TA/Prabhupada 0981 - முன்பெல்லாம் ஒவ்வொரு பிராமணனும் இந்த இரு அறிவியல் களையும் கற்பர், ஆயுர்வேதம் மற்றும்



Lecture on SB 1.2.6 -- New Vrindaban, September 5, 1972

பஹிர்-அர்த (SB 7.5.31), என்றால் வெளிப்புறம் என்றால் ஆர்வம் இன்பத்தில் இறுதிக் குறிக்கோள் விஷ்ணு என்பதனை அறியாதவர்கள் வெளி உலகின் ஏற்பாடுகளை சரி செய்துகொண்டு.... ஏனெனில் நமக்கு உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டும் இருக்கிறது. வெளிப்புறமாக நாம் இந்த உடல் உள்புறத்தில் நாம் ஆன்மா. அனைவரும் நான் இந்த உடல் அல்ல ஆன்மா என்று புரிந்து கொள்ளலாம். நான் இந்த உடலால் மூடப்பட்டிருக்கின்றேன். நான் இந்த உடலில் இருந்து சென்றவுடன் இந்த உடலுக்கு அர்த்தம் இல்லை. மிக முக்கியமான ஒருவரின் உடல் ஆக இருக்கலாம் மாபெரும் விஞ்ஞானி ஆக கூட இருக்கலாம் ஆனால் அந்த உடல் விஞ்ஞானி அல்ல ஆன்மா தான் விஞ்ஞானி. உடல் வெறும் கருவிதான். எதையாவது பிடிப்பதற்கு கை எப்படி கருவியாக இருக்குமோ அதுபோல. ஆகவே சமஸ்கிருத வார்த்தையான கரண என்பது உடலின் பல்வேறு அங்கங்களை குறிக்கிறது. கரணம் என்பது காரியம் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை குறிப்பது. எனவே, ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீ.பா 7.5.31), உடல்ரீதியான கருத்தில் நாம் கவரப்பட்டு இருக்கின்றோம். இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கின்றது, யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ.பா 10.84.13), ஆத்ம-புத்தி: குணபே, குணபே என்றால் பை எலும்பு சதை தோல் மற்றும் ரத்தம் அடங்கிய பையே இது. இந்த உடலை கூராய்ந்தால் நாம் என்ன காணமுடியும்? எலும்புகள், தோல், ரத்தம், குடல், ரத்தம், சீழ் இவை தவிர வேறு எதுவும் இல்லை.

எனவே குணபே த்ரி-தாதுகே... இவை மூன்று தாதுக்கள் கபம், பித்தம், வாயு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. கபம், சளி, பித்தம், அமிலம் மற்றும் காற்று. இவை உருவாக்கப்படுகின்றன இவையே நடக்கின்றன. உணவு உண்டவுடன் இந்த மூன்று பொருட்களும் தயாராகின்றன இவற்றின் அளவு சரியாக இருக்கும் வரை உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இவற்றில் அளவு கூடியோ குறைந்தோ ஆகும்பொழுது வியாதி ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி அதுவும் வேதம்தான்... ஆயுள் என்றால் ஒருவருடைய வாழ்நாள் வேதம் என்றால் அறிவு. அதற்குப் பெயர்தான் ஆயுர்வேதம். ஆக வாழ்நாளை பற்றிய இந்த வேத ஞானம் மிகவும் எளிதானது. அவற்றிற்கு நோயியல் ஆய்வகமுமோ மருத்துவமனையும் தேவையில்லை. கபம், பித்தம், வாதம் ஆகிய மூன்றையும் ஆராய்வதே போதுமானது. மேலும் அவர்களுடைய விஞ்ஞானம் நாடியை உணர்ந்து பார்ப்பது. நம் அனைவருக்குள்ளும் டிக் டிக் டிக் என்று நாடி அடித்துக் கொண்டே இருப்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள். எனவே அவர்களுக்கு நாடியை புரிந்துகொள்ளும் அந்த விஞ்ஞானம் தெரியும் கபம் பித்தம் வாயு ஆகிய மூன்றும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும் அந்த நிலையைப் பொறுத்து அவர்கள் ஆயுர்வேதத்தில் சாஸ்திரத்தில் இந்த அறிகுறிகளைக் கொண்டு... நரம்பு இவ்வாறு உள்ளது இருதயம் இப்படி அடிக்கிறது இப்படி இருந்தால் இதுதான் நிலை. இவ்வாறு அந்த நிலையை புரிந்து கொண்டவுடன் அறிகுறியையும் சரி பார்த்துக் கொள்கின்றனர். நோயாளியிடம், "இப்படி உணர்கிறீர்களா அப்படி உணர்கிறீர்களா?" என்று கேட்டு தெரிந்து கொள்கின்றனர். அவர்கள், "ஆம்" என்று சொன்னால் அதனை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். உள்ளே நடப்பது நாடியின் மூலம் அதன் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. உடனே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். மிகவும் எளிது.

ஒரு காலத்தில் ஒவ்வொரு பிராமணனும் இந்த இரண்டு விஞ்ஞானத்தையும் கற்றனர் ஆயுர்வேதம் மற்றும் ஜோதிடம். ஜோதிட வேதம் என்பது வானியல் அல்ல ஜோதிடம். மற்ற குறைந்த அறிவுடைய வர்ணத்தவர் சத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் போன்றவர்களுக்கு தேவைப்பட்டால் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை பற்றி அறிய பிராமணர்கள் தேவைப்படுகிறார்கள். எதிர்காலத்தை பற்றி அறிய ஒவ்வொருவரும் ஆவலுடன் இருக்கின்றார்கள். உடல் நலத்தைப் பற்றியும் எல்லோருக்குமே அக்கறை உண்டு. எனவே பிராமணன் உடல்நலம் மற்றும் எதிர்காலம் பற்றி ஆலோசனை வழங்குவர் அதுவே அவர்களது தொழிலும் ஆகும். மக்கள் அவர்களுக்கு உணவு உடை ஆகியவை கொடுத்துவிடுவர். அதனால் வேறு எதற்காகவும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டியதில்லை. இது பெரிய கதை. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ.பா 10.84.13) ஆகவே இந்த உடல் இந்த மூன்று கூறுகளான பை