TA/Prabhupada 0745 – நீங்கள் நம்புகிறீரோ இல்லையோ, கிருஷ்ணரின் வார்த்தைகள் பொய்யாகாது



Lecture on SB 7.9.54 -- Vrndavana, April 9, 1976

இப்போது, ​​நீங்கள் தற்போதைய தருணத்தில் முழு உலகையும் பற்றி கவனித்தால் அவர்கள் ஆத்மாவை நம்பவில்லை ஆத்மாவை ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவதை அவர்கள் நம்பவில்லை. பெரிய, பெரிய பேராசிரியர்கள், பெரிய, பெரிய கற்ற அறிஞர்கள் கூட நம்பவில்லை ஆகவே, உலகின் தற்போதைய மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் - எல்லோரும் அயோக்கியர்கள். அனைத்து பாதகர்களாலும் எளிய உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது அவர்கள் சிறந்த அறிஞர்கள், சிறந்த விஞ்ஞானிகள், சிறந்த அரசியல்வாதிகள் மற்றும் பலராக தெரிகிறார்கள் ஆனால் எல்லோரும் அயோக்கியர்கள். அவ்வளவுதான். இதுதான் முடிவு கிருஷ்ணர் சொல்கிறார்.....தீரஸ் தத்ர ந முஹ்ய... (BG 2.13) ஆத்மா ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறுவது, கிருஷ்ணர் சொல்கிறார், தீரஸ் தத்ர ந முஹ்யதி' இங்கேயும் இதே விஷயம், ப்ரீணந்தி ஹ்யத மாம் தீரா: ஸர்வ-பாவேன ஸாதவ (SB 7.9.54):. ஆன்மீகம் ... ஆவி என்றால் என்ன என்று உங்களுக்கு புரியவில்லை என்றால், ஆன்மீக வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கையின் முன்னேற்றம் பற்றிய கேள்வி எங்கே? எந்த கேள்வியும் இல்லை. இது ஆன்மீக வாழ்விற்கான ஆரம்பம் "நான் இந்த உடல் அல்ல, நான் ஆவி ஆன்மா." என்னும் கல்வி அஹம் ப்ரஹ்மாஸ்மி. அவர்கள் புரிந்து

கொள்ள முடியும் ஆகவே, நாம் உண்மையிலேயே கிருஷ்ணா பக்தியுடன் இருந்தால், கிருஷ்ணரை நம்பினால் நாம் நம்ப வேண்டும். நீங்கள் நம்புகிறீர்கள் அல்லது நம்பவில்லை, கிருஷ்ணரின் வார்த்தைகள் பொய்யாக இருக்க முடியாது. அது ஒரு உண்மை. நீங்கள் அயோக்கியனாக இருக்கலாம், நீங்கள் நம்பவில்லை என்றாலும் ஆனால் 'தீரா' - அவர்கள் நம்புகிறார்கள் அவர்கள் நம்புகிறார்கள். உங்களுக்கு கிருஷ்ணர் மீது பக்தி இருந்தால் அன்பு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இல்லை. இதுதான் உண்மை. எனவே ஒருவர் .............. இது தான் வாழ்க்கையின் இறுதி குறிக்கோள், ஒருவர் 'தீரா' ஆக வேண்டும், இங்கும் அங்கும் தாவும் பூனைகள் மற்றும் நாய்களைப் போல அல்ல. அது மனித வாழ்க்கை அல்ல. அது நாய் வாழ்க்கை

யஸ்யாத்மா-புத்தி: குணபே த்ரி-தாதுகே
ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம-இஜ்ய-தீ:
யத்-தீர்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசித்
ஜனேஷு அபிஜ்ஞேஷு ஸ ஏவ கோ-கர:
(ஸ்ரீ. பா 10.84.13)

இந்த, யஸ்யா, பிரிவு மக்களின் வாழ்க்கை புரிதல் என்பது உடல் சார்ந்த கருத்தாகும் "நான் உடல்." "நான் ஒரு இந்து," "நான் முஸ்லீம்," "நான் ப்ராஹ்மணா," நான் இந்தியன், "" நான் அமெரிக்கன், "" நான் ... " முழு உலகமும் இதை கொண்டு சண்டை இட்டு கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் பித்துப்பிடித்தவர்கள், 'தீரா' அல்ல. இதுதான் நவீன நாகரிகம். யஸ்யாத்ம-புத்தி: குணபே இது எலும்புகள், சதை மற்றும் இரத்தத்தின் ஒரு பை அவர்கள் தங்களை இந்த உடல் தான் என்று நினைக்கிறார்கள் நீங்கள் இந்த உடலாக இருந்தால் உயிருள்ள சக்தி எங்கிருந்து வருகிறது? ஏனென்றால், உயிர் இல்லாமல் போனவுடன், உடல் பயனற்றது, ஒரு ஜட பொருள். எனவே இந்த ஜட பொருள் உயிரைக் கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் அவை 'தீரா' அல்ல. அனைத்து அயோக்கியர்களாலும் புரிந்து கொள்ள முடியாது சொல் மிகவும் முக்கியமானது. தீரஸ் தத்ர ந முஹ்யதி. அயோக்கியர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? எனவே நமது கிருஷ்ணா பக்தி இயக்கம் என்பது அயோக்கியர்களுக்கு கல்வி கற்பிப்பது, அவ்வளவுதான். எளிய விஷயம். அனைவருக்கும் சவால் விடுகிறோம் "நீங்கள் மிக மிக அயோக்கியர்." கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். "இது எங்கள் சவால். முன் வாருங்கள் நாங்கள் சவால் விடுகிறோம், "நீங்கள் மிக மிக அயோக்கியர்" நீங்கள் கிருஷ்ணா பக்தி கல்வியை பெற்று உங்கள் வாழ்க்கையை முழுமையாக்குங்கள்." இது கிருஷ்ணா பக்தி. யாரும் 'தீரா' இல்லை.