TA/Prabhupada 1006 - நாங்கள் சாதி முறையை அறிமுகப்படுத்தவில்லை



750713 - Conversation B - Philadelphia

சாண்டி நிக்சன்: நீங்கள் புத்துயிர் புகுத்த முயற்சிக்கிறீர்களா ... இந்த கேள்வியை இரண்டு வெவ்வேறு வழிகளில் கேட்க விரும்புகிறேன். முதலில் நான் அதை ஒரு வழியில் கேட்பேன், இது ஒரு வகையில், தவறானது. ஒருவேளை நான் இதை இப்படியே கேட்டு உங்கள் பதிலைப் பெறலாம். நீங்கள் விழிப்புணர்வை மேற்கில் புதுப்பிக்க முயற்சிக்கிறீர்களா ... மேற்கில், பண்டைய இந்திய சாதி முறையை புதுப்பிக்க முயற்சிக்கிறீர்களா? நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன் ...

பிரபுபாதா: நாங்கள் சாதி அமைப்பை புத்துயிர் ஏற்றுவதை நீங்கள் எங்கே கண்டீர்? எங்கே கண்டீர் ? முதலில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? நாங்கள் இந்திய சாதி முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்திருந்தால், நீங்கள் கூறுங்கள். ஆனால் அத்தகைய முயற்சி எதுவும் இல்லை என்றால், நீங்கள் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள்?

சாண்டி நிக்சன்: சரி, ஏனென்றால் நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர், அதற்கான காரணத்தை நான் கேட்டிருப்பேன் ...

பிரபுபாதா: இல்லை, இல்லை, நிறைய பேர் - நீங்களும் அவர்களில் ஒருவர். எனவே நாங்கள் சாதி முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்பதை நீங்கள் எங்கே கண்டீர்? முதலில் முயற்சி எங்கே என்று கண்டுபிடிக்கவும். அதன் பின்னர் கேள்வி கேட்கலாம். இல்லையெனில் அது பொருத்தமற்ற கேள்வி.

சாண்டி நிக்சன்: கீதா ஒரு சாதி அமைப்பு பற்றி பேசுகிறது.

பிரபுபாதா: ஆஹ்?

சாண்டி நிக்சன்: கீதா சாதி அமைப்பைக் குறிப்பிடுகிறது.

பிரபுபாதா: கீதா, என்ன குறிப்பிடுகிறது, உங்களுக்குத் தெரியுமா?

சாண்டி நிக்சன்: நான்கு சாதிகள் மற்றும் தீண்டத்தகாத சாதி. பிரபுபாதா: அது என்ன? எதன் அடிப்படையில்?

சாண்டி நிக்சன்: என்னால் அதை நேரடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பிரம்மா ... பிரபுபாதா: ப்ரஹ்மானந்த. இது சாதி அமைப்பு என்று யார் சொன்னது? இது சாதி அமைப்பு அல்ல. சாதுர்-வர்ணம் மயா ஸ்ருஸ்தம் குண-கர்மா-விபாகஷா (ப கீ 4.13). தரம் மற்றும் வேலையின் படி, மனிதர்களுள் நான்கு பிரிவுகள் உள்ளன. நீங்கள் புரிந்துகொள்வது போல சொல்வது என்றால், பொறியியலாளர்களும், மருத்துவ பயிற்சியாளர்களும் உள்ளனர். எனவே நீங்கள் அவர்களை சாதியாக எடுத்துக் கொள்கிறீர்களா? "ஓ, அவர் பொறியாளர் சாதி. அவர் மருத்துவ சாதி." நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?

சாண்டி நிக்சன்: நான் என்ன உணர்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் நான் உங்களின் பேச்சை பதிவு செய்கிறேன். (சிரிக்கிறார்) பிரபுபாதா: நான் உங்களிடம் கேட்கிறேன். நான் உங்களிடம் கேட்கிறேன் ...

சாண்டி நிக்சன்: சரி, எப்போதும் சாதிகள் இருந்ததாக நான் நினைக்கிறேன். அந்த வேறுபாடு அங்கே இருக்கிறது என்ற உண்மையை நாங்கள் அடையாளம் காணவில்லை என்பது தான் உண்மை.

பிரபுபாதா: இல்லை, ஒரு மனிதன் தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தால் அவரை மருத்துவராக ஏற்றுக்கொள்கிறோம். ஒரு மனிதன் தகுதிவாய்ந்த பொறியியலாளர் என்றால், நாங்கள் அவரை பொறியியலாளராக ஏற்றுக்கொள்கிறோம். இதேபோல், பகவத்-கீதா அறிவுறுத்துகிறது-பரிந்துரைக்கவில்லை; அது இருக்கிறது- மனிதர்களுள் நான்கு வகுப்புகள் உள்ளன: மனிதர்களுள் மிகவும் புத்திசாலித்தனமான வர்க்கம், மனிதர்களுள் நிர்வாக வகுப்பு, மனிதர்களுள் உற்பத்தி வகுப்பு மற்றும் சாதாரண தொழிலாளி. அது ஏற்கனவே உள்ளது. பகவத் - கீதா அவர்களை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது, "அவர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர், இவர் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்" என்று. அது பகவத்-கீதாவில் விவரிக்கப்பட்டுள்ளது, பிறப்பால், பரம்பரை ரீதியாக, ஒருவர் சாதியாக மாறுகிறார் என்பதல்ல. நீங்கள் தவறாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். வகைப்பாடு ஏற்கனவே உள்ளது: ஒரு வகை ஆண்கள், மிகவும் புத்திசாலி. அவர் மனித சமுதாயத்தில் இல்லையா? எல்லா மனிதர்களும் சமமான புத்திசாலிகள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு வகுப்பு இருக்க வேண்டும், மிகவும் அறிவார்ந்த வகுப்பு. எனவே அறிவார்ந்த வர்க்கத்தின் அறிகுறிகள் என்ன? அது பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. முதல் தர அறிவார்ந்த மனிதர், தனது மனதைக் கட்டுப்படுத்தக்கூடியவர், தனது புலன்களைக் கட்டுப்படுத்தக்கூடியவர், மிகவும் உண்மையுள்ளவர், மிகவும் தூய்மையானவர், மிக எளிமையானவர், மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர், அறிவில் மிகவும் முன்னேறியவர், வாழ்க்கையில் அறிவின் நடைமுறை பயன்பாடு மற்றும் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை . இதுதான் முதல் தர மனிதன். எனவே இது இந்தியாவுக்குள் இல்லை, இந்த குணங்கள் அனைத்தையும் நீங்கள் எங்கு கண்டாலும், அவர் முதல் தர மனிதர். எனவே, முதல் தர மனிதன் இல்லாமல், சமூகம் பயனற்றது. அதை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம், எனவே முதல் தர மனிதர்கள் உள்ளனர். நீங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு புத்திசாலி பையனை போல; இன்னும், அவருக்கு பள்ளியில், கல்லூரியில் பயிற்சி தேவை. பின்னர் அவர் தனது முதல் -தர மூளை, முதல்-தர நிலையை பராமரிக்கிறார். எனவே முதல்-தர மனிதன் ஆகிறார். மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது, புலன்களின் கட்டுப்பாட்டாளராக மாறுவது எப்படி, உண்மையாக மாறுவது, உள்-உணர்வு எவ்வாறு சுத்திகரிக்கப்படுவது, வெளிப்புறமாக எவ்வாறு சுத்திகரிக்கப்படுவது, அறிவு எவ்வாறு நிரம்புவது, அறிவை எவ்வாறு பயன்படுத்த முயற்சிப்பது என்பதை இப்போது நாம் அவர்களுக்கு சரியாகப் பயிற்றுவிக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கையில், கடவுள் நனவாக எப்படி வாழ்வது என்று. இந்த பயிற்சி என்னவென்றால் ... ஒரு முதல் தர மனிதன் இந்த இளைஞர்கள் அனைவரையும் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் முதல் தர மூளையை கொண்டிருந்தனர், இப்போது அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அது தேவை: பயிற்சி பெற்ற முதல் தர மனிதர் அந்த பயிற்சி தேவை. எனவே நாம் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த எந்தவொரு வஞ்சகனும் பிராமணனாக ஆகும் சாதி முறையை அறிமுகப்படுத்தவில்லை, நாங்கள் அதை ஏற்கவில்லை. முதல் தரத்தில் இருக்கும் ஒரு மனிதன் பிராமணனாக மாற பயிற்சி பெற்றான், நாங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறோம். அவர் இந்தியா அல்லது ஐரோப்பா அல்லது அமெரிக்கா - எங்கு இருக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல. அது ஒரு பொருட்டே அல்ல. இந்த முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம். அது பகவத்-கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதி அமைப்பு என்றால் ஒரு மனிதன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன், பழக்கத்தால் அவன் ஐந்தாம் வகுப்பு மனிதன், பிறப்பின் காரணமாக அவன் முதல் தர மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இதேபோல், ஒரு நபர், மிகவும் புத்திசாலி, அவர் முதல் தர பழக்கத்தை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர் ஒரு ஷூத்ரா குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அவர் ஷூத்ரா. இந்த முட்டாள்தனத்தை நிறுத்த விரும்புகிறோம். நாங்கள் முதல் தர மூளையை தேர்ந்தெடுத்து, முதல் தர மனிதனாக எப்படி மாற வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கிறோம். இது எங்கள் தொழில். இந்த குப்பை விஷயத்தை அறிமுகப்படுத்துவது அல்ல. இல்லை, நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை. இல்லையெனில் நான் அவர்களுக்கு எப்படி புனிதமான பூணூலை வழங்குகிறேன்? இப்போது பாருங்கள். இந்தியாவில் இருந்து எவரும், அவர் ஒரு தர வகுப்பு பிராமணர் என்பதை அவர் புரிந்துகொள்வார். நாங்கள் அப்படி பயிற்சி செய்கிறோம்.