TA/Prabhupada 0739 – நாம் சைதன்யருக்கு ஒரு அருமையான கோயில் கட்ட முயற்சிக்கவேண்டும்
Lecture on CC Adi-lila 1.6 -- Mayapur, March 30, 1975
க்ருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமீ இயற்றிய சைதன்யா-சரிதாம்ருதா, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றியதற்கான காரணத்தை விவரிக்கிறது காரணம், "ராதாராணியிடம் என்ன இருக்கிறது?" என்று கிருஷ்ணர் தெரிந்து கொள்ள விரும்பினார் அவர் மதன்-மோகனா. கிருஷ்ணரின் மற்றொரு பெயர் ... அவர் கவர்ச்சிகரமானவர் கிருஷ்ணர் அனைவருக்கும் கவர்ச்சியானவராக இருக்கிறார்; அவர் மன்மதனையும் ஈர்க்கிறார். பொருள் உலகில் மன்மதன் கவர்ச்சிகரமானவர், அவர் மதன்-மோகனா. ராதாராணி மதன்-மோகன-மோஹினி, அதாவது அவள் மதன்-மோகனை கூட ஈர்க்கிறாள் எனவே கிருஷ்ணர் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார், "ஈர்க்கும் வகையில் ராதாராணியிடம் என்ன இருக்கிறது?" நான் முழு பிரபஞ்சத்தையும் ஈர்க்கிறேன், அவள் என்னை ஈர்க்கிறாள். "
எனவே இந்த உணர்வோடு, ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு, தத்-பாவாட்ய: லோபாத் (CC Adi 1.6) இவை அனைத்தும் ஆழ்நிலை அன்பான விவகாரங்கள். லோபாத் : புரிந்து கொள்ள பேராசையாக இருக்கிறது தத்-பாவாத்ய: ஸமஜனி: "அவர் தாய் ஷசீயின் வயிற்றில் தோன்றினார் ஸமஜனி ஷசீ-கர்ப-ஸிந்தௌ ஹரீந்து: (CC Adi 1.6). கடவுளின் உயர்ந்த ஆளுமையான ஹரி சந்திரனைப் போன்றவர் எனவே இந்த கோயிலை நாம் நிறுவியுள்ளோம், மாயாபூர்-சந்த்ரோதயா. எனவே இந்த யோசனை, ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சந்திரனைப் போன்றவர் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இந்த மாயாபூரில் தோன்றினார்; எனவே அவர் இங்கே "சந்திரன்" என்று கூறப்படுகிறார் எனவே நாங்கள் சந்திரா, மாயாபூர்-சந்திரா என்று சொல்கிறோம் இப்போது, ஸ்ரீ மாயாபூர்-சந்திரா உயர்ந்து வருவதால் உயர்கிறது. உயர்கிறது என்றால் உலகெங்கிலும் நிலவொளியை பிரகாசிக்கிறார் இது தான் கருத்து - நிலவொளி ஷ்ரேய:-கைரவ சந்த்ரிகா-விதரணம் ஷ்ரேய:-கைரவ. சைதன்ய மஹாபிரபு தனிப்பட்ட முறையில் கூறினார் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவை. உங்கள் அறையில் வைத்து , பண லாபத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது தேவையில்லை. இது தேவையில்லை
ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு மேலும் மேலும் உயர நீங்கள் அனுமதிக்க வேண்டும் அப்போது தான் சூரியன், நிலவொளி, உலகம் முழுவதும் பிரகாசிக்கும் அது விரும்பப்படுகிறது. எனவே இந்த கோயில் அமைந்துள்ளது ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவுக்கு மிக அருமையான கோவிலைக் கட்ட முயற்சிப்போம் இன்று காலை நாங்கள் இதை நினைத்துக்கொண்டிருந்தோம். எனவே இந்த இடத்திலிருந்து, இந்த சந்திரன், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு பிரகாசிப்பார் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் ஹரே கிருஷ்ணா இயக்கம் பரம் விஜாயதே ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்தனம் இதை ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு அவர்களே பேசுகிறார் சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் (சைச அந்த்ய 20.12) வித்யா-வதூ-ஜீவனம். இது உண்மையான அறிவொளி உலகம் முழுவதும் உள்ள மக்கள், அவர்கள் இருளில் இருக்கிறார்கள். நிலவொளி அவர்களுக்கு அறிவூட்டும். அவர்கள் அனைவரும் முட்டாள்கள், மூடஹா. அது பகவத்-கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளது:
- ந மாம் துஷ்க்ருதினோ மூடா:
- ப்ரபத்யந்தே நராதமா:
- மாயயாபஹ்ருத-ஜ்ஞானா
- ஆஸுரி-பாவம் ஆஷ்ரித:
தற்போதைய நேரத்தில் இந்த முட்டாள்கள் ... அவர்கள் கடந்து செல்வது மிகவும் வருந்தத்தக்கது மிகவும் கற்ற அறிஞர், தத்துவவாதி, அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் போன்றவர்களாக இருந்தாலும் ஆனால் பகவத்-கீதையில் கிருஷ்ணரின் கூற்றுப்படி, அவர்கள் அனைவரும் முட்டாள்கள் மற்றும் அயோகியர்கள் ஏன்? ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ர ..அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை இந்த பிரபஞ்சத்தில் இந்த கிரகத்தின் மீது கிருஷ்ணர் வந்தார், தோன்றினார் "நீங்கள் சரணடையுங்கள்" என்று கோர ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் (ப.கீ 18.66). ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவே ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு, கிருஷ்ணரின் பக்தராக அவர் கிருஷ்ணர்
- நமோ மஹா-வதான்யாய
- க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே
- க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய-
- நாம்னே...
அவர் கிருஷ்ணர். கிருஷ்ணர் மிகவும் கனிவானவர் . முதலாவதாக அவர் கடவுளின் உயர்ந்த ஆளுமையாக வந்தார் "நீங்கள் சரணடையுங்கள்" என்று கடவுளின் கட்டளையாக அவர் கோரினார். ஆனால் மக்கள் அதை செய்யவில்லை எனவே கிருஷ்ணர் மீண்டும் பக்தர் உருவில் வந்தார், க்ருஷ்ண-சைதன்ய-நாம்னே, இப்போது அவர் உங்களுக்கு கிருஷ்ணரை மட்டுமல்ல, கிருஷ்ணரின் அன்பையும் இலவசமாக வழங்க தயாராக இருக்கிறார் அதை எடுத்து உலகம் முழுவதும் பரப்பவும். அவ்வளவுதான்.
மிக்க நன்றி.
பக்தர்கள்: ஜெய ஸ்ரீல ப்ரபுபாத (முடிவு)