TA/Prabhupada 0948 - இந்த யுகம் கலியுகம் என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் நல்ல யுகம் அல்ல. கருத்து வேறுப
(Redirected from TA/Prabhupada 0948 -)
720831 - Lecture - New Vrindaban, USA
இரவில், நாம் நல்ல குடியிருப்பில் தூங்குகிறோம், ஆனால் சூக்ஷ்மமான உடல் என்னை ஒரு மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. சில நேரங்களில் நான் வந்திருக்கிறேன், கனவில், நான் ஒரு மிக உயரமான மலையின் உச்சிக்கு வந்து , நான் கீழே விழுகிறேன். உண்மையில், என் ஸ்தூல உடல் ஒரு நல்ல, வசதியான குடியிருப்பில் தூங்குகிறது, ஆனால் சூக்ஷ்ம உடல் என்னைச் சுமக்கிறது. நமக்கு தினசரி அனுபவம் உள்ளது. இதேபோல், மரணம் என்பது நாம் ஸ்தூல உடலை மாற்றுகிறோம். உங்களிடம் சட்டை மற்றும் கோட் உள்ளதைப் போல. எனவே நீங்கள் கோட் மாற்றுகிறீர்கள் ஆனால் உங்கள் சட்டையை அப்படியே அணிகிறீர்கள். நீங்கள் அதை பொதுவாக செய்கிறீர்கள். இதேபோல், நான் என் சூக்ஷ்மமான உடலை வைத்திருக்கிறேன், என் ஸ்தூல உடலை விட்டுவிடுகிறேன்; அது மரணம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையின் விதிகளால் நான் மற்றொரு தாயின் வயிற்றில் உள்ள சூக்ஷ்மமான உடலால் சுமக்கப்படுகிறேன், நான் மற்றொரு ஸ்தூல உடலை வளர்த்து கொள்கிறேன், தாயால் வழங்கப்பட்ட பொருட்களால். உடல் தயாரானதும், நான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருகிறேன் நான் அந்த சூக்ஷ்மமான மற்றும் ஸ்தூல உடலுடன் மீண்டும் வேலை செய்கிறேன். மேலும் பாகவத-தர்மம் என்பது நாம் இதை மீற வேண்டும் ஸ்தூல மற்றும் சூக்ஷ்மமான உடல் இரண்டும்; ஆன்மீக உடலுக்கு செல்ல வேண்டும். இது மிகவும் விஞ்ஞானமானது. நாம் ஆன்மீக உடலுக்கு வந்தவுடன், முக்த ஸங்க, ஸ்தூல மற்றும் சூக்ஷ்மமான உடலில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாம் நம் உண்மையான உடல், ஆன்மீக உடலுக்கு வருகிறோம், பின்னர் உண்மையில் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் உணர்கிறோம்.
எனவே கிருஷ்ண பக்தியின் இந்த செயல்முறை மனித சமுதாயத்திற்கு மிக உயர்ந்த நம்பிக்கையாகும் ஏனென்றால் அது மனிதனை ஆன்மீக உடலின் தளத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறது - சூக்ஷ்ம மற்றும் ஸ்தூல உடலைக் கடந்து. அதுவே மிக உயர்ந்த பரிபூரணம். மனித வாழ்க்கை என்பது அந்த தளத்திற்கு வருவதற்கானது, ஆன்மீக தளம், வாழ்க்கையின் ஸ்தூல மற்றும் பௌதிக உடல் கருத்தை கடந்து. அது சாத்தியம். இந்த யுகத்தில் இது எளிதானது. இந்த கலியுகம் என்று அழைக்கப்படும் யுகம், இது மிகவும் நல்ல யுகம் அல்ல. வெறுமனே கருத்து வேறுபாடு, சண்டை, சண்டை, தவறான புரிதல். இந்த யுகம் இவை நிறைந்தது, இந்த நிகழ்வுகள் அனைத்தும். எனவே ஆன்மீக தளத்திற்கு வருவது இந்த யுகத்தில் மிகவும் கடினம். முன்பு, அது அவ்வளவு கடினமாக இல்லை. வேத செயல்முறை மூலம் மக்கள் மிக எளிதாக பயிற்சி பெற்றனர். ஆனால் இப்போது மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் ஸ்தூல உடலில் ஆர்வமாக உள்ளனர், அல்லது இன்னும் கொஞ்சம் முன்னேறியவர் என்றால், சூக்ஷ்மமான உடல். ஆனால் அவர்களிடம் ஆன்மீக உடல் பற்றி தகவல் இல்லை. கல்வியின் முன்னேற்றம் இருந்தாலும், ஆன்மீக உடலைப் பற்றி எந்த கல்வியும் இல்லை. அவர்கள் வெறுமனே ஸ்தூல பொருள் மற்றும் சூக்ஷ்மமான உடலில் அக்கறை கொண்டுள்ளனர். எனவே இந்த இயக்கம், கிருஷ்ண பக்தி இயக்கம், மிக முக்கியமான இயக்கம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்ததில் சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.