TA/Prabhupada 0966 - கண்களுக்கு பக்தி என்னும் களிம்பை தேய்த்துவிட்டு பார்க்கும்போது கடவுளைப் பார்க்கலாம
(Redirected from TA/Prabhupada 0966 -)
720527 - Lecture BG The Yoga System - Los Angeles
இந்த யோக முறைக்குப் பெயர், பக்தி யோகம், கிருஷ்ணர் உடனான பற்றை எப்படி அதிகரித்துக் கொள்வது, என்பதை நமது கிருஷ்ணர் பக்தி இயக்கம் கற்றுத்தருகிறது. மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய: (ப.கீ. 7.1). கிருஷ்ணரிடம் இருந்து நேரடியாகவோ, அவரது பிரதிநிதி இடமிருந்து இந்த யோக முறைகளை ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் மத்-ஆஷ்ரய: என்பதன் அர்த்தம். ஒருவர் அடைக்கலம் எடுக்க வேண்டும்...
இப்பொழுது கிருஷ்ணரிடம் நேரடியாக அடைக்கலம் பெறுவது சாத்தியமில்லை, எனவே அவருடைய அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடம் அடைக்கலம் எடுக்க வேண்டும். நான்கு வைணவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பிரம்ம சம்பிரதாயம், ருத்ர சம்பிரதாயம், ஸ்ரீ சம்பிரதாயம், குமார சம்பிரதாயம். இதில் ஏதாவது ஒரு சம்பிரதாயத்தை, குரு பரம்பரையில் ஒருவர் அடைக்கலம் எடுக்க வேண்டும், பின்பு அவரிடம் பக்தியோகம் முறை பற்றி பயில வேண்டும். அதன்பின்னர் அவர் புரிந்து கொள்வார், அல்லது கடவுளை பார்ப்பார். கடவுளைக் காண்பது என்பது கண்களால் காண்பது அல்ல. கடவுளின் மற்றொரு பெயர் அனுபவம், உணர்தல். வெளிப்படுத்துதல். உணர்தல். அதுதான் வேண்டும். குற்றமற்ற பக்தனிடம் கிருஷ்ணர் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத: (சை.ச. Madhya 17.136). கிருஷ்ணர். கடவுள் தானே வெளிப்படுத்திக் கொள்வார். இரவின் இருட்டில் சூரியனைப் பார்க்க முடியாதது போல. சூரியன் வானத்தில் தான் இருக்கும், ஆனால் கிரகம் இன்னொரு பக்கம் இருப்பதனால், இருட்டாக இருப்பதால், சூரியனைப் பார்க்க முடிவதில்லை. சூரியன் இல்லை என்பதில்லை, நம்மால் தான் பார்க்க முடியாது. அதுபோலவே, கிருஷ்ணர் நம்முன் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார், நம்மால்தான் அவரை பார்க்க முடியாது. கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரித்து இருந்தபொழுது... ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் பூமியில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அவரை முழுமுதற் கடவுளாக பார்க்க முடிந்தது. கடவுளே முழுமுதற் கடவுளே கிருஷ்ணரே ஒருவர் முன்னால் வரும் பொழுது; அவரைப் பார்க்க முடியாது. அவரை பார்த்தல் என்பது தனிப்பட்ட முறை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன (பிச. 5.38). பக்தி என்னும் களிம்பு கண்ணில் பூசப்பட்டு இருக்கும் பொழுதே அவரை காண முடியும். கடவுளை காண்பதற்கு கண்கள் தூய்மை செய்யப்படுகின்றன. அதுவே வெளிப்பாடு.