TA/Prabhupada 0843 - வாழ்க்கையின் துவக்கமே தவறாக உள்ளது - தேகத்தை அவர்கள் தமது சுயமாக எண்ணுகிறார்கள்



761215 - Lecture BG 16.07 - Hyderabad

எனவே இந்த அசுரத்தனமான மக்கள், அவர்களின் இலக்கு எந்த வழி என்பது அவர்களுக்குத் தெரியாது இது சுய நலன் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் இந்த பாதகர்களுக்கு, சுயநலம் என்னவென்றுத் தெரியாது, ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையின் ஆரம்பமே தவறாக உள்ளது அவர்கள், அவர்களுடைய உடலை, தான் என்று நினைக்கிறார்கள். எனவே அவர்கள் சுயநலத்தை எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? அடிப்படைக் கொள்கை தவறாக உள்ளது. தேஹாத்ம-புத்தி நாய்கள், பூனைகள், "நான் இந்த உடல்" என்று நினைக்கின்றன. எனவே அதே அசுர ஆர்வம், அவர்களுக்குத் தெரியாது, புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே (BG 2.13). இந்த உடலுக்குள் ஆன்மா இருக்கிறது. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது எனவே அவர்களின் சுயநலன் தவறாக உள்ளது. உண்மையான சுயநலன் என்னவென்றால், "நான் ஆத்மா, நான் கடவுளின் மகன். என் தந்தை மிகப் பெரும் பணக்காரர். நான் என் தந்தையின் தொடர்பை விட்டுவிட்டேன், அதனால் நான் கஷ்டப்படுகிறேன்." இல்லையெனில் துன்பம் பற்றிய கேள்விக்கே இடமில்லை. நமக்கு அனுபவம் உள்ளது. மிகவும் பணக்காரனின் மகன், ஏன் கஷ்டப்பட வேண்டும்? எனவே இங்கே கிருஷ்ணர் கூறுகிறார்: அஹம் பீஜ-ப்ரத: பிதா (BG 14.4): "நானே அனைத்து உயிரினங்களுக்கும் விதை அளிக்கும் தந்தை." பின்னர்... கடவுள் என்றால் ஷத்-ஐஷ்வர்ய-பூர்ண: ஆறு வகையான செழிப்புகள். அவர் முழுமையானவர். அவர் எல்லாவற்றிற்கும் உரிமையாளர், போக்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (BG 5.29). ஆகவே, எல்லாவற்றிற்கும் உரிமையாளரான ஒரு நபரின் மகன் நான் என்றால், என் துன்பத்திற்கான கேள்வி எங்கே? எனவே சுயநலத்தின் அடிப்படைக் கொள்கை இழக்கப்படுகிறது.

எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அவர்களின் உணர்வை புதுப்பிக்க உள்ளது. "நீங்கள் இந்த உடல் அல்ல, நீங்கள் ஆத்மா" என்று. நீங்கள் கடவுளின் ஒரு பின்னப் பகுதி. நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? எனவே கிருஷ்ண பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், மேலும் கிருஷ்ண உணர்வை வளர்ப்பதன் மூலம் நீங்கள் பரமபதத்திற்கு திரும்புவீர்கள், பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." கிருஷ்ணர் இதை உறுதிப்படுத்துகிறார். து:காலயம் அஷாஷ்வதம், நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா:, மாம் உபேத்ய (BG 8.15): "யாராவது என்னிடம் வந்தால்," மாம் உபேத்ய, பின்னர் அவர் இந்த ஜட உலகிற்கு மீண்டும் வரமாட்டார், து:காலயம் அஷாஷ்வதம் (BG 8.15)." இந்த இடம் துன்பத்திற்கான இடம். அவர்களுக்கு சுயநலன் தெரியாததால், துன்பமான இடத்தை அவர்கள் இன்பமான இடமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அது துன்பத்தின் இடம்.

இந்த உடலை ஏன் போர்த்திக் கொள்கிறீர்கள்? உடலே துன்பத்திற்கான காரணம், காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது எனக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே நான் போர்த்திக் கொள்ள வேண்டும். இது துன்பத்தைத் தணிப்பதற்கான ஒரு வழியாகும். துன்பப்படுவதே நிலையாகும், ஆனால் எப்படியாவது நாம் துன்பத்தைத் தணிக்க முயற்சிக்கிறோம். இதேபோல், கோடைகாலத்திலும், துன்பம் இருக்கிறது. அந்த நேரத்தில் இந்த போர்வையை நாம் விரும்புவதில்லை; நமக்கு மின் விசிறிகள் தேவைப்படும். எனவே எப்போதும் துன்பம் இருக்கிறது. கோடைகாலத்திலோ குளிர்காலத்திலோ, துன்பம் இருக்கவே செய்யும். அதை நாம் புரிந்து கொள்ளவில்லை. இது நம் அசுர ஸ்வபாவத்தின் காரணமாகும். நாம் கேள்வி கேட்பதில்லை. கோடை மற்றும் குளிர்காலத்தில்... கோடை காலத்தில், நாம் குளிர்ச்சியான ஒன்றை விரும்புகிறோம். குளிர்காலத்தில் நாம் சூடாக இருக்கும் ஒன்றை விரும்புகிறோம். எனவே இரண்டு விஷயங்கள் உள்ளன. எனவே சில நேரங்களில் வெதுவெதுப்பான நிலை துன்பம் தருகிறது. சில நேரங்களில் இந்த குளிர் கூட துன்பம் தருகிறது. எனவே இன்பம் எங்கே? "இந்த நேரத்தில், சூடாக இருந்தால்..." என்று நாம் வெறுமனே ஏங்குகிறோம், ஆனால் சூடும் துன்பம் தருகிறது. எனவே கிருஷ்ணர் "இந்த துன்பத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது தொடரும் என்கிறார். கோடைகாலத்தில் சிலவற்றை மிகவும் மகிழ்ச்சியானது என்று நினைக்கிறீர்கள். குளிர்காலத்தில் இதே விஷயம் மகிழ்ச்சியாக இருக்காது. எனவே அவை வந்து போகும். துன்பம், இன்பம் எனப்படுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் கடமையான கிருஷ்ண பக்தியினை நிறைவேற்றுங்கள்,"