TA/Prabhupada 0747 – “கிருஷ்ணா, நீ விரும்பினால் என்னை காப்பாற்று” என்று திரௌபதி வேண்டினார்



Lecture on SB 1.8.24 -- Los Angeles, April 16, 1973

எனவே திரௌபதியின் சுயம்வரத்தில் கர்ணன் அவமதிக்கப்பட்டார் ஸ்வயம்வரத்தில்…... ஸ்வயம்வரம் என்றால் பெரிய இளவரசி, மிகவும் தகுதி வாய்ந்த இளவரசி, அவர்கள் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பார்கள். உங்கள் நாட்டைப் போலவே, கணவனைத் தேர்ந்தெடுப்பது பெண்ணுக்கு விருப்பமானபடி வழங்கப்படுகிறது. இது சாதாரணமானவர்களுக்கு மிகவும் நல்லது அல்ல, ஆனால் அசாதாரணமானவர்கள், அதிக தகுதி வாய்ந்தவர், தேர்ந்தெடுப்பது எப்படி என்று தெரிந்த ஒருவர், அத்தகைய பெண்ணுக்கு தனது கணவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி வழங்கப்பட்டது, மிகவும் கடுமையான நிபந்தனையின் கீழ். திரௌபதியின் தந்தை நிபந்தனை செய்ததைப் போல உட்கூரையில் ஒரு மீன் இருந்தது, ஒருவர் மீனின் கண்ணைத் துளைக்க வேண்டும், நேரடியாக பார்த்து அல்ல ஆனால் கீழே தண்ணீரில் நிழலைக் கண்டு, எனவே நிறைய இளவரசர்கள் இருந்தனர். அத்தகைய அறிவிப்பு வந்தவுடன், அனைத்து இளவரசர்களும் போட்டியிட வருகிறார்கள். அது க்ஷத்ரிய கொள்கை.

எனவே திரௌபதியின் சுயம்வரத்தில் அந்த சபையில் கர்ணனும் இருந்தார். திரௌபதிக்குத் தெரியும் ... அர்ஜுனனை கணவனாக ஏற்றுக்கொள்வதே திரௌபதியின் உண்மையான நோக்கம். ஆனால் கர்ணன் அங்கே இருப்பதை அவள் அறிந்தாள். கர்ணன் போட்டியிட்டால், அர்ஜுனனால் வெற்றிபெற முடியாது. எனவே, "இந்த போட்டியில், க்ஷத்ரியர்களைத் தவிர, யாரும் போட்டியிட முடியாது" என்று கூறினார். அதாவது, அந்த நேரத்தில் கர்ணன், அவர் ஒரு க்ஷத்ரியர் என்று அறியப்படவில்லை. அவர் குந்திக்கு திருமணத்திற்கு முன் பிறந்த மகன் எனவே மக்களுக்குத் தெரியாது. அது ரகசியமாக இருந்தது எனவே கர்ணன் ஒரு தச்சரால் வளர்க்கப்பட்டார். எனவே அவர் சூத்திரர் என்று அழைக்கப்பட்டார். எனவே திரௌபதி இதைப் பயன்படுத்திக் கொண்டு சொன்னார் "எந்த தச்சரும் இங்கு வந்து போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனக்கு அது தேவையில்லை." எனவே கர்ணன் அனுமதிக்கப்படவில்லை. எனவே கர்ணன் அதை மிகுந்த அவமானமாக எடுத்துக் கொண்டார்.

இப்போது, ​​ஆட்டத்தில் திரௌபதி தோற்றபோது, ​​அவர் முதலில் முன்னோக்கி இருந்தார். அவர் துரியோதனனின் சிறந்த நண்பர் இப்போது நாம் திரௌபதியின் நிர்வாண அழகைக் காண விரும்புகிறோம்." எனவே கூட்டத்தில் வயதானவர்கள் இருந்தனர் த்ருதராஷ்ட்ரர் இருந்தார். பீஷ்மர் இருந்தார், த்ரோணாசார்யர். இருந்தாலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை "ஓ, இது என்ன, நீங்கள் இந்த சபையில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கப் போகிறீர்களா?" அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே அஸத்-ஸபாயா: "கலாச்சாரமற்ற மனிதர்களின் கூட்டம்." கலாச்சாரமற்ற மனிதன் ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்க்க விரும்புகிறான். ஆனால் அது இப்போதெல்லாம் ஒரு நடப்பு வழக்கு ஆகிவிட்டது, நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு பெண் …. கணவனைத் தவிர வேறு யார் முன்னும் நிர்வாணமாக இருக்கக்கூடாது இது வேத கலாச்சாரம். ஆனால் இந்த அயோக்கியர்கள் அந்த பெரிய சபையில் திரௌபதியை நிர்வாணமாக பார்க்க விரும்பியதால், எனவே அவர்கள் அனைவரும் அஸத். சத் என்றால் மென்மையானது, அஸத் என்றால் முரட்டுத்தனம் என்று பொருள். எனவே அஸத் சபாயா, "அந்த முரட்டுத்தனமான கூட்டத்தில், நீங்கள் காப்பாற்றினீர்கள்" - கிருஷ்ணர் காப்பாற்றினார் திரௌபதி நிர்வாணமாக்க அவளது புடவை விலக்கப்பட்டது புடவை முடிவுறாதவாறு கிருஷ்ணர் புடவை வழங்கினார்

எனவே அவர்கள் அவளை நிர்வாணமாக்க முயற்சிப்பதில் சோர்வடைந்தனர். (சிரிப்பு) அவள் ஒருபோதும் நிர்வாணமாகவில்லை, துணி குவியல்கள் அடுக்கி வைக்கப்பட்டன "இது சாத்தியமற்றது" என்று அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. திரௌபதியும் முதலில் அவளுடைய துணியைக் காப்பாற்ற முயன்றாள் அவள் என்ன செய்ய முடியும்? அவள் பெண், அவர்கள் இரண்டு ஆண்கள் கர்ணனும் துஷாசனனும் அவளை நிர்வாணமாக்க முயன்றனர். எனவே அவள் அழுகிறாள், "என் மானத்தை காப்பாற்றுங்கள்" என்று கிருஷ்ணரிடம் ஜெபித்தாள். ஆனால் அவள் காப்பாற்றி கொள்ள முயன்றாள். "என்னை, என் மானத்தை இந்த வழியில் காப்பாற்றுவது சாத்தியமில்லை" என்று அவள் நினைத்தபோது பின்னர் அவள் தடுப்பதை விட்டு விட்டு, அவள் வெறுமனே கைகளை எழுப்பி ஜெபித்தாள் "கிருஷ்ணா, நீங்கள் விரும்பினால், காப்பாற்ற முடியும்."

எனவே இதுதான் நிலை. நாம் நம்மைக் காப்பாற்ற முயற்சிக்கும் வரை, அது மிகவும் நல்லதல்ல. நீங்கள் வெறுமனே கிருஷ்ணரை சார்ந்து இருந்தால், "கிருஷ்ணா, நீங்கள் என்னைக் காப்பாற்றினால், அது சரி. இல்லையெனில் நீங்கள் விரும்பியபடி என்னைக் கொல்லுங்கள். " பாருங்கள். மாரோபி ராகோபி—ஜோ இச்சா தோஹாரா பக்திவிநோத டாகுர, "நான் உங்களிடம் சரணடைகிறேன்" என்று கூறுகிறார். மானஸ, தேஹோ, கேஹோ, ஜோ கிசு மோர், "என் அன்பான ஆண்டவரே, என்னிடம் எது இருந்தாலும், என் உடைமை ... என்னிடம் என்ன இருக்கிறது? எனக்கு இந்த உடல் கிடைத்துள்ளது. எனக்கு மனம் உள்ளது எனக்கு ஒரு சிறிய வீடு கிடைத்துள்ளது, என் மனைவி, என் குழந்தைகள். இது என் உடைமை. " மானஸ, தேஹோ, கேஹோ, ஜோ கிசு மோர். "எனவே என்னிடம் எது இருந்தாலும்-இந்த உடல், இந்த மனம், இந்த மனைவி, இந்த குழந்தைகள், இந்த வீடு, எல்லாவற்றையும் நான் உங்களிடம் சமர்ப்பித்து சரணடைகிறேன் மானஸ, தேஹோ, கேஹோ, ஜோ கிசு மோர், அர்பிலுங் துவா பதே, நந்த-கிஷோர். கிருஷ்ணர் நந்த-கிஷோரா என்று அழைக்கப்படுகிறார். எனவே சரணடைதல் வேண்டும், தயக்கம் இல்லை, முழுமையாக சரணடைதல், அகிஞ்சன.