TA/Prabhupada 0915 - சாது என் இதயம் மற்றும் நானே சாதுவின் இதயம்
730421 - Lecture SB 01.08.29 - Los Angeles
பக்தர்: மொழிபெயர்ப்பு: "எம்பெருமானே, உன் திவ்ய லீலைகளை யாவராலும் புரிந்துகொள்ள முடியாது அவை தோற்றத்தில் சாதாரண மனிதனைப் போல் இருக்கின்றன, மற்றும் குழப்பத்தை உண்டாக்குகின்றன. நீ எந்த குறிப்பிட்ட விஷயத்திற்கும் பாரபட்சம் காட்டுவதில்லை, எதற்காகவும் பொறாமையும் கொள்வதில்லை. நீ பாரபட்சம் காட்டுபவன் என மக்கள் வெறும் கற்பனை காண்கிறார்கள்."
பிரபுபாதர்: ஆக பகவத்-கீதையில் பகவான் கூறுகிறார்: பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத்-கீதை 4.8). ஆக இரண்டு காரணங்கள். கடவுள் அவதரிக்கும் போழுது அவர் இரண்டு இலட்சியங்களுடன் வருகிறார். ஒரு இலட்சியம், 'பரித்ராணாய ஸாதூனாம்', மற்றும் வினாஷாய... ஒரு இலட்சியம் உண்மையான திடப்பற்றுடைய பக்தர்களை, சாதுக்களை விடுவிப்பதற்காக.. சாது என்றால் தெய்வத்தன்மை பொருந்தியவர். சாது... நான் பல முறை விவரித்திருக்கிறேன். சாது என்றால் பக்தர். சாது என்கிற சொல்லுக்கு, லௌகீக நேர்மை அயோக்கியதை, அறநெறி அல்லது ஒழுக்கக் கேடு இவைகளுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. பௌதீக செயல்களுடன் அதற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது வெறும் ஆன்மீகச் சொல், சாது. ஆனால் சிலசமயங்களில் நாம் "சாது" என்றால் ஒருவரின் நன்மை, அறநெறி, என்று ஊகிக்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில் "சாது" என்பது ஆன்மீக தளத்தில் உள்ளது. பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள். ஸ குணான் ஸமதீத்யைதான் (பகவத்-கீதை 14 .26). சாது என்பவன் பௌதீக குணங்களுக்கு அப்பால் பட்டவன். ஆக 'பரித்ராணாய ஸாதூனாம்' (பகவத்-கீதை 4.8). பரித்ராணாய என்றால் பாதுகாத்து விடுவிப்பது. ஒரு சாது ஏற்கனவே (பௌதீகத்திலிருந்து) விடுபட்டவராக இருந்தால், அவர் ஆன்மீக தளத்தில் தான் இருக்கிறார். பிறகு விடுவிப்பதற்கு என்ன தேவை? இது தான் கேள்வி. ஆக 'விடம்பனம்' என்கிற வார்த்தை உபயோகப் பட்டிருக்கிறது. இது குழப்பமாக இருக்கிறது. இது முறண்பாடானது. முரண்பாடான தோற்றம் அளிக்கிறது. சாது என்பவர் ஏற்கனவே விடுபட்டவர் என்றால்... ஆன்மீக நிலை என்றால் அவர் பௌதீக இயற்கையின் மூன்று குணங்கள் அதாவது நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமை குணங்களின் கட்டுபாட்டில் இருப்பதில்லை. ஏனென்றால் பகவத்-கீதையில் இது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது: ஸ குணான் ஸமதீத்யைதான் (பகவத்-கீதை 14 .26). அவர் பௌதீக குணங்களை கடந்து விடுகிறார். ஒரு சாது அதாவது பக்தர். பிறகு விடுபடுவதற்கு என்ன அவசியம்? அவரை மீட்க தேவையே இல்லையே, சாதுவை, ஆனால் அவர் பரம புருஷ பகவானை நேருக்கு நேர் காண மிகு ஆவலாக இருப்பதனால், அவரது மனமார்ந்த ஆசை, அதனால் கிருஷ்ணர் வருகிறார். விடுபடுவதற்காக அல்ல. அவர் ஏற்கனவே விடுபட்டவர் ஆவார். பௌதீகத்தின் பிடியிலிருந்து அவர் ஏற்கனவே விடுபட்டவர். ஆனால் அவரை திருப்தி படுத்துவதற்காக கிருஷ்ணர் எப்பொழுதும்... ஒரு பக்தன் எல்லா வகையிலும் பகவானை திருப்தி படுத்த விரும்புவதுப் போல், பக்தனை விட அதிகமாக, பகவான், பக்தனை திருப்தி படுத்த விரும்புகிறார். இது தான் அன்பின் பரிமாற்றம். உதாரணமாக, உங்கள் சாதாரண வாழ்வில் நிகழும் பரிமாற்றங்களிலும், நீங்கள் யாரையாவது நேசித்தால், அவனை அல்லது அவளை திருப்தி படுத்துவேண்டும் என்கிற எண்ணம் உங்களில் இருக்கிறது. அதுபோலவே, அவள் அல்லது அவனுக்கு அதன் பரிமாற்றம் செய்ய எண்ணம் ஏற்படுகிறது. ஆக அந்த அன்பு பரிமாற்றம் செய்யும் உணர்வு இந்த ஜட உலகிலேயே இருந்தால், ஆன்மீக உலகில் எவ்வளவு அதிகமாக அது இருக்கும்? இவ்வாறு ஒரு பதம் இருக்கிறது: "சாது என் இதயம் மற்றும் நானே சாதுவின் இதயம்." சாது எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார் மற்றும் கிருஷ்ணர் எப்பொழுதும் தன் பக்தனை, சாதுவை பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்.