TA/Prabhupada 0900 - புலன்கள், புலன் இன்பத்திற்காக பயன்படுத்தப்பட்டால், அதுதான் மாயை
730415 - Lecture SB 01.08.23 - Los Angeles
"நான் இது என்னுடைய கரம், இது என்னுடைய கால், இது என்னுடைய காது" என்று உரிமை கோருகிறேன். ஒரு குழந்தை கூடச் சொல்லும். நீங்கள் ஒரு குழந்தையை கேளுங்கள், "இது என்ன?" "இது என்னுடைய கை." நாம் உரிமை கோரலாம், ஆனால் அது உண்மையில் நம் கை அல்ல. நமக்கு அளிக்கப் பட்டுள்ளது. காரணம்..... காரணம் நான் பல வகைகளில் என் கையை உபயோகப்படுத்த விரும்பினேன், கிருஷ்ணர், "சரி, இந்த கையை நீ எடுத்துக்கொள். நீ பயன்படுத்திக் கொள்." என்று அளித்திருக்கிறார். எனவே இது கிருஷ்ணருடைய பரிசு.
எனவே புத்தியுள்ள மனிதன் எப்போதும், "என்னுடைய உரிமையில் எதையெல்லாம் பெற்றிருக்கிறேனோ, முதலில், இந்த உடல் மற்றும் புலன்கள், இவையெல்லாம் உண்மையில் என்னுடையதல்ல. இவையெல்லாம் பயன்பாட்டிற்காக எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதியில் எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தம் என்றால், ஏன் இவற்றை கிருஷ்ணனுக்காக பயன்படுத்தக்கூடாது?" என்று உணர்வான். இதுவே கிருஷ்ண உணர்வு. இதுவே கிருஷ்ண உணர்வு. இதுதான் புத்திசாலித்தனம். இவையெல்லாம் என்னுடைய பயன்பாட்டிற்காக, என்னுடைய புலன் இன்பத்திற்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதியில் இது கிருஷ்ணருக்கு சொந்தம்..... மமைவாம்'ஷோ2 ஜீவ-பூ4த: (ப.கீ 15.7). அனைவரும் கிருஷ்ணரது அங்கத் துணுக்கு தான், எனவே அனைவரது புலன்களும் கிருஷ்ணருடையவை தான். எனவே, கிருஷ்ணரின் சேவைக்காக இந்த புலன்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டால் அதுவே வாழ்வின் பக்குவ நிலையாகும். என்னுடைய புலன் திருப்திக்காக பயன்படுத்தப்படும் வரை இது மாயைதான். எனவே பக்தி என்றால், ஹ்ரு'ஷீகேண ஹ்ரு'ஷீகேஷ2-ஸேவனம்' ப4க்திர் உச்யதே (சை. சரி மத்ய 19.170). ஹ்ரிஷிகேன ,புலன்களால். இந்த ஹ்ரிஷிகேஷ - சேவனம்..... உண்மையில் புலன்களின் அதிபதியான ஹ்ரிஷகேஷருக்கு சேவை செய்யும் போது இதுவே பக்தி என்று அழைக்கப்படுகிறது. பக்தி என்பதன் மிக எளிமையான விளக்கம். ஹ்ரு'ஷீகேண ஹ்ரு'ஷீகேஷ2-ஸேவனம் (சை.சரி மத்ய 19.170). ஹ்ரு'ஷீகேஷ2-ஸேவனம் . ஹ்ருஷீக சேவனம் அல்ல. ஹ்ருஷீக என்றால் புலன்கள். எனவே புலன்கள் உணர்வு திருப்திக்காக பயன்படுத்தப்பட்டால், அது மாயை மேலும் புலன்கள், புலன்களின் அதிபதியானவருக்காக பயன்படுத்தப்பட்டால் அதுவே பக்தி என்று அழைக்கப்படுகிறது. மிக எளிமையான விளக்கம். யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். எனவே பொதுவாக, இந்த பௌதிக உலகத்தில், அனைவரும் புலன்களை தங்களது புலன் திருப்திக்காக பயன்படுத்துகின்றனர். அவ்வளவுதான். அதுதான் அவர்களை பந்தப்படுத்துகிறது. அதுவே மாயை மேலும் அவன் கிருஷ்ண உணர்விற்கு வந்தால், தூய்மையாகி, புலன்கள், உண்மையில் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதற்காக தான் என்று புரிந்து கொண்டால், பிறகு அவன் விடுதலை அடைந்தவன், முக்தி பெற்றவன் ஆவான். முக்த-புருஷ. விடுதலை அடைந்தவன். ஈஹா யஸ்ய ஹரேர் தா3ஸ்யே கர்மணா மனஸா வாசா. ஒருவன் இந்த நிலைக்கு வந்தால், அதாவது "என்னுடைய புலன்கள் புலன்களின் அதிபதியான ஹ்ருஷீகேசருக்கு சேவை செய்வதற்காக உள்ளது...." புலன்களின் அதிபதி உங்களுடைய இதயத்தில் அமர்ந்து இருக்கிறார். இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, ஸர்வஸ்ய சாஹம்' ஹ்ரு'தி3 ஸந்னிவிஷ்ட:: நான் எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். மத்த: ஸ்ம்ரு'திர் ஜ்ஞானம் அபோஹனம்' ச: (ப.கீ 15.15). "என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் ஞானமும் மறதியும் வருகிறது." எனவே ஏன் அப்படி? கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர்...... நான் ஒரு குறிப்பிட்ட வகையில் என்னுடைய புலன்களை பயன்படுத்த விரும்பினால் - அந்த புலன்கள் எனதல்ல, அது கிருஷ்ணருடையது, எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ணர் வாய்ப்பளிக்கிறார். " சரி ,உபயோகப் படுத்திக் கொள்." எனக்கு இந்த நாக்கு கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நான், "கிருஷ்ணா, நான் கழிவை உண்ண விரும்புகிறேன், நான் மலத்தை சுவைக்க விரும்புகிறேன்." என்று விரும்பினால், "சரி" என்று கிருஷ்ணர் கூறுவார். "சரி, நீ ஒரு பன்றியின் உடலை எடுத்துக் கொண்டு, மலத்தை உண்ணலாம்." எஜமானர் ஆகிய கிருஷ்ணர் இருக்கிறார்.
எனவேதான் கிருஷ்ணர் கூறுகிறார், மத்த: ஸ்ம்ரு'திர் ஜ்ஞானம் அபோஹனம்' ச (ப.கீ 15.15). அவர் உங்களுக்கு உடலை அளித்து, உங்களுக்கு நினைவூட்டுகிறார், "எனதன்பு உயிர்வாழியே, நீ கழிவை உண்ண விரும்பினாய் அல்லவா? உனக்கு இப்போது அதற்கு தகுந்த உடல் கிடைத்துள்ளது. இப்போது அதனை பயன்படுத்திக் கொள். இதோ கழிவும் இருக்கிறது." அதைப்போலவே நீங்கள் தேவர்களில் ஒருவராக விரும்பினால் அதற்கும் கிருஷ்ணர் உங்களுக்கு வாய்ப்பளிப்பார். எதுவாக இருந்தாலும்...... 8,4,00(000) வகை உயிர் வாழிகள் உள்ளன. நீங்கள் உங்கள் புலன்களை எந்த வகையான உடலில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினாலும், கிருஷ்ணர் உங்களுக்கு அளிக்கிறார், "இங்கே வா, இதோ இருக்கிறது. இந்த உடலை எடுத்துக் கொள்." ஆனால் நாம் நம்முடைய புலன்களை உபயோகப்படுத்துவதால் உற்சாகப்படுத்த படுகிறோம். இறுதியில் , நாம் புத்தியற்றவர்கள் ஆகிவிடுவோம். எனவேதான் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-த4ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷ2ரணம்' (ப.கீ 18.66): "இப்படி செய்யாதே. உன்னுடைய புலன்கள் எனக்கு சேவை செய்வதற்காகத் தான் உள்ளது. எனவே நீ இவற்றைத் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய். தவறாக பயன்படுத்துவதனால் நீ பல்வேறு உடல்களில் சிக்கிக் கொள்கிறாய் எனவே பௌதிக இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஒரு உடலை ஏற்று, அதனை விடுத்து, மறுபடி இன்னொரு உடலை ஏற்று அதனை விடுத்து, மறுமுறை இன்னொன்றை ஏற்பது என்னும் சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக.... இந்த புலன் இன்பம் அனுபவிக்கும் வழி முறையை கைவிட்டு என்னிடம் சரணடைந்தால் பிறகு நீ காப்பாற்ற படுவாய். இதுவே கிருஷ்ண உணர்வு.