TA/Prabhupada 0824 - ஆன்மிக உலகில் கருத்து வேறுபாடுகள் இல்லை
751101 - Lecture BG 07.05 - Nairobi
மனித இயல்பை அராய்ந்தால், அதில் உள்ள அனைத்தும், கடவுளிடமும் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அது பூரணமானது எல்லையற்றது, நம்மிடமுமோ ரசாயன கலப்புகள் நுண்ணிய அளவில் கலந்துள்ளன. பௌதிக தொடர்பின் காரணமாக அது பூரண மற்றதாகிறது. பௌதிக பந்தத்திலிருந்து விடுபடும் பொழுது ஒருவர் பூரணம் ஆகிறார். "கடவுளைப் போன்று நல்லவனாக இருந்தாலும், கடவுள் பெரியவர் நான் மிக மிகச் சிறியவன்" என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னுணர்வு. "நான் கடவுளைப் போன்று நல்லவன்" என்று நினைப்பது முட்டாள்தனம். குணத்தில் கடவுளைப் போன்று இருக்கலாம், ஆனால் அளவில் கடவுள் மிக மிகப் பெரியவர். அதுவே தன்னுணர்வு. எனவே சாஸ்திரங்கள் சொல்கிறது, "ஆன்மீகப் பொறியின் ஒரு சிறு துகள் முழுமுதல் பொருளின் சமமாகுமானால், அவருடைய கட்டுப்பாட்டுக்குள் அவன் எப்படி வரமுடியும்?" இதுவே பகுத்தறிவு. நாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றோம். பௌதிக வாயுமண்டலத்தில் நாம் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருக்கின்றோம். ஆன்மீகமாக முக்தி பெற்று இருந்தாலும், நாம் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருக்கின்றோம், ஏனெனில் கடவுளே பரமமானவர் நாம் சிறியவர்களாகவே இருக்கின்றோம்.
எனவே ஆன்மீக உலகில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. கடவுள் பெரியவர் நாம் சிறியவர் என்ற கருத்து வேறுபாடு இல்லை. அது ஆன்மீக உலகம். ஆனால் பௌதிகக உலகிலோ "கடவுள் பெரியவராக இருக்கிறார், நான் சிறியவனாக இருக்கிறேன்" என்று ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. அதுதான் பௌதிக உலகம். ஆன்மீக உலகம், பௌதிக உலகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கடவுளின் மிக நுண்ணிய பகுதிதான் உயிர்வாழி, ஆனால் ஆன்மீக உலகத்தில் இதனை அனைவரும் அறிந்திருக்கின்றனர். உயிர் வாழிகளுக்குத் தெரியும், "என்னுடைய நிலைமை என்ன? நான் பகவானின் ஒரு சிறு பகுதி." எனவே இதில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. அனைத்தும் நன்றாகவே செல்கிறது. ஆனால் இங்கே பௌதிக உலகத்தில்.... அவன் கடவுளின் ஒரு பகுதிதான், ஆனால் கருத்து வேறுபாடு இருக்கிறது. "நான் கடவுளுக்கு இணையானவன்" என்று தவறாக எண்ணுகிறான். அதுவே பௌதிக வாழ்வு. முக்தி என்பது... இந்த தவறான வாழ்க்கை தத்துவத்திலிருந்து முக்தி அடைவது தான் முக்தி எனப்படும். முக்தி என்பது...
"கடவுள் பெரியவர் நான் மிக மிக சிறிய துகள் என்று ஏற்றுக் கொண்ட அனைத்து பக்தர்களும். சிறியவை பெரியவர்களுக்கு சேவை புரிவது போல, என்னுடைய உண்மையான கடமை கடவுளுக்கு சேவை செய்வது" என்று அழுகின்றனர் இதுவே முக்தி. "கடவுள் பெரியவர் நான் மிகச் சிறியவன்" நான் பகவானுக்கு சேவை செய்ய வேண்டும். என்ற இந்தக் கொள்கையை அனைத்து பக்தர்களும் அறிந்திருக்க வேண்டும். அதுவே இயல்பு. அனைவரும் அலுவலகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் வேலைக்கும் செல்கின்றனர். அது என்ன? தன்னைவிட பெரியவருக்கு சேவை செய்ய... அல்லது அவர்கள் வீட்டிலேயே இருக்கலாமே? ஏன் தொழிற்சாலைக்கும் அலுவலகத்திற்கும் செல்கிறார்? சிறியவர்கள் பெரியவர்களுக்கு சேவை செய்வது இயல்பு. எனவே பகவான், மிகவும் உயர்ந்தவர். அணோர் அணீயான் மஹதோ மஹீயான் (கட உபனிஷத் 1.2.20). அப்படி என்றால் உன்னுடைய கடமை என்ன? அவருக்கு சேவை செய்வது, அவ்வளவு தான். அதுதான் உன்னுடைய இயற்கையான நிலைமை. பௌதிக உலகத்தில் அவன் யாருக்கோ சேவை புரிகிறான், தன்னுடைய அன்றாட வயிற்று தேவைகளுக்காக இருப்பினும்; அவன் தன்னை கடவுள் என்று எண்ணிக் கொள்கிறான். எப்படிப்பட்ட கடவுளாக இருக்கவேண்டும் பாருங்கள். தன்னை கடவுளாக நினைப்பவர், அயோக்கியத்தனம் ஆனவர். அலுவலகத்தில் இருந்து துரத்திவிடப்பட்டால் அவனுக்கு சோற்றுக்கே வழி இல்லை, இருந்தாலும் அவன் கடவுள். அதே பௌதிக உலகம். அனைவரும் தன்னை கடவுளாக எண்ணிக் கொள்கின்றனர். எனவே அவர்கள் மூடா, முட்டாள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பகவானிடம் சரணடைவது இல்லை. ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருத-ஜ்ஞானா: (ப.கீ. 7.15). அபஹ்ருத-ஜ்ஞானா:. அவனுடைய உண்மையான அறிவு கவரப்பட்டு விட்டது. அவன் தான் சிறியவன் என்றும், கடவுள் பெரியவர் என்றும், அவருக்கு சேவை செய்வதே தனது கடமை என்றும் அறியாதவன். அந்த ஞானம் பறிக்கப்பட்டு விட்டது. மாயயாபஹ்ருத-ஜ்ஞானா ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:. அதுவே அறிகுறி.
இந்த ஒரு அறிகுறியை கொண்டு நாம் புரிந்து கொண்டு விடலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அவனுடைய ஒரு செயலில் இருந்து அவன் அயோக்கியன் என்பதை நாம் புரிந்து கொண்டு விடலாம். ஒரே அறிகுறி அது என்ன? ந மாம் ப்ரபத்யந்தே. அவன் கிருஷ்ணரின் பக்தன் அல்ல அவன் அயோக்கியன் அவ்வளவுதான். உடனடியாக புரிந்து கொண்டு விடலாம், வேறு எந்த புரிதலுமே தேவையில்லை, எவன் ஒருவன் கிருஷ்ணர் பக்தன் இல்லையோ, கிருஷ்ணரிடம் சரணடைய தயாராக இல்லையோ, அவன் அயோக்கியன். அவ்வளவுதான். அதுவே நமது முடிவு.
மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா.