TA/Prabhupada 0854 - பெரியவற்றை விட மிகப்பெரியவர், சிறியவற்றை விட மிகச்சிறியவர். அவரே பகவான்



750306 - Lecture SB 02.02.06 - New York

கிருஷ்ணர் அறிய விரும்பியபோது ... அர்ஜுனன் கிருஷ்ணனிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்பினான். "உங்களின் சக்தி எவ்வளவு தூரம் பரவி உள்ளது? நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள்? நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்." அவன் ஆர்வமுள்ளவனாக இருந்தான், ப்ரம்ம ஜிக்னாஸா. அவன் பகவான் யார் என்று அறிய முற்படுகிறான். அதனால் பகவானே அவரைப் பற்றிக் கூறுகிறார். அதனால் இந்த அத்யாயத்தில் கூறுகிறார் "இவற்றுள் நான் இவை; இவற்றுள் நான் இவை, இவை என்று..." அதற்குப் பின் சுருக்கமாகக் கூறுகிறார், "என்னைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும்? என்னைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய். என் சக்தியானது... இந்த ஜட உலகில் எண்ணிலடங்காத பிரபஞ்சமும், அந்த ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எண்ணிலடங்காத கோள்களும் உள்ளன. நான் அதன் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்றுருக்கிறேன்." விஷ்டாப்யாஹம் இதம் க்ருத்ஸ்னம், "எல்லாவற்றுக்குள்ளும், மேலும் அதை நானே பராமரிக்கிறேன்." எப்படி கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் குடிக்கொண்டுள்ளாரோ அப்படி... கிருஷ்ணர் எல்லாவற்றிலும் குடிக்கொண்டுள்ளார். எல்லா அணுவிலும் உள்ளார். அதுதான் கிருஷ்ணர். நாம் கிருஷ்ணரை போல் நடந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் யாராவது நம்மிடம் "உன்னால் ஒரு அனுவிற்குள் செல்ல முடியுமா என்று கேட்டால்"... "இல்லை என்னால் செல்ல முடியாது." என்போம். கிருஷ்ணர், பகவான், அவரால் முடியும், அவர் மிகப் பெரியதை விடப் பெரியவராக முடியும். அவரால் மிகப்பெரிய பிரபஞ்சத்தை உருவாக்க முடியும். எனவே, இந்தப் பிரபஞ்சம் மட்டுமல்ல, பல மில்லியன் பிரபஞ்சங்கைளையும், அவை அவரது உடல் முடியின் துளைகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. யஸ்யைக்க-நிஷ்வஸித-காலம் அதாவலம்ப்ய ஜீவந்தி லோம-வில-ஜாஜகத்-அந்த-நாதா: (பிரம்ம சம்ஹிதை 5.48). அவர் தான் பகவான். அநேகமாக நம் உடலில் பல மில்லியன் துளைகள் உள்ளன. மகா விஷ்ணுவிலிருந்து அந்தத் துளை வழியே பிரபஞ்சங்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. யஸ்யைக-நிஷ்வாஸித-காலம். எனவே கடவுள் என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்: பெரியவற்றை விட மிகப் பெரியவர், சிறியவற்றை விட மிகச்சிறியவர். அவரே பகவான். அவரால் இந்தப் பெரிய, பெரிய பிரபஞ்சத்தை அவரின் மூச்சுக்காற்றால் படைக்க முடியும். மீண்டும் - ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எத்தனை அணுக்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியாது - அவரால் ஒவ்வொரு அணுவிலும் நுழைய முடியும். அந்தாந்தர-ஸ்த-பரமானு-சயாந்தர-ஸ்தம்.

ஏகோ (அ)ப்ய் அஸௌ ரசயிதும் ஜக₃த்₃-அண்ட₃-கோடிம்
யச்-ச₂க்திர் அஸ்தி ஜக₃த்₃-அண்ட₃-சயா யத்₃-அந்த꞉
அந்தாந்தர-ஸ்த-பரமானு-சயாந்தர-ஸ்தம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
(பிரம்ம சம்ஹிதை 5.35).

இதுவே பகவானின் கருத்து.

எனவே இந்த முன்மொழிவு என்னவென்றால், இந்த ஜட உலகில் நாம் கஷ்டப்படுகிறோம். "நான் இப்படி செய்தால் எதிர்காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்" என்று நாம் வெறுமனே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த எதிர்காலம் வருவதற்கு முன்பு, நாம் மடிந்துவிடுவோம். இதுவே நமது நிலை. ஒரு முறை மட்டுமல்ல, பல முறை. இன்னும் எனக்கு உங்களுக்கு அந்தக் கருத்து உள்ளது. விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கரைப் போலவே: மில்லியன் கணக்கான வருட இடைவெளிக்குப் பின்னர் இது நடக்கும், அது நடக்கும். இல்லை. இது முட்டாள் தனமே. பிறகு எப்படி - உங்கள் வயது ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் - நீங்கள் மில்லியன் கணக்கான வருடங்களை எப்படி கணிக்க முடியும்? உண்மையை அறிந்துக்கொள்வதற்கு முன்னால் உங்கள் ஐம்பது ஆறுபது வயது மில்லியன் முறை முடிந்துவிடும். ஆனால் விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள், "இல்லை. இந்த ஐம்பது, அறுபது ஆண்டுகள் வாழ்வின் பெரிய அளவு." என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் புரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. சிரம் விசின்வன். நீங்கள் இந்த முட்டாள்தனமான வழியில் நித்தியமான ஒன்றை ஊகிக்கிறீர்கள் என்றால், இன்னும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. சிரம் விசின்வன்.

அதாபி தே தேவ பதாம் புஜ-த்வய-
ப்ரஸாத-லேஷானுக்ரஹீத ஏவ ஹி
ஜானாதி தத்வம் பகவான்-மஹிம்னோ
ந சான்ய ஏகோ 'பி சிரம் விசின்வன்
(ஸ்ரீமத் பாகவதம் 10.14.29).

சிரம் என்றால் நித்தியமான, நீங்கள் கடவுளைப் புரிந்துகொள்ளக் கற்பனைகளைச் செய்தால், நம்முடைய அற்ப புத்தியையும் குறைபாடுடைய புலன் உணர்வையும் கொண்டு, அது முடியாது... சாஸ்திரம் எதை உணர்த்துகிறதோ அதைப் பின்பற்றுவதே நல்லது. முதலில் நீ பௌதிக ஆசைகளிலிருந்து விடுப்பட வேண்டும். நிவ்ருத்த... (தனியாக, தெளிவில்லாத). ஜட பற்று, ஜட விஷயங்களில் எனக்கு ஈர்ப்பு உள்ளவரை, கிருஷ்ணர் அதற்கு ஏற்றவாறு எனக்கு உடலைக் கொடுப்பார். தேஹாந்தர-ப்ராப்திர் (பகவத் கீதை 2.13). நாம் தற்காலிகமாக இந்த ஜட விஷயங்களில் இன்புற்று இருக்க விரும்பினால், அதற்கு ஏற்றவாறு இன்புற்று இருப்பதற்கு தேவையான உடல் கிடைக்கும். எறும்பின் வாழ்க்கை கூட இதேதான்: சாப்பிடுவது, உறங்குவது, புணர்வது மற்றும் பாதுகாத்துக்கொள்வது. சொர்கத்திற்கே அதிபதியான தேவாதிதேவன் இந்திரன், அவருக்கே கூட இதே குணாதிசயங்கள் தான் உள்ளது - சாப்பிட்டுவது, உறங்குவது, புணர்வது மற்றும் பாதுகாத்துக்கொள்வது. அதனால் நீங்கள் சந்திர க்ரஹத்திற்கோ அல்லது சூர்ய க்ரஹத்திற்கோ அல்லது அதைவிட உயர்ந்த க்ரஹத்திற்கோ சென்றால், நீங்கள் எங்குச் சென்றாலும் இந்த நான்கும் உங்களைப் பின்தொடரும்: சாப்பிடுவது, உறங்குவது, புணர்வது, பாதுகாத்துக்கொள்வது; மேலும் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் பிணி.