TA/Prabhupada 0711 - எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள், மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள்



Speech Excerpt -- Mayapur, January 15, 1976

பிரபுபாதர்: ...ஆக இதில் மிக சிறந்த மகிழ்ச்சி என்னவென்றால் பக்திவினோத தாகுரின் ஆசை. அதாவது ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் எல்லோரும் சேர்ந்து, மகிழ்ச்சியாக ஆடி , "கௌர ஹரி." என பாடவேண்டும். ஆக இந்த கோவில், மாயாபுர சந்திரோதய கோவில், தைவீக ஐக்கிய நாடுகள் அடைவதற்காக உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு எதில் தோல்வியடைந்ததோ, அது இங்கே சாதிக்கப்படும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் பரிந்துரைக்கப்பட்ட முறையால், 'ப்ருதிவீதெ ஆசே யத நகராதி க்ராம ஸர்வத்ர ப்ரசார ஹய்பே மோர நாம (சைதன்ய பாகவத் அந்த்ய-கண்ட 4.126) நீங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்து வந்து இந்த கோயிலில் சேர்ந்து வாழ்கிறீர்கள். ஆக இந்த சிறுவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக, சிறுவர்களை பார்க்கும் போது எல்லா தேசத்தினர் மற்றும் இந்தியர்கள், வங்காளத்தினர், எல்லோரும் ஒற்றுமையாக தன் உடல் உணர்வை மறந்துவிட்டு இருக்கிறார்கள். எல்லாரும் வாழ்வின் ஜட உணர்வை மறந்துவிடுகிறார்கள், இதுவே இந்த இயக்கத்தின் மிகச்சிறந்த சாதனையாகும். யாரும் இங்கே நான் "ஐரோப்பியன்," "அமெரிக்கன்," "இந்தியன்," "இந்து," "முஸ்லிம்," "கிரித்துவன்" என்று நினைப்பதில்லை. அவர்கள் இந்த அடையாளங்களை மறந்து, ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதிலேயே மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆக நீங்கள் எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள். மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள். பிறகு மாயாபுரத்தின் எஜமானர், சைதன்ய மஹாபிரபு, தங்களால் மிகவும் மகிழ்வடைவார், பிறகு இறுதியில் நீங்கள் முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு செல்வீர்கள். மிக நன்றி. (முற்றும்)