TA/Prabhupada 0922 - நாம் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறோம்: தயவுசெய்து ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்யுங்கள், ஜ

(Redirected from TA/Prabhupada 0922 -)


730422 - Lecture SB 01.08.30 - Los Angeles

ஏதோ ஒரு செய்தித்தாளில் ஒரு கேலிச் சித்திரம் இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். மான்ட்ரியலிலிருந்தா அல்லது இங்கிருந்தா, எனக்கு நினைவில்லை. ஒரு வயதான பெண்மணியும் அவள் கணவனும் நேருக்கு நேராக அமர்ந்து கொண்டிருந்தனர். அவள் தன் கணவனை வேண்டுகிறாள்: "ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்யுங்கள்." அவள் கணவனும் பதிலளிக்கிறான் : "முடியாது, முடியாது, முடியாது." (சிரிப்பு) எனவே இது தான் நடந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறோம் : "தயவுசெய்து ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்யுங்கள்." அவர்களும் பதில் அளிக்கின்றனர் : "முடியாது, முடியாது, முடியாது." (சிரிப்பு) இது அவர்களுடைய துரதிருஷ்டம், இது அவர்களுடைய துரதிருஷ்டம்.

எப்படி இருந்தாலும் நம்முடைய கடமை, இந்த எல்லா துரதிர்ஷ்டசாலிகளையும் அதிர்ஷ்டசாலிகள் ஆக்குவதே. இதுதான் நம்முடைய குறிக்கோள். இதற்காகத்தான் நாம் வீதி எங்கும் சென்று ஜபம் செய்கிறோம். அவர்கள் சொல்லலாம், "முடியாது," நாம் தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருக்கிறோம் இதுதான் நம்முடைய வேலை. ஏதோ ஒரு வகையில், அவன் கைகளில் நாம் சில இலக்கியங்களை திணிக்கிறோம். அவனும் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுகிறான். அவன், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல வழிகளில், பாவ வழிகளில் பாழ் படுத்தி இருப்பான், ஆனால், அவன் ஒரு புத்தகத்தை வாங்கினாலும், அதன் விலை என்னவாக இருந்தாலும், அவனுடைய பணம் சரியாக உபயோகப்படுத்தப்பட்டது. கிருஷ்ண உணர்வின் தொடக்கம் அங்குதான் இருக்கிறது. தன்னுடைய பணத்தை, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்திற்காக அளிப்பதால், அவன் சில ஆன்மீக நன்மைகளை அடைகிறான். அவனுக்கு நஷ்டம் இல்லை. அவன் சில ஆன்மீக நன்மைகளை அடைகிறான். எனவே நம்முடைய வேலை, எப்படியாவது, அனைவரையும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அழைத்து வருவதுதான். அவனுக்கு நன்மை கிடைக்கும்.

இந்த வேலை மனித சமுதாயத்தில் மட்டும் நடப்பதல்ல. கிருஷ்ணரின் திட்டம் மிகப் பெரியது.... கிருஷ்ணர் மனிதராக அல்லது, பகவான் கிருஷ்ணர் ஆக தோன்றியபோது, அவர் பரம புருஷ பகவான் என்பதை அனைவரும் அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலவே நடந்து கொண்டிருந்தார். சாதாரணமல்ல. தேவை ஏற்பட்ட போது அவர், தான் பரமபுருஷ பகவான் என்பதை நிரூபித்தார். ஆனால் பொதுவாக அவர் சாதாரண மனிதன் என்று அறியப்பட்டார்.

எனவேதான் சுகதேவ கோஸ்வாமி கிருஷ்ணரை வர்ணிக்கும்போது, ஒரு வர்ணனையில், அவர் இடைச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வர்ணிக்கிறார். சுகதேவ் கோஸ்வாமி, யார் இந்த இடைச் சிறுவன்? என்று சுட்டிக் காட்டுகிறார். அவர் கூறுகிறார் இத்தம்' ஸதாம்... ஸுகானுபூத்யா (ஸ்ரீ. பா. 01.12.11). : ஸதாம். இந்த அருவவாதிகள், அருவப்பிரம்மனை தியானிக்கின்றனர், அதில் சில உன்னத ஆனந்தத்தையும் உணர்கின்றனர். மேலும் சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார் அந்த உன்னத ஆனந்தத்தின் தோற்றுவாய் , கிருஷ்ணர், இங்கு இருக்கிறார். அஹம்' ஸர்வஸ்ய ப்ரபவ: (ப.கீ. 10.8). கிருஷ்ணரே எல்லாவற்றின் மூலமும். எனவேதான் அருவவாதிகள், அருவப்பிரம்மன் மீதான தியானத்தினால் உணர முயற்சிக்கும் உன்னத ஆனந்தமும், சுகதேவ் கோஸ்வாமி கூறுகிறார் : இத்தம்' ஸதாம்' ப்ரஹ்ம-ஸுகானுபூத்யா (ஸ்ரீ. பா. 10.12.11). பிரம்ம-சுகம், பிரம்மனை உணரும் உன்னத ஆனந்தம். தாஸ்யம்' கதானாம்' பர-தைவதேன. பிரம்ம சுகத்தின் தோற்றுவாயனவர் இங்கு இருக்கிறார் மேலும் தாஸ்யம்' கதானாம்' பர-தைவதேன. தாஸ்யம்' கதானாம்' என்றால் பக்தர்கள். பகவானுக்கு சேவை செய்ய ஒரு பக்தன் எப்போதும் தயாராக இருக்கிறான். தாஸ்யம்' கதானாம்' பர-தைவதேன. பரம புருஷ பகவான். பிரம்ம சுகத்தின் தோற்றுவாய், இங்கு இருக்கிறார், அவரே ஆதியான பரமபுருஷ பகவான். மேலும் மாயாஷ்ரிதானாம்' நர-தாரகேண. மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர் சாதாரண சிறுவன். எனவே யே யதா மாம்' ப்ரபத்யந்தே (ப.கீ. 4.11). அவர் இந்தக் கருத்தின்படி இருப்பார்.