TA/Prabhupada 0807 - பிரம்மாஸ்திரம் மந்திரத்தால் செய்யப்பட்டது - அது சூட்சுமமான முறை
Lecture on SB 1.7.26 -- Vrndavana, September 23, 1976
நாம் பிரம்மாஸ்திரத்தை பற்றி விவாதித்தோம். இது கிட்டத்தட்ட நம்முடைய நவீன அணு ஆயுதங்கள் அல்லது குண்டுகளுக்கு ஒத்தது. ஆனால்... இவை வேதியல் பொருட்களால் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தப் பிரம்மாஸ்திரம் மந்திரத்தால் செய்யப்படுவது. இது சூட்சுமமான வழிமுறை. நவீன விஞ்ஞானம், சூட்சுமமான இருப்பு நிலைையை எட்டவில்லை. எனவேதான், அவர்களால் ஒரு ஆத்மா எப்படி உடல் விட்டு உடல் மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. நவீன விஞ்ஞானம், எந்த அறிவும் இல்லாதது. குறைபாடுடைய அறிவு. அவர்கள் இந்த ஜட உடலைப் பார்க்கிறார்கள், ஆனால் சூட்சும உடலைப் பற்றி அவர்களுக்கு எந்த ஞானமும் இல்லை. ஆனால் சூட்சும உடல் உள்ளது. உதாரணமாக, என்னால் உங்கள் மனதை பார்க்கமுடிவதில்லை, ஆனால் உங்களுக்கு மனம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடைய மனதை பார்ப்பதில்லை ஆனால் எனக்கு மனம் இருப்பது உங்களுக்குத் தெரியும். மனம், புத்தி மற்றும் அகங்காரம். என்னுடைய உணர்வு, "நான்" என்னும் அடையாளம் உள்ளது. அதுதான் அகங்காரம். மேலும் என்னுடைய புத்தி, என்னுடைய மனம், இவற்றை உங்களால் பார்க்க முடியாது. என்னாலும் பார்க்க முடியாது. எனவே எப்படி இந்த மனம், புத்தி மற்றும் நான் என்னும் அடையாளம் அல்லது அகங்காரம், ஆத்மாவை ஒரு உடலிலிருந்து மற்றோர் உடலுக்குச் சுமந்து செல்கிறது என்பதை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களால் அதனைப் பார்க்க முடியாது. ஸ்தூல உடல் முடிந்தால் எல்லாமே முடிந்துவிடுவதை அவர்கள் பார்க்கிறார்கள். ஸ்தூல உடல் சாம்பலாக எரிக்கப்படுகிறது, எனவே அவர்கள் எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். ப⁴ஸ்மீ-பூ⁴தஸ்ய தே³ஹஸ்ய குத꞉ புனர் ஆக³மனோ ப⁴வேத்³ (சார்வாக முனி). நாத்திக வர்க்கம், அவர்கள் அப்படி நினைப்பார்கள். குறைபாடுடைய அறிவினால், அவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். "உடல் சாம்பலாக எரிக்கப்பட்டு விட்டதை நான் பார்க்கிறேன். பிறகு ஆத்மா எங்கே?" "எனவே ஆத்மா இல்லை, கடவுள் இல்லை, இதெல்லாம் கற்பனை தான்." ஆனால் அது உண்மை அல்ல, அது உண்மையல்ல. உண்மை என்னவெனில், ஸ்தூல உடல் முடிந்துவிட்டது, ஆனால் சூட்சும உடல் இருக்கிறது. மனோ பு³த்³தி⁴ர் அஹங்கார꞉. பூ⁴மிர் ஆபோ (அ)னலோ வாயு꞉ க²ம்ʼ மனோ பு³த்³தி⁴ர் ஏவ ச (பகவத் கீதை 7.4). அபரேயம் இதஸ் து வித்³தி⁴ மே ப்ரக்ருʼதிம்ʼ பராம் (BG 7.5). எனவே இந்தச் சூட்சும விஷயங்களை, சூட்சும பொருட்களின் செயல் மற்றும் விளைவு... மனம் கூடப் பௌதீகம் தான், ஆனால் சூட்சமமான பௌதீகம், மிகவும் நுட்பமானது. உதாரணத்திற்கு, ஆகாயம். ஆகாயம் கூடப் பௌதீகம் தான். ஆனால் அது மிகவும் நுட்பமானது, சூட்சமமானது. ஆகாயத்தை விட நுட்பமானது மனம், மனதை விட நுட்பமானது புத்தி. மேலும் புத்தியை விட நுட்பமானது, என்னுடைய அகங்காரம், "நான்" எனும் உணர்வு.
எனவே அவர்களுக்கு இதனைப் பற்றிய அறிவு இல்லை. எனவேதான்... அவர்களால் ஆயுதங்களையும், அணுகுண்டுகளையும் ஸ்தூல பொருட்களை வைத்துத் தயாரிக்க முடிகிறது. பூ⁴மிர் ஆபோ (அ)னலோ— இந்த வேதியல் பொருட்களெல்லாம், இவையெல்லாம் ஸ்தூலமானது. ஆனால் பிரம்மாஸ்திரம், ஸ்தூலமானதல்ல. இதுவும் பௌதிகமானதுதான், ஆனால் சூட்சும விஷயங்களான மனம், புத்தி மற்றும் அகங்காரத்தினால் ஆனது. எனவே, அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்கிறார் "இந்த மிகுந்த வெப்பம் எங்கிருந்து வருகிறது, எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை." தேஜ꞉ பரம-தா³ருணம் என்று கூறப்பட்டிருக்கிறது (SB 1.7.26). அந்த வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு, அதிகமாக இருந்தது. எனவே நாம் அதிகாரியைக் கேட்க வேண்டும். கிருஷ்ணர் தான் பரம அதிகாரி. எனவே அர்ஜுனன் அவரிடம் கேட்கிறார், கிம் இத³ம்ʼ ஸ்வித் குதோ வேதி: "எனதருமை கிருஷ்ணரே, இந்த வெப்பம் எங்கிருந்து வருகிறது?" கிம் இத³ம். தே³வ-தே³வ. ஏன் அவர் கிருஷ்ணரிடம் கேட்கிறார்? ஏனெனில் கிருஷ்ணர் தேவ-தேவ.