TA/Prabhupada 0947 - நமக்கு அபரிமிதமான சுதந்திரம் கிடைத்துள்ளது, ஆனால் இப்போது நாம் இந்த உடலால் நிபந்தனைக
(Redirected from TA/Prabhupada 0947 -)
720831 - Lecture - New Vrindaban, USA
நவீன விஞ்ஞானிகளைப் போலவே, அவர்கள் மற்ற கிரகங்களுக்கும் செல்ல முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்கள் நிபந்தனைக்குட்பட்டவர்கள், அவர்களால் செல்ல முடியாது. நம்மால் பார்க்க முடிகிறது. நமக்கு முன் பல லட்சம் மற்றும் பல ஆயிரம் கோடி கோள்கள் உள்ளன, சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய். சில நேரங்களில், "நான் எப்படி அங்கு செல்ல முடியும்" என்று விரும்புகிறோம். ஆனால் நான் நிபந்தனைக்குட்பட்டதால், நான் சுதந்திரமாக இல்லை என்பதால், என்னால் செல்ல முடியாது. ஆனால் முதலில், நீங்கள் ஆன்மீக ஆத்மா என்பதால், முதலில் நீங்கள் எந்த வழியிலும் செல்ல சுதந்திரமாக இருந்தீர்கள். நாரத முனியைப் போல. நாரத முனி எல்லா இடங்களிலும் நகர்கிறார்; அவர் விரும்பும் எந்த கிரகத்திற்கும் அவர் செல்ல முடியும். இன்னும், இந்த பிரபஞ்சத்திற்குள் சித்தலோகா என்று அழைக்கப்படும் ஒரு கிரகம் உள்ளது. அந்த சித்தலோகா, சித்தலோகாவில் வசிப்பவர்கள், எந்த விமானமும் இல்லாமல் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு பறக்க முடியும். யோகிகள், ஹட-யோகீகள் கூட, பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் எங்கிருந்தும் எந்த இடத்திற்கும் செல்லலாம். யோகிகள், அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து உடனடியாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அவர்கள் இங்கே அருகிலுள்ள ஏதோ ஒரு நதியில் மூழ்கி, அவர்கள் இந்தியாவில் ஏதோ ஒரு நதியில் எழுந்திருக்கலாம். அவர்கள் இங்கே மூழ்கி அங்கே எழுந்திருக்கிறார்கள். இவை யோக சக்திகள்.
எனவே நமக்கு அபரிமிதமான சுதந்திரம் கிடைத்துள்ளது, ஆனால் இப்போது நாம் இந்த உடலால் நிபந்தனைக்குட்பட்டுள்ளோம். எனவே மனிதனின் வாழ்க்கையில் இது ஒரு வாய்ப்பு நம் அசல் சுதந்திரத்தை திரும்பப் பெற. அது கிருஷ்ணபக்தி என்று அழைக்கப்படுகிறது. சுதந்திரம். இந்த ஜட உடலால் மறைக்கப்படாமல், நம் ஆன்மீக உடலைப் பெற்றபோது.... இந்த ஜட உடலுக்குள் நம் ஆன்மீக உடலைப் பெற்றுள்ளோம். மிகவும் சிறியது. அதுதான் எனது உண்மையான அடையாளம். இப்போது நான் இரண்டு வகையான ஜட உடல்களால் மூடப்பட்டிருக்கிறேன். ஒன்று சூக்ஷ்ம உடல் என்றும் மற்றொன்று ஸ்தூல உடல் என்றும் அழைக்கப்படுகிறது. சூக்ஷ்ம உடல் - மனம், புத்திசாலித்தனம், மற்றும் அகங்காரம், தவறான அகங்காரம், ஸ்தூல உடல் - பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் ஆகியவற்றால் ஆனது, இந்த உடல். எனவே இரண்டு வகையான உடல் நமக்கு கிடைத்துள்ளது. நாம் மாறுகிறோம். பொதுவாக நாம் ஸ்தூல உடலைக் காணலாம்; சூக்ஷ்ம உடலை நாம் பார்க்க முடியாது. எல்லோருக்கும் தெரிந்திருப்பது போல ... உங்கள் மனதை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எனக்கு மனம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், எனக்கு புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆனால் உங்கள் மனதை என்னால் பார்க்க முடியாது, உங்கள் புத்திசாலித்தனத்தை என்னால் பார்க்க முடியாது. உங்கள் உறுதியை என்னால் பார்க்க முடியவில்லை. உங்கள் எண்ணங்கள், சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பத்தை என்னால் பார்க்க முடியாது. இதேபோல், நீங்கள் பார்க்க முடியாது. எனது இந்த ஸ்தூல உடலை -நிலம் , நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றால் ஆன உடலை பார்க்கிறீர்கள், உங்கள் ஸ்தூல உடலை என்னால் பார்க்க முடியும். எனவே, இந்த ஸ்தூல உடல் மாற்றப்பட்டு நீங்கள் கொண்டு செல்லப்படும்போது, நீங்கள் மரணம் என்று அழைக்கப்படும் சூக்ஷ்ம உடலால் செல்கிறீர்கள். "ஓ, என் தந்தை போய்விட்டார்" என்று நாம் சொல்கிறோம். உங்கள் தந்தை போய்விட்டார் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உடல் இங்கே கிடக்கிறது. ஆனால் உண்மையில் அவரது தந்தை சூக்ஷ்ம உடலால் போய்விட்டார்.