TA/Prabhupada 0955 - பெரும்பான்மையான உயிரினங்கள், ஆன்மீக உலகில் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் வீழ்கிற

(Redirected from TA/Prabhupada 0955 -)


750623 - Conversation - Los Angeles

டாக்டர் மைஸ்: ஆன்மீக வானத்தில் இருந்த அனைத்து ஆத்மாக்களும் ஆன்மீக வானத்திலிருந்து ஒரே நேரத்தில் விழுந்ததா, அல்லது வெவ்வேறு நேரங்களில் விழுந்ததா, அல்லது எப்போதும் நல்ல, முட்டாள்தனம் இல்லாத ஆத்மாக்கள் அங்கே இருக்கிறதா, அவர்கள் கீழே விழுவதில்லையா?

பிரபுபாதர்: இல்லை, உள்ளன ... பெரும்பான்மை, தொண்ணூறு சதவீதம், அவர்கள் எப்போதும் நல்லவர்கள். அவர்கள் ஒருபோதும் கீழே விழ மாட்டார்கள்.

டாக்டர் மைஸ்: அப்படியானால் நாம் பத்து சதவீதத்தில் இருக்கிறோம்?

பிரபுபாதர்: ஆம். அல்லது அதை விட குறைவாக. பொருள், முழு பௌதிக உலகில், எல்லா உயிர்வாழிகளும்... சிறைச்சாலையில் சில மக்கள் இருப்பதைப் போலவே இவ்வுலகில் உள்ளனர். ஆனால், அவர்கள் பெரும்பான்மையாக இல்லை. பெரும்பான்மையான மக்கள், அவர்கள் சிறைச் சாலைக்கு வெளியே உள்ளனர். இதேபோல், பெரும்பான்மையான உயிர்வாழிகள், கடவுளின் ஒரு பகுதி, அவர்கள் ஆன்மீக உலகில் உள்ளனர். ஒரு சிலரே கீழே விழுகின்றனர்.

டாக்டர் மைஸ்: ஒரு ஆத்மா முட்டாள்தனமாக வீழ்ச்சியடையப் போகிறது என்பது கிருஷ்ணருக்கு முன்பே தெரியுமா?

பிரபுபாதர்: கிருஷ்ணர்? ஆம், அவர் எல்லாம் அறிந்தவர் என்பதால் கிருஷ்ணர் அறிந்திருக்கலாம்.

டாக்டர் மைஸ்: இன்னும் அதிக ஆத்மாக்கள் வீழ்ந்து கொண்டே இருக்கிறதா?

பிரபுபாதர்: எல்லா நேரத்திலும் இல்லை. ஆனால் கீழே விழும் போக்கு உள்ளது, அனைவருக்கும் அல்ல, ஆனால் சுதந்திரம் இருப்பதால்...... சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த எல்லோரும் விரும்புவதில்லை. அதே எடுத்துக்காட்டு: ஒரு நகரத்தை அரசாங்கம் கட்டுவது போல, மேலும் சிறைச்சாலையையும் அமைக்கிறது, யாரோ ஒருவர் குற்றவாளியாக இருப்பார் என்று அரசாங்கத்திற்கு தெரியும், எனவே அவர்களின் தங்குமிடமும் கட்டப்பட வேண்டும். புரிந்து கொள்வது மிகவும் எளிதானது. நூறு சதவீத மக்கள் தொகையும் குற்றவாளிகளாக இருக்காது, ஆனால் அவற்றில் சில இருக்கும் என்று அரசாங்கத்திற்குத் தெரியும். இல்லையென்றால் அவர்கள் ஏன் சிறைச்சாலையையும் கட்டுகிறார்கள்? ஒருவர், "குற்றவாளி எங்கே? நீங்கள் கட்டுகின்றீர்களே ..." என்று கூறலாம். குற்றவாளிகள் இருப்பார்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரியும். எனவே சாதாரண அரசாங்கத்தால் அறிய முடிந்தால், கடவுளால் ஏன் அறிய முடியாது? ஏனெனில் போக்கு உள்ளது.

டாக்டர் மைஸ்: அந்த போக்கின் மூலம் ...?

பிரபுபாதர்: ஆம்.

டாக்டர் மைஸ்: அந்த போக்கு எங்கிருந்து வருகிறது?

பிரபுபாதர்: போக்கு என்றால் சுதந்திரம் என்று பொருள். எனவே சுதந்திரம் என்றால் ஒருவர் அதை சரியாகப் பயன்படுத்தலாம், ஒருவர் அதை தவறாகப் பயன்படுத்தலாம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதுவே சுதந்திரம். நீங்கள் அதை ஒரு வழி பாதையாக மட்டுமே செய்தால், நீங்கள் கீழே விழ முடியாது, அது சுதந்திரம் அல்ல. அது பலவந்தம். எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யதேச்சஸி ததா குரு (ப.கீ. 18.63): "இப்போது நீ விரும்பியதைச் செய்."