TA/Prabhupada 0941 - எங்கள் மாணவர்களில் சிலர், 'நான் ஏன் இந்த இயக்கத்தில் பணியாற்ற வேண்டும்



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

என்று நினைக்கிறார்கள். எனவே, இங்கே இந்த பௌதிக உலகில், அஸ்மின் பவே, பவே 'ஸ்மின், ஸப்தமே அதிகார. அஸ்மின், இந்த பௌதிக உலகில். பவே 'ஸ்மின் க்லிஷ்யமானானாம். எல்லோரும் ... எல்லோரும், ஒவ்வொரு உயிர்வாழிகளும் கடுமையாக உழைக்கிறார்கள். கடினமானதோ அல்லது மென்மையானதோ, அது ஒரு பொருட்டல்ல; ஒருவர் வேலை செய்ய வேண்டும். அது ஒரு பொருட்டல்ல. நாமும் வேலை செய்வது போல. இது மென்மையானதாக இருக்கலாம், ஆனால் அதுவும் வேலை தான். ஆனால் அதுபயிற்சி செய்வது; எனவே அது வேலை. இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது, வேலை செய்யுங்கள். பக்தி உண்மையில் பலன் பெறும் செயல்கள் அல்ல. அது அப்படி தோன்றுகிறது. இதுவும் செயல்படுகிறது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் பக்தி சேவையில் ஈடுபடும்போது நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். மற்றும் பௌதிக வேலையில், நீங்கள் சோர்வாக உணருவீர்கள். அதுதான் வித்தியாசம், நடைமுறை. பௌதிக ரீதியாக, நீங்கள் ஒரு சினிமா பாடலை எடுத்து கோஷமிடுங்கள், அரை மணி நேரம் கழித்து நீங்கள் சோர்வடைவீர்கள். மற்றும் ஹரே கிருஷ்ணா, இருபத்தைந்து மணி நேரம் கோஷமிடுங்கள், நீங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டீர்கள். இல்லையா? நடைமுறையில் பாருங்கள். ஒருவரின் பௌதிக பெயரை நீங்கள் எத்தனை முறை கோஷமிடுவீர்கள்? "மிஸ்டர் ஜான், மிஸ்டர் ஜான், மிஸ்டர் ஜான்" என்று. (சிரிப்பு) பத்து முறை, இருபது முறை, முடிந்தது. ஆனால் க்ருஷ்ண? "க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண," கோஷமிடுங்கள் நீங்கள் அதிக ஆற்றலைப் பெறுவீர்கள். அதுதான் வித்தியாசம். ஆனால் முட்டாள்கள் நினைப்பது, அவர்களும் எங்களைப் போலவே வேலை செய்கிறார்கள், அவர்களும் எங்களைப் போலவே செய்கிறார்கள். இல்லை, அது இல்லை.

எனவே அவர்கள் ... புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், பௌதிக இயல்பு என்றால் இந்த பௌதிக உலகில் இங்கு வந்தவர்கள். இங்கு வருவது நம் வேலை அல்ல, ஆனால் நாம் இங்கு வர விரும்பினோம். அதுவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. க்லிஷ்யமானானாம் அவித்யா-காம-கர்மபி:. அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? வித்யா இல்லை. அவித்யா என்றால், அறியாமை. அந்த அறியாமை என்ன? காம. காம என்றால் ஆசை என்று பொருள். அவை கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காகவே உள்ளன, ஆனால் "நான் ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்?" நான் கிருஷ்ணராக ஆகிவிடுவேன்." இது அவித்யா. இது அவித்யா. சேவை செய்வதற்கு பதிலாக ... அது இயற்கையானது. சில நேரங்களில் அது வரும், ஒரு வேலைக்காரன் எஜமானருக்கு சேவை செய்வது போல். அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார், "நான் அவ்வளவு பணத்தை பெற முடிந்தால், நான் ஒரு எஜமானராக ஆக முடியும்." அது இயற்கைக்கு மாறானது அல்ல. எனவே, உயிர்வாழிகள் நினைக்கும் போது...... அவர் க்ரிஷ்ணர் இடமிருந்து வருவதாக நினைத்தால், க்ருஷ்ண புலி' ஜீவ போக-வாஞ்சா கரே. அவர் கிருஷ்ணரை மறக்கும்போது, ​​அதாவது, பௌதிக வாழ்க்கை என்று சொல்ல வேண்டும். அது பௌதிக வாழ்க்கை. ஒருவர் கிருஷ்ணரை மறந்தவுடன். நாம் பார்க்கிறோம், பல ... பலர் அல்ல, எங்கள் மாணவர்களில் சிலர், "இந்த இயக்கத்தில் நான் ஏன் பணியாற்ற வேண்டும்? ஓ, நான் சென்று விடுகிறேன்." அவர் போய்விடுகிறார், ஆனால் அவர் என்ன செய்கிறார்? அவர் ஒரு மோட்டார் டிரைவர் ஆகிறார், அவ்வளவுதான். பிரம்மசாரி, சந்நியாசி என மரியாதை பெறுவதற்கு பதிலாக, அவர் சாதாரண தொழிலாளியைப் போலவே வேலை செய்ய வேண்டும்.