TA/Prabhupada 0991 - ஜுகல-ப்ரீதி ராதாகிருஷ்ணர்களுக்கு இடையே உள்ள அன்புப் பரிமாற்றங்கள்



740724 - Lecture SB 01.02.20 - New York

கோபி களைப் போல மிக உயர்ந்த பக்தர்கள் அவர்களுடைய ஒரே வேலை கிருஷ்ணரை திருப்தி படுத்துவது தான். சைதன்ய மகாபிரபு பரிந்துரைப்பது, ரம்யா காசித்

உபாஸனா வ்ரஜ-வதூ-வர்கேண யா கல்பிதா (சைதன்ய-மன்ஜுஸ). கோபிகள் கடைப்பிடித்த முறையை விட சிறந்த முறை வழிபாட்டிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்கள் வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கோபி களில் சிலர் வீட்டு வேலைகளில் கூட ஈடுபட்டு தான் இருந்தனர் ஒருத்தி கணவனுடன் பேசிக்கொண்டிருந்தாள், சிலர் குழந்தைகளை பராமரித்து கொண்டிருந்தனர் சிலர் பால் காய்ச்சி கொண்டிருந்தனர் கிருஷ்ணனின் குழல் ஓசை கேட்டவுடன் அனைத்தையும் விட்டுவிட்டனர். "எங்கே போகிறாய்?" கணவன் அண்ணன் தந்தை. "எங்கே போகிறாய்?""இல்லை நான் கவலைப்படுவதில்லை கிருஷ்ணனின் குழல் ஓசை கேட்கிறது எங்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை." அதுவே பக்தி மிக உயர்ந்தது உன்னதமானது. சைதன்ய மஹாபிரபு... மிகவும் கண்டிப்பாக இருந்தார் பெண்கள் அவருக்கு மிக அருகே வந்து வணக்கம் செலுத்த வரக்கூடாது. தொலைவில் தான் இருக்க வேண்டும். சைதன்ய மகாபிரபு ஒரு சன்னியாசியாக மிகவும் கண்டிப்பானவர். கொள்கைகள் இருக்க வேண்டியது அவசியம் தான் முக்கியமாக உங்கள் நாட்டில் அவை மிகக் கடினமாக கடைப்பிடிக்கப்பட முடியாது ஆனால் ஒருவர் கவனமாகவாவது இருக்க வேண்டும். எனவே சைதன்ய மகாபிரபு மிக கண்டிப்பாக இருந்தார் - அவர் கோபியரின் கிருஷ்ண பிரேமையை புகழ்ந்து பாடுகிறார்.

ஆகவே கோபியரின் பிரேமை சாதாரணமானதல்ல அது ஆன்மீக மயமானது. இலையில் சைதன்ய மகாபிரபு ஏன் பாராட்ட போகிறார்? எப்படி சுகதேவ கோஸ்வாமி கிருஷ்ண லீலையை பாராட்டுகிறார்? கிருஷ்ணர் லீலை சாதாரணமானதல்ல ஆன்மீக மாயமானது. ஒருவர் திடமாக பக்தி யோகத்தில் நிலைக்கவில்லை என்றால் கோபியருடன் ஆன கிருஷ்ணரின் லீலைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக்கூடாது. அது அபாயகரமானது. நரோத்தம தாஸ தாகுரர், சொல்கிறார்

ரூப-ரகுநாத-பதே ஹோஇபே ஆகுதி
கபே ஹாம புஜபோ ஸே ஜுகல-பீரிதி
(லாலஸாமயீ ப்ரார்தனா 4)

ஜுகல-ப்ரீதி ராதாகிருஷ்ணர்களுக்கு இடையே உள்ள அன்புப் பரிமாற்றங்கள். ஜுகல என்றால் ஜோடி ப்ரீத்தி என்றால் காதல் நரோத்தம தாஸ தாகுரர், மிகப்பெரிய ஆச்சாரியார் கூறுகிறார் "இப்போது நான் இதை புரிந்து கொள்வேன்? " என்று சொல்கிறாரே தவிர நான் அனைத்தையும் புரிந்து கொண்டு விட்டேன் என்று சொல்லவில்லை. எனக்கு எல்லாம் புரிந்து விட்டது இது மிகவும் நல்லது இதுவே விஞ்ஞானம் பகவத் தத்துவ விஞ்ஞானம். எனவே நாம் இந்த விஞ்ஞானத்தை புரிந்து கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த விஞ்ஞானம் ஆன்மீக குருவின் கருணையினால் புரிந்துகொள்ளமுடியும். எனவே விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூர் சொல்கிறார் முதலில் ஒன் ஆன்மீக குருவை திருப்திப்படுத்த முயற்சி செய். பின்பு புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

இது மாபெரும் விஞ்ஞானம்.

தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்நேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்
ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
(ப.கீ4.34).

இதுவே வழிமுறை. முதலில் சரணடைய வேண்டும். "ஐயா நான் சரணடைகிறேன்". "சரி" "இப்போது எனக்கு பிடிக்கவில்லை." இது என்ன இது என்ன சரணாகதி? "இப்போது எனக்கு பிடிக்கவில்லை?" அப்படி என்றால் அது சரணாகதியை இல்லை. சரணாகதி என்றால், "இப்போது நான் சரணடைகிறேன், நீ எனக்கு மகிழ்வைத் தரவில்லை என்றால் என் புலன்கள் திருப்தி அடையவில்லை என்றால் அது எனக்கு பிடிக்காது." அதுவல்ல சரணாகதி. பக்திவினோத தாகூரர் : சரணாகதி க்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்: நாய் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அது தனது எஜமானனிடம் முழுவதுமாக சரண் அடையும். எஜமானன் அதைக் கொன்றால் கூட எதிர்ப்பு காட்டாது. அதுவே உதாரணம்.

வைஷ்ணவ தாகுரர், தோமார குக்குர
புலியா ஜானஹ மோரே.

வைஷ்னவ தாகூரர் மரியாதைக்குரிய ஆன்மிக குருவே நீங்களே மிகச்சிறந்த வைணவர். என்னை உங்கள் நாயாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே சரணாகதி.

உண்மையான சரணாகதி தொடங்குவது

மய்யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
(ப.கீ 7.1)

ஆஷ்ரயஹ். ஆஷ்ரய லோஇயா பஜே க்ருஷ்ண தாரே நாஹி த்யாஜே (நரோத்தம தாஸ தாகுர) அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடம் அடைக்கலம் பெற்று பக்தித் தொண்டை யார் செய்கிறாரோ அவரை எப்போதும் கிருஷ்ணர் கைவிடுவதில்லை. அவரை ஏற்றுக் கொள்கிறார். ஆஷ்ரய லோஇயா பஜே க்ருஷ்ண தாரே நாஹி த்யாகே ஆர ஸப மோரே அகரண(?). மற்றவர்கள் வெறுமனே நேரத்தை வீணடிக்கின்றனர் அவ்வளவுதான். இதுவே பகவத் பக்தி யோகம். ஆதௌ குர்வாஷ்ரயம் ஸத்-தர்ம-ப்ருச்சா, ஸாது-மார்க-அனுகமனம் (பி.ச. 1.1.74).