்கள். நாம் எங்கிருந்தாலும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயற்சிக்க வேண்டும் மரணப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கப்படுவது, இந்த பௌதீக பொருள் கடலில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கான வேண்டுகோள் என்று தோன்றுகிறது. (தெளிவற்றது)

பிரபுபாதா: ந தனம் ந ஜனம், மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே பவதாத் பக்திர் அஹைதுகீ (சை ச அந்த்ய 20.29, ஸிக்ஸஸ்தக 4) உங்கள் சேவையில் நான் இருக்க வேண்டும். இது பிரார்த்தனை மற்றொரு பிரார்த்தனை:

அயி நந்த-தனுஜ கிங்கரம்
பதிதம் மாம் விஷமே பவாம்புதௌ
க்ருபயா தவ பாத-பங்கஜ-
ஸ்தித-தூலீ-ஸத்ருஷம் விசிந்தய
(சைச அந்த்ய 02.32, ஸிக்ஸஸ்தக 5)

மற்றொன்று, "உங்கள் தாமரை காலில் ஒரு தூசியாக என்னை சேர்த்து கொள்ளுங்கள்" எனவே ஒரு ஸ்லோகாவில் அவர் கூறுகிறார், "நீங்கள் என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்", மற்றொரு ஸ்லோகாவில் அவர் "உங்கள் தாமரை பாதங்களின் தூசியாக என்னை சேர்த்து கொள்ளுங்கள்." என்ன வித்தியாசம் உள்ளது? எந்த வித்தியாசமும் இல்லை.