TA/Prabhupada 0845 - பாலியல் வாழ்க்கையை உபயோகிக்க நாய்க்குகூட தெறியும் - இதற்கு ப்ராய்ட் தத்துவம் தேவையில

(Redirected from TA/Prabhupada 0845)


761217 - Lecture BG 03.25 - Hyderabad

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ
யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம்ஸ் ததாஸக்தஷ்
சிகீர்ஷுர் லோக-ஸங்க்ரஹம்
(BG 3.25).

இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மனிதர்கள் உள்ளனர்: வித்வான், கற்றவர்கள் மற்றும் முட்டாள்கள். கல்லாதவர், முட்டாளாக இராமலிருக்கலாம். மனிதர்கள் நிச்சயமாக விலங்குகளை விட மிகவும் புத்திசாலிகள். ஆனால் அவர்களுக்குள் அதிக புத்திசாலிகள், குறைந்த புத்திசாலிகள் என்று உள்ளனர். மொத்தத்தில், அவர்கள் விலங்குகளை விட புத்திசாலிகள். அறிவை பொறுத்த மட்டில், உணவு, தூக்கம், பாலுறவு, தற்காப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், விலங்கிற்கும் மனிதனுக்கும் இவை சமமாக உள்ளது. இதற்கு எந்த கல்வியும் தேவையில்லை. நாய்க்கு கூட பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியும். இதற்கு பிராய்டின் தத்துவம் தேவையில்லை. ஆனால் மோசமான மனித சமூகத்தினர், நினைப்பது "இங்கே ஒரு பெரிய தத்துவவாதி இருக்கிறார், அவர் பாலியல் பற்றி எழுதுகிறார்." என்று. இது தொடர்கிறது. சாப்பிடுவது... இங்கே நிலம் உள்ளது. கொஞ்சம் வேலை செய்யுங்கள், உணவு தானியங்களை உற்பத்தி செய்யுங்கள், உங்களால் ஆடம்பரமான உணவை சாப்பிட முடியும். ஆனால் பெரிய, பெரிய பசுக்களை கொண்டுவருவதற்கு விஞ்ஞானரீதியிலான இறைச்சி கூடம் தேவையில்லை. இவ்வாறாக, அப்பாவி விலங்குகளின் உயிரை எடுத்து நகரத்தில் வாழத் தேவையில்லை. இது அறிவின் தவறான பயன்பாடு. இது அறிவு அல்ல. எனவே உண்மையில் புத்திசாலியான ஒரு பக்தர். நம் அறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான வழியை காட்ட வேண்டும். அது இங்கே விளக்கப்பட்டுள்ளது, ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸ: அவித்வாம்ஸ:, முட்டாள்கள், அறிவில் குன்றிய மனிதர்கள், அவர்கள் பல செயற்பாட்டு வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர், வெறும் முட்டாள்தனம். நவீன நாகரிகம், நாகரிக முன்னேற்றம் எனப்படுவது, நான் சொல்வதன் அர்த்தம் அவித்வாம்ஸ:, -ஆல் திட்டமிடப்பட்டதாகும், அறிவில் குன்றிய மனிதர்களால் திட்டமிடப்பட்டதாகும். அவை நாகரிக முன்னேற்றம் அன்று. எனவே அவர்கள் ஆத்மாவின் மறுபிறவி பற்றி நம்புவதில்லை. முக்கிய பிரச்சினையைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் இந்த வாழ்க்கையில் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் வாழ்வார்கள் என்று திட்டமிடுகிறார்கள், பெரிய, பெரிய திட்டங்களை உருவாக்குகிறார்கள், ஸக்தா: ஜடத்தால் கவரப்பட்டவாறு. ஸக்தா: கர்மணி, மேலும் புதிய புதிய ஈடுபாட்டு முறைகளைக் கண்டறிகிறார்கள். அவித்வாம்ஸ: மூளை மற்றும் திறமையை எவ்வாறு ஈடுபடுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நாம் அன்றொரு நாள் கலந்துரையாடினோம், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விதுர் ஆஸுரா ஜனா: (BG 16.7). எந்த வகையில் நாம் நமது மூளை மற்றும் திறமையை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இது ஒரு தேவனுக்கும் அசுரனுக்கும் உள்ள வித்தியாசம். அசுரனுக்குத் தெரியாது. அசுரன் தான் என்றென்றும் வாழ்வேன் என்று நினைக்கிறான். பௌதிக வசதிகளுக்காக பெரிய, பெரிய திட்டங்களை அவன் தயாரிக்கட்டும். இது அசுர நாகரிகம். அவன் இங்கு தங்க அனுமதிக்கப்படமாட்டான். து:காலயம் அஷாஷ்வதம் (BG 8.15). துன்பத்திற்கான இடம் இது, இதனால் நம் நிலையை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த முட்டாள்கள் துன்பத்தை கவனத்திற் கொள்வதில்லை. அவர்கள் அதிக துன்பங்களுக்காகத் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். இது முட்டாள்தனமான நாகரிகம். விஞ்ஞானிகள் எனப்படுபவர்கள் விந்தையான வார்த்தைகளால், முன்னேற்றம் முன்னேற்றம் என்று பேசுகிறார்கள். அவர்களால் முடியாது... இன்று காலை நாம் கலந்துரையாடியது போல, ​​எந்த அறிவாளியும் கேட்கலாம், "அப்படியானால் நீங்கள் என்ன தீர்வை அளித்தீர்கள்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் பிரச்சினைக்கு நீங்கள் என்ன வகையான தீர்வு அளித்தீர்கள்? இந்த பிரச்சினையை நீங்கள் தீர்த்துவிட்டீர்களா?"அவர்கள் ஆம் என்று சொல்ல மாட்டார்கள். ஆம், நாங்கள் முயற்சிக்கிறோம், பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அது சாத்தியமாகலாம்." "நாம் என்றென்றும் வாழ்வோம் என்பது போல இருக்கிறது." என்று அவர்கள் சொல்கிறார்கள். உங்கள் திட்டத்தை பார்த்து உறுதிப்படுத்த, பல லட்சக்கணக்கான ஆண்டுகள் யார் உயிர்வாழப் போகிறார்கள்? எல்லோரும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள். நீங்களும்தான்... பாதகர்களே, நீங்களும் இறந்து விடுவீர்கள். உங்கள் செயலின் பலனை யார் பார்க்கப் போகிறார்கள்? இவ்வாறு இது தொடர்கிறது. எனவே வாழும் முறையைக் காண்பிப்பது புத்திசாலியின் கடமையாகும்.