TA/Prabhupada 0869 - இந்த மக்கள் தொகை பிஸியாக இருக்கும் முட்டாள்கள்.அதனால் நாங்கள் சோம்பேறித்தனமான அறிவாள



750629 - Conversation in Car after Morning Walk - Denver

ப்ரபுபாத:...இந்த பிஸியான முட்டாள்கள் மனித குலத்தில் தாழ்ந்தவர்கள். இப்போதைக்கு அவர்கள் "பிஸியான முட்டாள்கள்".

தாமல் க்ருஷ்ணா:அவர்கள் சோம்பேறிதனமான முட்டாள்களை விட தாழ்ந்தவர்கள்.

ப்ரபுபாத:ஆங்?

தாமல் க்ருஷ்ணா:அவர்கள் சோம்பேறிதனமான முட்டாள்களை விட தாழ்ந்தவர்கள்.

ப்ரபுபாத:ஆம்.சோம்பேறி முட்டாள்கள் முட்டாள்தான் ஆனால் அவன் சோம்பேறி,ஆதலால் நம்மை துன்பப்படுத்த மாட்டான். ஆனால் இந்த பிஸியாக இருக்கும் முட்டாள்கள் நம்மை துன்புறுத்துவான். இப்பொழுது மக்கள் தொகை இப்படித்தான் இருக்கிறது பிஸியான முட்டாள்களாக. அதனால் நாங்கள் சோம்பேறி அறிவாளிகளை உருவாக்குகிறோம். அறிவாளிகள் சோம்பேறிகளாக இருக்கலாம்,மெதுவாக அவன் அறிவாளிதனமாக செயல்படலாம் எப்பொழுதாவது. "சரி,இப்படி வைத்துக்கொள்வோம்." அறிவாளியானவன் எப்பொழுதும் சுலபாக தீர்மானம் செய்வான் என்றெல்லாம் கிடையாது.

தாமல் க்ருஷ்ணா:அவனை சோம்பேறி எனலாம், ஆனால் அது தமோ குணம் என்று சொல்ல முடியாது.

ப்ரபுபாத:அது மெத்தன குணம். நவீன சிந்தனை என்னவென்றால் "பிஸியான முட்டாள்களை" உருவாக்குவதுதான்.கம்யூனிஸ்ட் எல்லோரும் பிஸியான முட்டாள்கள்தான்.