TA/Prabhupada 0833 - ஒரு சன்னியாசிபோல் சேவையாற்றுவதாக கிருஷ்ணர், வைணவர், குரு மற்றும் அக்னி முன்பாக உறுதிய
(Redirected from TA/Prabhupada 0833)
Sannyasa Initiation -- Bombay, November 18, 1975
சன்யாசிகள், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், பிரசங்கிக்கிறார்கள், அவர்கள் பணம் சேகரிக்கிறார்கள்-ஆனால் தனக்கு என்று எதுவும் இல்லை. முதலாவதாக, பிரம்மச்சாரி பயிற்சி பெறுகிறார். பிரம்மச்சாரி குரு-குலே வசன் தாந்தோ குரோர் ஹிதம் (ஸ்ரீ.பா. 7.12.1) குருவின் நலனுக்காக குருவின் இடத்தில் வாழ பிரம்மச்சாரிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது அதே கொள்கை, முதிர்ச்சியடையும் போது, கிருஷ்ணரின் நலனுக்காக ஒருவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது...
கிருஷ்ணரின் நன்மை என்பது முழு உலகத்திற்கும் நன்மை என்று பொருள். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (ப.கீ 18.66) ஒரு சன்னியாசி வீடு வீடாகச் செல்ல வேண்டும். மஹத்-விசலனம் ந்ருணாம் க்ருஹிணாம் தீன-சேதஸாம் (ஸ்ரீ.பா 10.8.4). ஒரு சன்னியாசி மஹாத்மா என்று அழைக்கப்படுறார். அவர் எப்படி மஹாத்மா? ஏனெனில் அவரது ஆத்மா இப்போது பரந்த அளவில் உள்ளது. க்ருஹிணாம் தீன-சேதஸாம். மஹத்-விசலனம். மஹத்மா நாடு நாடாக, வீடு வீடாக பயணம் செய்கிறார், அல்லது அலைகிறார். மஹத்-விசலனம் ந்ருணாம் க்ருஹிணாம் - குறிப்பாக கிரஹஸ்தர்களுக்கு, தீன-சேதஸாம் - உணர்வு அல்லது மனம் மிகவும் முடங்கிப் போயிருக்கிறவர்களுக்கு. அவர்கள் தீன-சேதஸாம். இந்த பௌதிக முதல்வாத நபர்கள், புலன்களை எவ்வாறு அனுபவிப்பது என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்; எனவே அவர்கள் தீன-சேதஸாம், ஊனமுற்றோர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு யோசனை இல்லை. எனவே அவர்களுக்கு அறிவூட்டுவது வீட்டுக்கு வீடு செல்வது சன்னியாசியின் கடமையாகும், நாடு நாடாக, வாழ்க்கையின் நோக்கம் பற்றி அவர்களுக்கு கற்பிக்க. அது இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும், ஒரு சந்நியாசி ஒரு கிராமத்தில் சென்றால், மக்கள் அவரை அழைக்க வருவார்கள், அவர் சொல்வதை கேட்க முயற்சிப்பார்கள்.
எனவே நீங்கள் கிருஷ்ணர், வைஷ்ணவ, குரு மற்றும் அக்னியின் முன் சேவை செய்வதற்காக இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறீர்கள். எனவே உங்கள் கடமையை மறந்துவிடாதபடி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நபர்களை விடுவிக்க நீங்கள் ஆப்பிரிக்கா செல்கிறீர்கள். ஷுகதேவ கோஸ்வாமீ சொல்கிறார், கிராத-ஹூணாந்த்ர-புலிந்த-புல்கஷா ஆபீர-ஷும்பா யவனா: கஸாதய:, யே 'ந்யே ச பாபா (ஸ்ரீ.பா 2.4.18). இந்த மனிதர்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தவர்களாக கருதப்படுகின்றனர், கிராத, கருப்பு மக்கள். அவர்கள் நிஷாத என்று அழைக்கப்படுகின்றன. நிஷாத, மன்னர் வேனாவிற்கு பிறந்தார். அவர்கள் திருடப் பழகிவிட்டார்கள்; எனவே அவர்களுக்கு ஆப்பிரிக்க காடுகள் என்ற தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. பாகவதத்தில் அது இருக்கிறது. ஆனால் அனைவரும் விடுவிக்க பட முடியும். கிராத-ஹூணாந்த்ர-புலிந்த-புல்கஷா ஆபீர-ஷும்பா யவனா: கஸாதய: யே 'ந்யே ச பாபா. இவை பாவமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சுகதேவா கோஸ்வாமீ கூறுகிறார் "இங்கே குறிப்பிடப்படாத மற்றவர்கள் இருக்கலாம்." யே 'ந்யே ச பாபா யத்-அபாஷ்ரயாஷ்ரயா: "அவர்கள் ஒரு வைஷ்ணவரை அடைக்கலம் அடைந்தால்," ஷுத்யந்தி, "அவர்கள் சுத்திகரிக்கப்படுகிறார்கள்."
எனவே நீங்கள் மிகவும் கடினமான வைஷ்ணவராக மாற வேண்டும்; பிறகு நீங்கள் அவர்களை விடுவிக்க முடியும். ஷுத்யந்தி. வேறொரு பிறப்பை எடுக்காமல் அவர்களை எவ்வாறு சுத்திகரிக்க முடியும்? ஆம். ப்ரபவிஷ்ணவே நம: ஏனெனில் வைஷ்ணவர் அவர்களை விடுவிக்கப் போகிறார், விஷ்ணுவின் சக்தியால் அவர்கள் அதிகாரம் பெறுகின்றனர். ஆகவே, நான் சென்ற முறை நைரோபிக்குச் சென்ற போது நடைமுறையில் பார்த்தோம், பல, இந்த ஆப்பிரிக்கர்கள், அவர்கள் மிக நேர்த்தியாக முன்னேறி வருகிறார்கள். அவர்கள் நல்ல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே ஆப்பிரிக்க மக்கள், அவர்கள் கடவுளை மறக்கும் அளவுக்கு அவ்வளவு அதிநவீன, அல்லது நாகரிகம் என்று அழைக்கப்படுவதை அடையவில்லை. ஆனால் நீங்கள் நேர்மையாக வேலை செய்தால், உங்கள் முயற்சியால் மட்டுமே ஒருவரை விடுவிக்க முடியும் என்றால், உடனடியாக நீங்கள் கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்படுவீர்கள். ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: (ப.கீ 18.69). பிரசங்கம் செய்வது கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்படுவதற்கான விரைவான வழி ஆகும்.