TA/Prabhupada 0787 - பகவத்கீதை சண்டையையும் வன்முறையையும் வலியுறுத்துவதாக மக்கள் தவறாக புரிந்துக்கொண்டுள



Lecture on BG 1.44 -- London, July 31, 1973

பிரதியும்னா: மொழிபெயர்ப்பு: "ஐயோ, நாம் பெரிதும் பாவச் செயல்களைச் செய்யத் தயாராகி வருவது எவ்வளவு விசித்திரமானது, மகிழ்ச்சியை அனுபவிக்கும் விருப்பத்தால் இவ்வாறு செயல்படுகிறோம்."

பிரபுபாதர்::

அஹோ பத மஹத்-பாபம்
கர்தும் வ்யவஸிதா வயம்
யத் ராஜ்ய-ஸுக-லோபேன
ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா:
(ப.கீ 1.44)

எனவே சில நேரங்களில் அர்ஜுனன் குற்றம் சாட்டப்படுகிறான், பகவத் கீதையும் குற்றம் சாட்டப்படுகிறது, அதாவது "வன்முறை உள்ளது. வன்முறை உள்ளது. பகவத் கீதை வன்முறை நிறைந்தது." ஆம், அது வன்முறை நிறைந்தது. போர்க்களம். ஆனால் இங்கே, வைஷ்ணவ சிந்தனை... அர்ஜுனன் தனது ராஜ்ய-சுகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக நினைக்கிறான். யத் ராஜ்ய-ஸுக-லோபேன . லோபேன. இது அர்ஜுனனின் திருப்திக்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அதனால் அவர் ராஜ்யத்தையும் அதன் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும் என்றும். உண்மையில், அது அவ்வாறு இல்லை. இது அர்ஜுனனின் திருப்திக்காக அல்ல, தன்னுடைய திருப்திக்காக கிருஷ்ணரால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே சாதாரண வேலைக்கும் பக்தி சேவைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பக்தி சேவை மற்றும் சாதாரண வேலை, அவை கிட்டத்தட்ட சமமாக தெரியும். நாங்கள் இந்த வீட்டில் வசிப்பது போல. அக்கம் பக்கத்தினர், அவர்கள் நினைக்கலாம், "சிலர் இங்கு வசிக்கிறார்கள், ஜெபிக்கிறார்கள், நடனம் ஆடுகிறார்கள். நாமும் நடனமாடுகிறோம். நாமும் சில சமயங்களில் பாடுகிறோம். நாமும் சாப்பிடுகிறோம், அவர்களும் சாப்பிடுகிறார்கள். பிறகு என்ன வித்தியாசம்? " "பக்தி சேவைக்கும் சாதாரண வேலைக்கும் என்ன வித்தியாசம்?" என்று அவர்கள் நினைக்கலாம். இது கிட்டத்தட்ட சமமாக தெரிகிறது. எனவே பகவத்-கீதை சாதாரண போர், வன்முறை என்று மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. இது கிருஷ்ணரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏனெனில், அவருடைய பணியை நிறைவேற்றி கொள்வதற்காக. அவர் மேற்கொண்டபணி பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதம் (ப.கீ 4.8) அது கிருஷ்ணரின் திருப்தி, அர்ஜுனனின் திருப்தி அல்ல, வேறு யாருடைய திருப்தியும் அல்ல. அது அவருடைய திட்டம். அவர் வருகிறார், அவர் இந்த கிரகத்தில், இந்த பிரபஞ்சத்தில் இறங்குகிறார், மத வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நிலைநாட்டவும் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை - மனித வாழ்க்கையை எதிர்ப்பவர்களை கொன்று வெல்வதற்கு. அதுவே அவருடைய பணி, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள். பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதம் (ப.கீ 4.8).

ஸ்வஜனம்.

அஹோ பத மஹத்-பாபம்
கர்தும் வ்யவஸிதா வயம்
யத் ராஜ்ய-ஸுக-லோபேன
ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா:
(ப.கீ 1.44)

ஸ்வஜனம் - உறவினர்கள் என்று பொருள். உறவினர்கள் - உயர்ந்த அர்த்தத்தில் பொருள் கொள்ள வேண்டும், என் சகோதரர் அல்லது என் சகோதரி அல்லது என் தந்தை அல்லது மாமா மட்டுமே. என்று அர்த்தமல்ல. இல்லை. ஸ்வஜனம் என்றால் அனைத்து உயிரினங்களும். ஏனென்றால் கிருஷ்ண பக்தியை பெறாத ஒருவர், சாதாரண, பௌதிக உணர்வுடன், அவர் ஸ்வஜனம் அடிப்படையில் சிந்திக்க முடியாது. "என் உறவினர்கள், அனைத்து உயிரினங்களும்" என்று அவர் நினைக்க முடியாது. உண்மையில், எல்லோரும் நம் ஸ்வஜனம், ஏனென்றால் கடவுள் தந்தையாக இருந்தால், கிருஷ்ணர் கூறுவது போல, அஹம் பீஜ-ப்ரத: பிதா, அவர் மிக உயர்ந்த தந்தை என்றால் ... அவர் கூறுவது மட்டுமல்ல, குறைந்தபட்சம், எந்தவொரு நல்ல மத அமைப்பும் கூறுகிறது, "கடவுள் தான் அசல் தந்தை." அது ஒரு உண்மை. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே (ப. கீ. 10.8) எல்லாம் அவரிடமிருந்து வந்தவை. அவர்தான் உயர்ந்த தந்தை. எனவே கிருஷ்ணர் மிக உயர்ந்த தந்தை என்றால், அவர் அனைவருக்கும் தந்தை. ஸர்வ-யோனிஷு கௌந்தேய (ப.கீ 14.4). எல்லா உயிரினங்களிலும், எல்லா வகையான உயிர்களிலும், அவர்கள் அனைவரும் நம் ஸ்வஜனா, உறவினர்கள். அது எப்படி இருக்க முடியாது? ஏனெனில் கிருஷ்ணர்அசல் தந்தை. இது கிருஷ்ண பக்தி. எனவே கிருஷ்ணரின் ஒரு பக்தர் எந்தவொரு உயிரினத்திற்கும் ஒரு சிறிய தீங்கு கூட செய்வதில்லை. அது தான் கிருஷ்ணபக்தி.