TA/Prabhupada 0811 -எந்த வகையிலாவது நீங்கள் கிருஷ்ணரோடு இணைந்திருக்கவேண்டும் - இதுவே ரூபகோஸ்வாமியின் அறி



761008 - Lecture SB 01.07.51-52 - Vrndavana

ஆகவே, கிருஷ்ணர் வந்துவிட்டதால்... நினைக்க வேண்டாம், விருந்தாவனத்தில் ஒரு இடையர் சிறுவனாகத் தோன்றினார் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம் ... நிச்சயமாக, விருந்தாவன-வாசிகளுக்கு கிருஷ்ணர் என்றால் என்ன என்று தெரியாது. அவர்கள் கிராமவாசிகள். அவர்களுக்குத் தெரியாது. ஆனால் கிருஷ்ணரை விட யார் மீதும் அதிகமாக அவர்கள் பற்று கொள்ள வில்லை. அதுவே அவர்களின் தகுதி. அவர்களுக்கு விஷ்ணுவை கூடத் தெரியாது. கோபியர்கள் விஷ்ணு மூர்த்தியைப் பார்த்தபோது - கிருஷ்ணர் விஷ்ணு ரூபத்தை எடுத்துக் கொண்டார், அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் - அவர்கள், "ஓ, இதோ விஷ்ணு. சரி, நமஸ்காரம்." அவர்கள் விஷ்ணுவிடன் கூட ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் கிருஷ்ணருடன் ஆர்வமாக இருந்தனர், கிருஷ்ணர் என்பவர் முழுமுதற் கடவுள் என்று அவர்களுக்குத் தெரியாது என்றாலும். இதேபோல், கிருஷ்ணர் என்றால் என்ன என்று தெரியாமல், நீங்கள் வெறுமனே கிருஷ்ணருடன் பற்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். எப்படியோ, நீங்கள் கிருஷ்ணருடன் பற்று கொண்டிருங்கள். மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்... (இடைவெளி) ...ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு (பகவத் கீதை 7.1). வெறுமனே நீங்கள் செய்ய வேண்டியது ... இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். எப்படியோ, நீங்கள் கிருஷ்ணருக்கான பந்தத்தை அதிகரிக்கிறீர்கள். ஏதோ ஒரு வழியில். யேன தேன ப்ரகாரேண மன: க்ருஷ்ணே நிவேஷயேத் (பக்தி-ரஸாம்ருத-ஸிந்து 1.2.4). இது ரூப கோஸ்வாமியின் அறிவுறுத்தல். எப்படியோ நீங்கள் கிருஷ்ணருடன் பற்று கொண்டிருங்கள். பின்னர் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.

இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களைத் தூண்ட முயற்சிக்கிறது. கிருஷ்ணருடன் இணைக்கப்படுவது எப்படி. அதுதான் பக்தி-யோகா. யேன தேன ப்ரகாரேண மன: க்ருஷ்ணே நிவேஷயேத். பிறகு? விதி-னிஷேதா:. பக்தி-யோகத்திற்கு பல சட்டதிட்டங்கள் உள்ளன. ஆம் உள்ளன. மேலும் ரூப கோஸ்வாமி கூறுகிறார், ஸர்வே விதி-னிஷேதா: ஸ்யுர் ஏதயோர் ஏவ கிங்கரா: (பத்ம புராணம், ப்ருஹத்-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ர). ஏதோ ஒரு வழியில் நீங்கள் கிருஷ்ணருடன் பற்று கொண்டிருந்தால், அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள், அவை உங்கள் சேவகராகச் செயல்படும். அவை தானாகவே (தெளிவற்றவை). ஏனென்றால் நீங்கள் கிருஷ்ணருடன் பற்று கொண்டவுடன், கிருஷ்ணர் கூறினார்.க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா.

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா
ஷஷ்வச்-சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதிஜானீஹி
ந மே பக்த: ப்ரணஷ்யதி
(பகவத் கீதை 9.31)

க்ஷிப்ரம், மிக விரைவில். அபி சேத் ஸு-துராசாரோ பஜதே மாம் அனன்ய-பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: (பகவத் கீதை 9.30)

இந்த ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்கள், அவர்கள் மிலேச்சர்கள் மற்றும் யவனாக்கள் என்று நினைக்க வேண்டாம். அது அபராதம், குற்றம். ஏனென்றால் அவர்கள் சாது. அவர்களுக்குத் தெரியாது... எந்தவொரு கலப்பினமான புரிதலும் இல்லாமல் அவர்கள் கிருஷ்ணரை ஏற்றுக்கொண்டனர், "இதுவும் நல்லது, இதுவும் நல்லது, இதுவும் நல்லது." அவர்கள் தங்கள் ஆன்மீக குருவின் அறிவுறுத்தலை கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள்.க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28) எங்கள் சங்கத்தில் ஒரு சிறு குழந்தை கூட, ஷியாமசுந்தராவின் மகள், அவள் ஒருவரிடம் செல்வாள் - அவளுக்கு ஐந்து வயதுதான் - அவள் "உங்களுக்குக் கிருஷ்ணரை தெரியுமா?" என்று கேட்பாள், எனவே அவர் கூறினார், "இல்லை, எனக்குத் தெரியாது." "ஓ, புருஷோத்தமரான முழுமுதற்கடவுள்." அவள் அவ்வாறு பிரச்சாரம் செய்வாள். எனவே அவர்கள் உறுதியாக, க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்பதை நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை முதன்மையான குணம். பின்னர் மற்ற விஷயங்கள் பின்பற்றப்படும். ஸர்வே விதி-னிஷேதா: ஸ்யுர் ஏதயோர் ஏவ கிங்கரா: எனவே இந்த விஷயத்தில் ஒருவர் வெறுமனே உறுதியாக இருந்தால், அதாவது க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், அவர் அதை விரும்புகிறார், கொள்கையைப் பின்பற்றுகிறார், க்ருஷ்ணைக-ஷரணம், (தெளிவற்ற), வர்ணாஷ்ரம-தர்ம. க்ருஷ்ணைக-ஷரணம். அதுதான் விரும்பப்படுகிறது. மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66). எனவே அதைச் செய்யுங்கள். இந்தக் கொள்கையில் ஒட்டிக்கொள்க, கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்று. கிருஷ்ணர் பர-தத்வ, பூரணமான உண்மை, மற்றும் கிருஷ்ணர் என்பவர் எங்கும் இருப்பவர். மயா ததம் இதம் ஸர்வம் (பகவத் கீதை 9.4). கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் உள்ளார். ஜகத் அவ்யக்த-மூர்தினா. இந்த அவ்யக்தா. கிருஷ்ணரின் ஆற்றல் எல்லா இடங்களிலும் உள்ளது.