TA/Prabhupada 0804 - பிரச்சாரம் செய்வது மிக முக்கியமானது என்பதை நமது குருவிடமிருந்து கற்றிருக்கிறோம்



Lecture on SB 1.7.19 -- Vrndavana, September 16, 1976

பிரபுபாதர்: ஆக மன துமி கிசேர வைஷ்ணவ. அவர் கூறுகிறார், "எப்படிபட்ட அயோக்கிய வைஷ்ணவ, நீ?" நிர்ஜனேர கரே ப்ரதிஷ்டார தரே: "வெறுமனே கீழ்த்தரமான புகழுக்காக நீ ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ்கிறாய்." தவ ஹரி-நாம கேவல கைதவ: "நீ ஜெபிக்கும் ஹரே கிருஷ்ண மந்திரம் வெறுமனே ஏமாற்றுதலாகும்." அவர் கூறி இருக்கிறார் அதாவது. ஒருவர் தயாராக இருக்க வேண்டும், மிகுந்த ஆர்வத்துடன். மேலும் அது சைதன்ய மஹாபிரபுவின் கட்டளையும் கூட. நீ "உச்சாடனம் செய்." என்று சைதன்ய மஹாபிரபு கூறவில்லை. அவர் ஜெபித்தலை கண்டிப்பாக கொடுத்தார், ஆனால்அவருடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர் கூறினார், அதாவது "நீங்கள் ஒவ்வொருவரும் குருவாக வேண்டும்." ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார(அ) ஏஇ தேஶ (சை.ச.மத்திய 7.128). மேலும் காப்பாற்று, போதனை அளித்து, கிருஷ்ணர் யார் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளட்டும்.

ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார(அ) ஏஇ தேஶ
யாரே தேக, தாரே கஹ (அ)க்ருʼஷ்ண(அ)-உபதேஶ
(சை.ச.மத்திய 7.128).

ப்ருʼதிவீதே ஆசே யத நகராதி. அது அவருடைய இயக்கம். "சிறந்த வைஷ்ணவனாக மாறி, மேலும் அமர்ந்து போலியாய் பின்பற்றுவது." இது அதுவல்ல. இவை அனைத்தும் அயோக்கியத்தனம். எனவே இதனை பின்பற்றாதீர்கள். குறைந்தபட்ஷம் இவ்வழியில் உங்களுக்கு நாங்கள் அறிவுரை கூற முடியாது. எங்கள் குரு மஹாராஜிடமிருந்து, போதனை மிக மிக முக்கியமானது என்று கற்றுக் கொண்டோம், மேலும் ஒருவர் உண்மையிலேயே ஒரு அனுபவமிக்க போதகராக இருந்தால், பிறகு அவர் ஹரே கிருஷ்ண மந்திரத்தை குற்றம் இல்லாமல் ஜெபிக்க திறமை அடைவார். அதற்கு முன்பு, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பது, நீங்கள் குற்றமில்லாமல் ஜெபிக்க பயிற்சி செய்யலாம் .... மேலும் பெரிய வைஷ்ணவராக காட்டிக் கொள்வதை தவிர்க்கலாம், அது தேவை இல்லாதது.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாதர்.