TA/Prabhupada 0968 - உண், குடி, களிப்புடன் ஆனந்தித்திரு என்ற இன்பமே பிரதானமாகக் கொண்டது மேற்கத்திய தத்துவம



730400 - Lecture BG 02.13 - New York

தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
(ப.கீ. 2.13).

இந்த வாசகம் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் கூறப்பட்டது, பகவான் உவாச, நீ இந்த உடல் அல்ல. ஆன்மீக புரிதலின் முதல் படி நாம் இந்த உடல் அல்ல என்று உணர்வதுதான். அதுவே தொடக்கம். யோகிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம், உடலை கொண்டு ஆசனப் பயிற்சி தான் செய்கிறார்கள், பட்டியலிட்டு மனதில் தத்துவத்தை படிப்பதாக சொல்லி, பல ஏமாற்றுக்கள் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய தத்துவம் என்னவென்றால் நாம் இந்த உடல் அல்ல என்பதுதான். உடலைக் கொண்டு ஆசனப் பயிற்சிகள் செய்து ஆன்மாவை உணர்தல் என்ற கேள்விக்கு இங்கே இடம் ஏது? நான் இந்த உடல் இல்லை எனும் பொழுது, உடற்பயிற்சிகள் மூலம் எப்படி தன்னை உணர்ந்து கொள்ள முடியும்? இதுதான் தவறு - கர்மிகள், ஞானிகள், யோகிகள். கர்மிகள் என்பவர் பலன் நோக்கி செயல் செய்பவர்கள், பௌதிக வாதிகள் அவர்களுக்கு உடல் சௌகரியங்கள் வேண்டும். அவர்களுடைய ஒரே குறிக்கோள் மிகச்சிறந்த உடல் சுகத்தை எப்படி அடைவது என்பது தான். இந்த உடல் என்றால் புலன்கள். கண்கள், காதுகள், மூக்கு, வாய் ஆகியவை இருக்கின்றன, நான்கு, கைகள், புலன் உறுப்புகள், என்று பல்வேறு புலன்கள் இருக்கின்றன.

உடல் என்ற நிலையில் மட்டும் வாழ்க்கையை நாம் எண்ணும் வரை, புலன் இன்பத்தை மட்டுமே தேவையாக கருதுகிறோம். ஆனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார், "நீ இந்த உடல் அல்ல." எனவே நான் என் மேல் கொள்ளும் அக்கறை ஆனது என் உடல் சுகத்தை சார்ந்ததாக இருக்காது. இதை அவர்கள் அறிவதில்லை. தற்போது இந்த யுகத்தில் அனைவரும், அனைவருமே புலனின்பம் எப்படிக் கொல்வது என்ற நாத்திகக் கொள்கை ஆகவே சிந்திக்கின்றனர். சார்வாக்க முனி என்று ஒரு மாபெரும் நாத்திகர் இருந்தார். அனைத்து விதமான தத்துவவாதிகளும் இந்தியாவில் இருந்திருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய கருத்துக்கள் குறைவாகத் தான் இருந்திருக்கிறது, ஆனால் இந்தியாவில் அனைத்து விதமான தத்துவங்களும் பெருமளவில் இருந்திருக்கின்றனர். எனவே நாத்திக தத்துவமும் இருந்திருக்கிறது. சார்வாக்க முனி நாத்திக தத்துவவாதிகளின் தலைவர். அவர் சொல்வது இன்பமே பிரதானம். மேற்கத்திய கொள்கையில் இன்பமே பிரதானம், உண், குடி, களிப்புடன் ஆனந்தித்திரு. இதுவே தத்துவம். இந்த உடல் இருக்கும் வரை உண், குடி, களிப்புடன் ஆனந்தித்திரு. சார்வாக்க முனியும் அதையேதான் சொன்னார். ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத்.