TA/Prabhupada 0970 - நாக்கு பகவானை போற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
730400 - Lecture BG 02.13 - New York
அதுவே நம் நிலை, நம்முடைய குறைபாடுள்ள புலன்களைக் கொண்டு மனக் கற்பனையினால் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியாது. சாத்தியமில்லை. நாம் ஈடுபடுத்த வேண்டும் - ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ நாக்கு தொடங்கி. நாக்குதான் மிகப்பெரிய எதிரியும் மிகப்பெரிய நண்பனும் ஆகும். நாக்கு நினைத்ததையெல்லாம் செய்யுமானால், புகைப்பிடித்தல், குடித்தல், புலால் உண்ணுதல், அது இது என்று, அதுவே உங்களுக்கு மாபெரும் எதிரி ஆகிவிடும். அப்படி ஈடுபடுத்தாமல் இருந்தாலும் உங்கள் நாவே உங்களுக்கு கட்டுப்படும், அப்படியே நீங்கள் அனைத்துப் புலன்களையும் கட்டுப்படுத்த முடியும்.
- தா'ர மத்யே ஜிஹ்வா அதி லோபமோய் ஸுதுர்மதி
- தா'கே ஜேதா கடின ஸம்ஸாரே
- க்ருஷ்ண பரோ தோயாமோய் கோரிபாரே ஜிஹ்வா ஜய்
- ஸ்வ-ப்ரஸாத்-அன்ன திலோ பாஇ
- ஸேஇ அன்னாம்ருத பாஓ ராதா-க்ருஷ்ண-குண காஓ
- ப்ரேமே டாகோ சைதன்ய-நிதாஇ
- (பக்திவிநோத தாக்கூர்)
நாக்கு பகவானை புகழ்வதற்காக வே பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே நாவின் கடமை. கிருஷ்ண பிரசாதம் தவிர வேறு எதையும் நாவுக்கு உண்ண கொடுக்கக் கூடாது. நாவை அடக்குவதனால் மட்டுமே ஒருவன் முக்தி பெற முடியும். நாவை நினைத்ததையெல்லாம் செய்ய விட்டால் மிகவும் கடினம் ஆகிவிடும். எனவே ஆன்மீக கல்வி என்பது, நாம் இந்த உடல் இல்லை என்று புரிந்து கொள்வதில் இருந்தே தொடங்குகிறது என்று கிருஷ்ணர் கூறுகிறார். புலன்களை திருப்தி படுத்துவது என்னுடைய வேலை அல்ல, ஏனெனில் நான் இந்த உடல் அல்ல. நான் இந்த உடல் இல்லை என்றால் இந்த உடலை திருப்பி படுத்துவதற்கு நான் ஏன் கவலைப்படுகிறேன்? உடல் என்றாலே புலன்கள் தான் அது தான் முதல் அறிவுறுத்தல்.
கர்மிகள், ஞானிகள், யோகிகள், அனைவரும் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்கின்றனர். கர்மிகள் இதைத்தான் நேரடியாக செய்கின்றனர். "உண், குடி, களிப்புடன், ஆனந்தமாக இரு." என்பதே அவர்கள் தத்துவம். ஞானியும், "நான் இந்த உடல் அல்ல" என்பதை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறான். நேதி நேதி நேதி நேதி: "அதுவல்ல, அதுவல்ல, அதுவல்ல, அதுவல்ல..." ஹதயோகம் செய்து உடல் ஆசனங்கள் மூலம் புலன்களை கட்டுப்படுத்தவே யோகிகளும் முயற்சி செய்கின்றனர். ஆகவே அவர்கள் செயலின் மத்திய புள்ளி உடலாகவே இருக்கிறது. நம்முடைய தத்துவமும், "நான் இந்த உடல் அல்ல." என்பதில் தொடங்குகிறது. உடலைப் பற்றிய பாடத்தில் முதுகலை பரிட்சையை தாண்டி வரும்போது தான், அவற்றின் நிலை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நம் தத்துவமும் "நீ இந்த உடல் அல்ல." என்பதில் தான் தொடங்குகிறது. முதுகலைப் படிப்பு "நீ இந்த உடல் அல்ல." அதுவே கிருஷ்ணரின் பரிந்துரை. இந்தியாவில் நாம் பல பெரிய அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும் சந்தித்திருக்கிறோம். பகவத்கீதைக்கு உரை எழுதுகிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்வின் கருத்தை உடல் ரீதியில்தான் எழுதுகிறார்கள். நம் நாட்டின் மாபெரும் தலைவரான மகாத்மா காந்தியின் படம் பகவத்கீதை உடன் உள்ளது. ஆனால் அவர் தன் வாழ்க்கை முழுவதும் என்ன செய்தார்? உடல் ரீதியாகத் தான் யோசித்தார்: "நான் இந்தியன். நான் இந்தியன்." என்று. தேசியவாதம் என்பது உடல் சார்ந்த சிந்தனைதான். "நான் இந்தியன்." "நான அமெரிக்கன்." "நான் கனடியன்." நாம் இந்த உடல் அல்ல. அப்படி இருக்கும் பொழுது "நான் இந்தியன்." "நான அமெரிக்கன்." "நான் கனடியன்." என்ற கேள்வி எங்கிருந்து வரும்? ஆக அவர்களுக்கு இந்த ஞானம் இல்லை, அவர்கள் உடல் ரீதியான சிந்தனையிலேயே ஆழ்ந்து உள்ளனர், ஆனால் அவர்கள் பகவத்கீதைக்கு அதிகாரியாக இருக்கின்றனர். வேடிக்கையைப் பாருங்கள். பகவத்கீதை ஆரம்பத்திலேயே "நீ இந்த உடல் அல்ல." என்று போதிக்கிறது. ஆனால் அவர்கள் உடல் ரீதியான சிந்தனையிலேயே இருக்கின்றனர். அப்படி என்றால் அவர்கள் நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பகவத் கீதையில் அவர்கள் என்ன புரிந்து கொள்ள முடியும்? ஒருவன் தான் "இந்த தேசத்தைச் சார்ந்தவன் குடும்பத்தைச் சார்ந்தவன், சமூகத்தைச் சார்ந்தவன், பிரிவைச் சார்ந்தவன், இதை சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன், என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்..." அனைத்தும் உடல்சார்ந்த கருத்துதான்.