TA/Prabhupada 0910 - நாம் எப்போதும் கிருஷ்ணரால் ஆதிக்கம் செலுத்தப் படுவதற்கு முயற்சிக்கிறோம். அதுவே வெற்ற



730419 - Lecture SB 01.08.27 - Los Angeles

பிரபுபாதா : கிருஷ்ணரிடம் ஆத்மாவிற்கும் உடலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஆன்மீக ஆத்மா மட்டுமே. இப்போது நமக்கு இந்த உடலும், ஆத்மாவும் இருக்கிறது. நான் ஆத்மா, ஆனால் என்னிடம் ஒரு உடல் இருக்கிறது. நாம் உண்மையில் கிருஷ்ணரை நம்பி இருப்பவர் ஆன பிறகு, கிருஷ்ணர் எப்படி சுய திருப்தி அடைந்தவராக இருக்கிறாரோ அதைப்போலவே, நாமும் சுய திருப்தி அடைந்தவராக, கிருஷ்ணருடன் இருக்கலாம். கைவல்ய, கைவல்ய-பதயே நம: (ஸ்ரீமத் பா 1.8.27). மாயாவாத தத்துவவாதிகள், அருவ வாதிகள், பரமனுடன் ஒன்றாகக் கலக்க விரும்புகிறார்கள். எவ்வாறு பரமன் சுய திருப்தி அடைந்தவராக உள்ளாரோ, அதைப்போலவே அவர்களும் அவருடன் ஒன்றாகக் கலந்து, சுய திருப்தி அடைய விரும்புகின்றனர். நம்முடைய தத்துவமும் அதுதான், கைவல்ய, ஆனால் நாம் கிருஷ்ணரை நம்பியிருக்கிறோம். நாம் கிருஷ்ணருடன் ஒன்றாகக் கலப்பது இல்லை. அதுதான் ஒருமை. நாம் கிருஷ்ணரது ஆணைக்குக் கட்டுப்பட ஒப்புக்கொண்டு, எந்த வேறுபாடும் இல்லை என்றால் அதுதான் ஒருமை.

இந்த மாயாவாத தத்துவவாதிகள், நினைப்பது என்னவெனில் "நான் ஏன் என்னுடைய தனிப்பட்ட, தனித்துவமான இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்? நான் ஐக்கியமாகி விட்ட வனாக...... " அது சாத்தியமில்லை. காரணம் நாம் படைக்கப்பட்டதே..... படைக்கப்பட்டது அல்ல, ஆரம்பத்திலிருந்தே நாம் பிரிந்த அங்க துணுக்குகளாகவே உள்ளோம். நாம் பிரிந்த அங்க துணுக்குகள். எனவே தான் பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்: "எனதன்பு அர்ஜுனா, நீ, நான் மற்றும் இந்தப் போர்க்களத்தில் கூடியிருக்கும் அனைவருமே, நாம் அனைவருமே கடந்த காலத்தில் தனிப்பட்ட நபர்களாக இருந்தவர்கள். தற்போதும் கூட நாம் தனிப்பட்ட நபர்கள், மேலும் வருங்காலத்திலும் நாம் தனிப்பட்டவர்களாகவே தொடர்வோம். நாம் அனைவரும் தனிப்பட்ட நபர்கள்." நித்யோ நித்யானாம்' சேதனஷ்2 சேதனானாம் (கட2 உபனிஷத்3 2.2.13). அவர் பூரணமான நித்தியம், எண்ணற்ற உயிர்வாழிகளுள், உன்னதமான உயிர் வாழியாவார். நாம், ஜீவர்கள், எண்ணில் அடங்காதவர்கள், அனந்த நாம் எத்தனை பேர் என்பதற்கு எந்த எண்ணிக்கையும் இல்லை. ஸ அனந்த்யாய கல்பதே. இந்த அனந்த ; எண்ணற்ற உயிர் வாழிகள். மேலும் கிருஷ்ணரும் கூட ஒரு உயிர்வாழியே ஆனால் அவர் பிரதானமானவர். இதுதான் வித்தியாசம். நித்யோ நித்யானா...

ஒரு தலைவரைப் போல. தலைவர் ஒருவர் தான் இருப்பார், பின்பற்றுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அதைப் போலவே, கிருஷ்ணர் உன்னதமான உயிர் வாழி. நாம் அனைவரும் கீழ்ப்படிந்தவர்கள் அவரைச் சார்ந்த உயிர் வாழிகள். இதுதான் வித்தியாசம் சார்ந்தவர்கள், நாம் புரிந்து கொள்ளலாம், கிருஷ்ணர் நமக்கு உணவளிக்காவிடில், நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான். அதுதான் உண்மை. நம்மால் எதையும் உருவாக்க முடியாது. ஏகோ யோ ப3ஹூனாம்' வித3தா4தி காமான் எனவே கிருஷ்ணர் தான் பராமரிப்பவர் மேலும் நாம் பராமரிக்கப் படுகிறோம். எனவே கிருஷ்ணர் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கட்டும், மேலும் நாம் ஆதிக்கம் செலுத்த படுவோம். இதுதான் நம்முடைய இயற்கையான நிலை. எனவேதான், நாம் இந்த பௌதீக உலகத்தில் தவறாக ஆதிக்கம் செலுத்துபவராக ஆக விரும்பினால், அதுதான் மாயை. அதை நாம் கைவிட வேண்டும். அதை நாம் கைவிட வேண்டும். நாம் எப்போதும் கிருஷ்ணரால் ஆதிக்கம் செலுத்தப் படுவதற்கு முயற்சிக்கவேண்டும். அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஹரி போல், எல்லா புகழும் பிரபுபாதாவுக்கே