TA/Prabhupada 0913 - கிருஷ்ணருக்கு இறந்த காலமும், நிகழ் காலமும், எதிர் காலமும் இல்லை. எனவே அவர் நித்தியமானவ



730420 - Lecture SB 01.08.28 - Los Angeles

இந்த முக்தி நிலை அனைவருக்குமானது. ஸமம்' சரந்தம். "நீங்கள் என்னிடம் வாருங்கள். நீங்கள் விடுதலை பெறுவீர்கள்." இப்படி கிருஷ்ணர் கூறவில்லை. இல்லை. அவர் இதனை எல்லோருக்காகவும் திறந்து வைத்துள்ளார். அவர் கூறுகிறார் ஸர்வ-த4ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷ2ரணம்' வ்ரஜ (ப. கீ 18.66). : அவர் அனைவரிடமும் கூறுகிறார். அர்ஜுனனிடம் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதல்ல. அவர் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். பகவத் கீதை அர்ஜுனனுக்காக மட்டும் பேசப்பட்டதல்ல. அர்ஜுனன் ஒரு இலக்கை போன்றவன் தான். ஆனால் இது அனைவருக்காகவும், எல்லா மனிதர்களுக்காகவும் பேசப்பட்டுள்ளது. எனவே ஒருவர் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸமம்' சரந்தம். அவர் பாரபட்சம் காட்டுவதில்லை "நீ வரலாம்..." சூரிய ஒளியைப் போல. சூரிய ஒளி பாரபட்சம் காட்டுவதில்லை. அதாவது : "இதோ ஒரு ஏழை மனிதன், இதோ ஒரு கீழ்த்தரமான மனிதன், இதோ ஒரு பன்றி. இங்கெல்லாம் நான் என்னுடைய ஒளியைப் பரப்ப மாட்டேன்." இல்லை. சூரியன் எல்லோருக்கும் சமமானது. ஒருவர் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி எல்லோருக்கும் திறந்தே இருக்கின்றது, ஆனால் நீங்கள் உங்களுடைய கதவை மூடிக்கொண்டால், நீங்கள் உங்களை செயற்கையான இருளில் வைத்துக் கொள்ள விரும்பினால், அது உங்கள் விருப்பம்.

அதைப்போலவே கிருஷ்ணர் எல்லா இடத்திலும் உள்ளார். கிருஷ்ணர் எல்லாருக்குமானவர். நீங்கள் சரண் அடைந்த உடனேயே, உங்களை ஏற்றுக் கொள்ள கிருஷ்ணர் தயாராக இருக்கிறார். ஸமம்' சரந்தம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கிருஷ்ணர் கூறுகிறார் : மாம்' ஹி பார்த2 வ்யபாஷ்2ரித்ய யே 'பி ஸ்யு: பாப-யோனய: (ப.கீ 9.32). அவர்கள் இது கீழ்த்தரமானது, இது உயர்ந்த தரமானது என்று வேறுபாடுகளை உருவாக்குகின்றனர். எனவே கிருஷ்ணர் கூறுகிறார் "கீழ்த்தரமாக இருந்தாலும் கூட, கீழ்த்தரம் என்று கூறப்பட்டாலும் கூட பரவாயில்லை, அதைப்பற்றி ஒன்றும் இல்லை, அவன் என்னிடம் வந்தால், அவனும் திருநாட்டுக்கு திரும்பி வருவதற்கான திருநாட்டை அடைவதற்கான தகுதியை பெற்றவனாவான்." ஸமம்' சரந்தம்.

மேலும் அவரே நித்தியமான காலம். எல்லாமே காலத்தின் படி தான் நடந்து கொண்டிருக்கிறது. காலம்.... நம்முடைய காலக் கணக்கு, கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இது ஒரு சார்பு. மற்றொரு நாள் நாம் விவாதித்துக் கொண்டிருந்தோம். இந்த கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் எனப்படுவது சார்பு வார்த்தை தான். ஒரு சிறு பூச்சியின் கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் என்னுடைய கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தில் இருந்து வேறுபட்டது. ஒரு சார்பு வார்த்தை . அதைப்போலவே ‌ பிரம்மாவின் கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம், என்னுடைய கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தில் இருந்து வேறுபட்டது. ஆனால் கிருஷ்ணருக்கு கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் என்ற எதுவும் இல்லை. எனவே அவர் நித்தியமானவர். நமக்கு, கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் இருப்பதன் காரணம் நாம் இந்த உடலை மாற்றுவோம். இப்போது நமக்கு இந்த உடல் இருக்கிறது...... இதற்கு ஒரு தேதி உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதியில் என்னுடைய தாய் தந்தையருக்கு நான் பிறந்தேன். இப்போது இந்த உடல் சில காலம் நிலைக்கும். இது வளர்ச்சி அடையும். இது சில உப பொருட்களை விளைவிக்கும். அதன் பிறகு இது முதுமை அடையும். பிறகு தளர்ச்சி அடையும். பிறகு மறைந்து விடும், முடிந்தது. இந்த உடல் அதன் பிறகு முடிந்தது. நீங்கள் வேறு உடலை ஏற்றுக் கொள்வீர்கள். இந்த உடல் முடிந்தது. இந்த உடலின் வரலாறு, கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் முடிந்தது. நீங்கள் வேறு உடலை ஏற்றுக்கொள்வீர்கள். மறுபடி உங்களுடைய கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் தொடங்கும் ஆனால் கிருஷ்ணருக்கு எந்த கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலமும் இல்லை காரணம் அவர் தன்னுடைய உடலை மாற்ற மாட்டார். இதுதான் நமக்கும், கிருஷ்ணருக்குமான வித்தியாசம்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியதைப் போல : "கடந்த காலத்தில் நான் இந்த தத்துவத்தை, பகவத் கீதையை சூரிய தேவனிடம் கூறினேன்." அர்ஜுனனால் இதை நம்பமுடியவில்லை. அர்ஜுனனுக்கு எல்லாம் தெரியும், ஆனால் நமக்காக, நம்முடைய புரிதலுக்காக, அவர் இந்த கேள்வியை கேட்டார் : "கிருஷ்ணா, நாம் சகாக்கள், நாம் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பிறந்தவர்கள். நீ இந்த தத்துவத்தை சூரிய கடவுளுக்கு கூறியதை நான் எப்படி நம்ப முடியும்?" மேலும் அதற்கு பதில் : "எனது அன்பு அர்ஜுனா, நீயும் அப்போது அங்கு இருந்தாய், ஆனால் நீ அதனை மறந்து விட்டாய். நான் மறக்கவில்லை இதுதான் வித்தியாசம்." கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் என்பது மறக்கக்கூடிய மனிதர்களுக்கானது. ஆனால் யாரொருவர் மறக்காதவரோ, நித்தியமாக இருப்பவரோ, அவருக்கு கடந்த நிகழ் மற்றும் எதிர்காலம் என்பது இல்லை. எனவேதான் குந்தி, கிருஷ்ணரை நித்தியமானவர் என்று அழைக்கிறார். மன்யே த்வாம்' காலம். மேலும் அவர் நித்தியமானவர், ஈஷா2னம் பரம ஆளுநர். குந்தி கூறுகிறார் "நான் நினைக்கிறேன்..." கிருஷ்ணரின் நடத்தை மூலம், அவளால் புரிந்து கொள்ள முடிந்தது அதாவது கிருஷ்ணர் நித்தியமானவர், கிருஷ்ணர் பரம ஆளுநர். அநாதி3-நித4னம். அநாதி3-நித4ன... அதற்கு எந்த தொடக்கமும் இல்லை. எந்த முடிவும் இல்லை. எனவேதான் விபு4ம்.