TA/Prabhupada 0957 - முகம்மது சொல்கிறார் அவர் கடவுளின் சேவகன் என்று. இயேசுகிறிஸ்து சொல்கிறார் அவர் கடவுளி



750624 - Conversation - Los Angeles

பிரபுபாதர்: முகம்மது சொல்கிறார் அவர் கடவுளின் சேவகன் என்று. இயேசுகிறிஸ்து சொல்கிறார் அவர் கடவுளின் மைந்தன் என்று. கிருஷ்ணர் சொல்கிறார், "நான் கடவுள்." என்று. வித்தியாசம் எங்கு இருக்கிறது? மைந்தனும் அதையே சொல்லுவான், சேவகனும் அதையே சொல்லுவான், மேலும் தந்தையும் அதையேதான் சொல்லுவான். சமயவியல் என்பது கடவுளை பற்றி அறிவது அவருடைய ஆணைகளின் கீழ்படி நடப்பது. அதுவே என்னுடைய புரிதல். சமயவியல் கடவுள் யாரென்று ஆராய்வதல்ல. அது சமய ஆராய்ச்சி. எனவே நீங்கள் சமய வியலாளராக இருந்தால், கடவுள் யார் என்றும் அவரது ஆணை என்னவென்றும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் டாக்டர் ஜூடா?

டாக்டர் ஜூடா: மன்னிக்க வேண்டும்?

பிரபுபாதர்: இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

டாக்டர் ஜூடா: நீங்கள் சொல்வது சரி என்றே நினைக்கின்றேன். அதாவது... கண்டிப்பாக, இன்றைய காலகட்டத்தில், நம்மில் பலருக்கு கடவுள் யார் என்றே தெரிவதில்லை.

பிரபுபாதர்: ஆமாம். பின்னர் அவன் சமயவியலாளரன் அல்ல. சமய ஆராய்ச்சியாளன்.

டாக்டர் ஜூடா: நமக்கு கடவுளைப் பற்றி தெரியும், ஆனால் கடவுளை தெரியாது. நான் ஒத்துக் கொள்கிறேன்.

பிரபுபாதர்: பின்னர் அது தான் சமய ஆராய்ச்சியாளன். சமய ஆராய்ச்சியாளர்கள், ஏதோ உயரிய ஒன்று இருக்கிறது என்று எண்ணுகின்றனர். ஆனால் யார் அந்த உயர்ந்தவர், அதனையே தேடுகின்றனர். அதேதான். ஒரு சிறுவனுக்கு தனக்கு "தந்தை இருக்கிறார்" என்று தெரியும், ஆனால் "யார் அந்த தந்தை" அது தெரியாது. "ஓ அதை நீ உனது தாயிடம் கேட்கவேண்டும்." அவ்வளவுதான். அவனால் தானே அதனை புரிந்து கொள்ள முடியாது. எனவே எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், உனக்கு கடவுளை தெரியாவிட்டால், இதுவும் கடவுள், கிருஷ்ணா, இவரை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? முதலில் உனக்கே தெரியாது. நான் அதை எடுத்துக் கூறினால் "இதோ கடவுள் இருக்கிறார்" என்று நீ ஏன் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது? விடை என்ன? நாம் கடவுளை படைக்கின்றோம், "இதோ கடவுள்" என்று. மேலும் பெரும் ஆச்சாரியர்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ராமானுஜ ஆச்சாரியார், மத்வாச்சாரியார், விஷ்ணு ஸ்வாமி ,பகவான் சைதன்யர், நமது குரு பரம்பரையில் எனது குரு மகாராஜர்- அதையே நான் பிரச்சாரம் செய்கிறேன் "இதுவே கடவுள்." நான் என் மனம் போன போக்கில் ஒரு கடவுளை காட்டவில்லை. அங்கீகரிக்கப்பட்ட ஒருவரைத்தான் கடவுளாக காட்டுகிறேன். எனவே நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? அதில் என்ன சிரமம்?

டாக்டர் ஜூடா: என்னைப் பொருத்தவரை சிரமம் என்னவென்றால் அதுவும் முக்கியமாக மூத்த தலைமுறையினருக்கு, நாம் சில வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம்....

பிரபுபாதர்: அப்படியென்றால் கடவுளை நீங்கள் முக்கியமாக கருதவில்லை.

டாக்டர் ஜூடா: மாறுவது சற்றே கடினம். இதுதான் மிகப்பெரிய பிரச்சனை.

பிரபுபாதர்: அப்படி என்றால் நீங்கள் அதை முக்கியமாக கருதவில்லை. அதனால்தான் கிருஷ்ணர் கூறினார், சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் (ப.கீ. 18.66). "நீங்கள் கைவிட வேண்டும்."

டாக்டர் ஜூடா: அது சரிதான்.

பிரபுபாதர்: ஏனெனில் கைவிடுவதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால், உங்களால் கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது.

டாக்டர் ஆர்: டாக்டர் கராஸ்லேயிடம் நீங்கள் சற்று நியாயம் இல்லாமல் நடந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை என்று எனக்கு தோன்றுகிறது, கடவுளை நாடி அறிந்துகொள்வது மிக மிக முக்கியமானது தான், ஆனால் மற்றவர் அல்லது மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்வதே தவறு என்று சொல்வது சரி என்று எனக்கு தோன்றவில்லை...

பிரபுபாதர்: இல்லை, தவறு என்று நான் சொல்லவில்லை. கடவுளை நீ முக்கியமாக கருதினால் இதோ கடவுள் இருக்கிறார் என்றே நான் சொல்கிறேன்.

டாக்டர் ஆர்: அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன மக்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி எப்படி நினைத்தார்கள் என்பதை ஆராய்ச்சி செய்ய.

பிரபுபாதர்: இல்லை, அது பரவாயில்லை. நான் முன்பே சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒன்றைத் தேடும்போது, அது உங்களுக்கு கிடைத்தால், அதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

டாக்டர் ஆர்: இயேசு கிறிஸ்து கிருஷ்ணர் தனது தந்தை என்று கூறினார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பிரபுபாதர்: பெயர் வேறாக இருக்கலாம், அதாவது எங்கள் ஊரில், ஒரு பூவுக்கு நான் ஒரு பெயர் சொல்வேன் நீங்கள் ஒரு பெயர் சொல்வீர்கள். ஆனால் விஷயம் ஒன்றுதான். பெயர் பொருட்டல்ல. நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படி வேறு விதத்தில் கூட கூறலாம். ஆனால் கடவுள் ஒருவர்தான் கடவுள் இருவராக இருக்க முடியாது. அவருக்குப் பல பெயர்களை நீங்கள் கொடுக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் கடவுள் ஒருவரே. கடவுள் இருவர் அல்ல.