TA/Prabhupada 1029 - எங்கள் மதத்தின் நோக்கம் கடுந்தவம் அல்ல. எங்கள் மதம் கடவுளை நேசிப்பதை கற்ப்பிக்கிறது



740625 - Arrival - Melbourne

எங்கள் மதத்தின் நோக்கம் கடுந்தவம் அல்ல. எங்கள் மதம் கடவுளை நேசிப்பதை கற்ப்பிக்கிறது. நிருபர்: (இடைவேளை) ... கடவுளின் விசேஷமான சேவகர். பிரபுபாதர்: நான் எப்போதும் கடவுளின் சேவகன். அப்படி உணர்வது உங்களைப் பொறுத்து, அவ்வளவு தான். நான் எப்போதும் கடவுளின் சேவகன். அப்படி உணர்வது உங்களைப் பொறுத்து. நிருபர்: இந்த இயக்கத்தின் வருமானம் ஆண்டு தோறும் எவ்வளவு இருக்கும் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிரபுபாதர்: எங்களால் இந்த உலகத்தின் எல்லா பணத்தையும் செலவழிக்க முடியும். (சிரிப்பு) பக்தர்கள்: ஹரி போல்! பிரபுபாதர்: துரதிருஷ்டவசமாக, நீங்கள் எங்களுக்கு பணம் கொடுக்க மறுக்கிறீர்கள். பக்தர்கள்: ஹரி போல் (சிரிப்பு) நிருபர்: என்ன... எப்படி செலவழிக்கிறீர்கள், அருள்மிகு பிரபுபாதரே? பிரபுபாதர்: தற்போது நாங்கள் மாதாமாதம் குறைந்தது எண்ணூறு ஆயிரம் டாலர்கள் செலவழிக்கிறோம். நிருபர்: எதற்காக, அருள்மிகு பிரபுபாதரே? பிரபுபாதர்: உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்காக. மற்றும் நாங்கள் குறைந்தது நாற்பதாயிரம் டாலர்கள் மதிப்புள்ள எங்கள் புத்தகங்களை மாதாமாதம் விற்பனை செய்கிறோம். நிருபர்: உங்களுக்கு உழைப்பதில் விருப்பம் உண்டா? பிரபுபாதர்: ஆம். என்ன ? மதுத்விஷன்: நமக்கு உழைப்பதில் விருப்பம் உண்டா என தெரிந்து கொள்ள விரும்புகிறாள். பிரபுபாதர்: நாங்கள் உங்களைவிட அதிகமாகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம். நான் இந்த வயதான காலத்திலும், இருபத்தி நான்கு மணி நேரம், உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பக்தர்: ஹரிபோல்! நிருபர்: ஆனால் உங்களிடம் இருக்கும் பணத்தில் அதிகபட்சம் பணம் கையேந்துவதால் கிடைக்கிறது அல்லவா? பிரபுபாதர்: இல்லை. முதலில் நீ புரிந்துக் கொள். உழைப்பு - உன்னால் எங்களைவிட அதிகமாக உழைக்க முடியாது, ஏனென்றால் நான் ஒரு வயதானவன், எழுபத்தி ஒன்பது வயது, மற்றும் நான் எப்பொழுதும் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன், உலகம் முழுவதும், வருடத்தில் இரண்டு , மூன்று தடவை. உன்னால் இவ்வளவு உழைக்க முடியாது. பக்தர்கள்: ஹரிபோல்! பிரபுபாதரே. மதுத்விசன்: இப்போ கடைசி கேள்வி. சரி. நிருபர்: அருள்மிகு பிரபுபாதரே, உங்கள் மதம் கடும் தவமங்கள் நிறைந்தது. நீங்கள் மெல்போர்னில் ஒரு தவசியைப் போல் வாழ்வீர்களா? உங்களை இப்போ ஒரு ரோல்ஸ் ராயஸ் வண்டியில் அழைத்துச் செல்வார்கள் எனக் கேள்விப்பட்டேன். பிரபுபாதர்: எங்கள் மதத்தின் நோக்கம் கடுந்தவம் அல்ல. எங்கள் மதம் கடவுளை நேசிப்பதை கற்ப்பிக்கிறது. நீ இந்த ஆடையிலும் கடவுளை நேசிக்கலாம். அதில் என்த பிரச்சினையும் இல்லை. நிருபர்: ஆனால் இது தன்னல மறுப்பை அடிப்படையாகக் கொண்ட மதம் அல்லவா? பிரபுபாதர்: இது தன்னல மறுப்பை சார்ந்தது கிடையாது. நாங்கள் எல்லாத்தையும் தான் உபயோகித்திருக்கிறோம், பின்னர் எப்படி தன்னல மறுப்பு? அவசியம் தேவையானதை மட்டும் தான் பயன்படுத்துகிறோம், வேறு ஒன்றும் இல்லை. நிருபர்: அப்போது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் விலையுயர்ந்த வீடு, இதைப்போன்ற ஊதாரித்தனத்தை எப்படி நீங்கள் நியாயப் படுத்துகிறீர்கள்? பிரபுபாதர்: இல்லை, எங்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் வேண்டாம், எங்களால் நடக்க முடியும். ஆனால் நீ ரோல்ஸ் ராய்ஸை விரும்பி கொடுத்தால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நிருபர்: இதைவிட நன்கு குறுகிய வண்டியில் தாங்கள் பயணம் செய்தால் அது சிறந்ததல்லவா, போலியான ஒரு தோற்றமும் குறைந்துவிடும். பிரபுபாதர்: ஏன்? நீ எனக்கு ரோல்ஸ் ராய்ஸை வழங்கினால் நான் ஏன் அதை மறுக்க வேண்டும்? அது உனக்கு நான் செய்யும் உபகாரம், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நிருபர்: அருள்மிகு பிரபுபாதரே, அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணாவை எப்படி அமைத்தீர்கள் என்று எங்களுக்கு சுருக்கமாக சொல்லமுடியுமா? பிரபுபாதர்: உலகில் எலலா இடங்களிலும் தற்போது ஹரே கிருஷ்ண ஜெபித்து வருகிறார்கள். எங்கே சென்றாலும் அங்கே ஹரே கிருஷ்ண ஜெபிக்கின்றார்கள்.