TA/Prabhupada 0877 - நீங்கள் கொள்கையில் ஸ்திரமாக இல்லாவிட்டால், ஒரு மையத்தைத் திறப்பது பயனற்றதாக இருக்கும



750519 - Lecture SB - Melbourne

மதுத்விஷா: நாய் மாமிசம் உண்பவர், முதல் வகுப்பு மனிதனாக மாறுவது சாத்தியமா?

பிரபுபாதர்: ஓ, ஆம். இந்த இரண்டு வேலைகளில் நாக்கை ஈடுபடுத்துங்கள்: ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் நாய் சாப்பிடுவதை மறந்து விடுவார். (சிரிப்பு). இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்த இரண்டு விதிகளை அவர் பின்பற்றினால், கிருஷ்ணர் பக்தியில் திளைக்கலாம் : ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். அதை சோதிக்கவும். ஒரு சோதனை செய்யுங்கள். கோயில் இங்கே உள்ளது. நாங்கள் அழைக்கிறோம். இங்கே வாருங்கள். இந்த இரண்டு பணியை மேற்கொள்ளுங்கள். மேலும் எங்கள் மதுத்விஷா மகாராஜா உங்களுக்கு பிரசாதம், நடனம் மற்றும் பாடலுக்கான வாய்ப்பை வழங்க தயாராக உள்ளார். அவ்வளவுதான். இதில் சிரமம் எங்கே? அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏதேனும் லாபம் இருந்தால், அதை ஏன் முயற்சி செய்யக்கூடாது?

மதுத்விஷா: ஸ்ரீல பிரபுபாதா, எவரும் இங்கு வந்து, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டு பிரசாதம் உண்பது ஏன் அவசியம்?

பிரபுபாதர்: அதாவது ... ஏனென்றால் இங்கே மையம் உள்ளது. எல்லாம் சரியாக செய்யப்படுகிறது. நீங்கள் அதனை நேரில் கண்டு, கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் கற்றுக்கொள்ள பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்ல வேண்டியது போல. எனவே இதேபோல், நீங்கள் ஆன்மீக வாழ்க்கையின் கல்வியை மேற்கொள்ள வேண்டுமானால், அவர்கள் இங்கு வந்து மக்கள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பார்கள், சிறந்தவர்கள். நீங்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் சிறந்தவர்களாக இல்லாவிடில், மையத்தைத் திறப்பது பயனற்றதாக இருக்கும். நீங்கள் நேர்த்தியாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் வருவார்கள், அவர்கள் பார்ப்பார்கள், அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் சென்று பேராசிரியர்கள் மோசடி செய்தால், நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்? இது இரண்டும், பரஸ்பர. நீங்கள் பேராசிரியராக, ஆசிரியர்களாக செயல்பட வேண்டும். உங்கள் வாழ்க்கை சிறந்ததாக இருக்க வேண்டும், அவர்கள் வந்து பார்ப்பார்கள், அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

பெண் பக்தர்: ஸ்ரீல பிரபுபாதா, முழு பிரபஞ்சத்தையும் நிர்வகிக்க மன்னர்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தால், அது எல்லா உலகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகங்களையும் குறிக்கிறதா அல்லது இந்த பூமியை மட்டும் குறிக்கிறதா?

மதுத்விஷா: ஒரு ராஜா உலகம் முழுவதையும் ஆளுவது எப்படி சாத்தியம் என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கிறாள். இது மிகவும் கடினம் போல் தெரிகிறது. இப்போதெல்லாம் பல தலைவர்கள் உள்ளனர், அவர்களால் நிர்வகிக்க முடியவில்லை ...

பிரபுபாதர்: அதை மறந்து விடுங்கள். நீங்கள் ஏன் ஆட்சி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்கள், எனவே தான் மற்றவர்களாலும் முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் ஆற்றலில் நீங்கள் சிந்திக்கிறீர்கள். ஆனால் உள்ளன. அது சாத்தியம். எனவே அது எங்கள் செயல்பாட்டுத் துறை அல்ல. இது மற்றவர்களின் அரசியல், ... மற்றும் நாம் ...நாம் செய்வோம்... நம்முடைய ஆன்மீக வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதுதான் நமது குறிக்கோள். நீங்கள் உலகை ஆளவில்லை என்றாலும், அது ஒரு பொருட்டல்ல. உலகத்தை ஆள நீங்கள் ஏன் ஆர்வமாக இருக்கிறீர்கள்? இது நமது வேலை அல்ல. நீங்கள் ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். (சிரிப்பு).