TA/Prabhupada 1040 - நமது மனித வாழ்வின் குறிக்கோள், உலகெங்கிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது



751001 - Arrival Reception - Mauritius

இந்திய அதிகாரி : ...நீங்கள் எங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் மொரிஷியஸ் வாழ் மக்களின் சார்பாக, உங்களை இந்த தீவிற்கு வரவேற்கிறோம். நீங்கள் இங்கே தங்குவதில் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறோம். சுவாமிஜி, நீங்கள் இங்கு எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்?

பிரபுபாதா : ஒருவாரத்திற்கு நிகழ்ச்சிகள் இருக்கிறது.

இந்திய அதிகாரி: ஒரு வாரம். உங்களுக்கு ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருக்கிறதா? நீங்கள் ஏதாவது சொற்பொழிவுகளுக்கு செல்கிறீர்களா...

பிரபுபாதா: அவர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்களா என்பதை குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய செயலாளர் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்திய அதிகாரி: நீங்கள் இங்கு வருவதற்கு முன்பு மொரிஷியஸை பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பிரபுபாதா: (சிரிப்பு) என்னுடைய கருத்து, கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்வதுதான். இந்த ஞானத்தின் தேவைக்காகத்தான், நமது மனித வாழ்வின் குறிக்கோள் உலகெங்கிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது எனவேதான், நான் கிருஷ்ண பக்தியை எந்தவித ஜாதி மத நிற வேறுபாடின்றி உலகெங்கும் அறிமுகம் செய்ய முயற்சி செய்கிறேன். கடவுள் அனைவருக்காகவும் தான், மேலும் நாம் கடவுளோடான நமது உறவை மறந்து விட்டோம். எனவேதான் பலவகைகளிலும் நாம் துன்பப்படுகிறோம். மேலும் அவரது அறிவுரை பகவத் கீதையில் இருக்கிறது. அதனை நாம் பின்பற்றினால், பிறகு நாம் மகிழ்ச்சி அடைவோம்; நமது வாழ்க்கை வெற்றி அடையும். இதுதான் எங்கள் குறிக்கோள்.

இந்திய அதிகாரி: நன்றி, உங்கள் வருகையின் நோக்கத்தை நீங்கள் சுருக்கமாக விளக்கி விட்டீர்கள்.

பிரபுபாதா: ஆம்

இந்திய அதிகாரி: மேலும் நாங்கள்,.... இப்போது இது ஒரு உலகளாவிய இயக்கம் என்று அறிந்துள்ளோம், கடைசியாக இது ஒரு மொரீஷியஸையும் அடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இயக்கத்திற்கு, உங்கள் ஆசீர்வாதத்தினால், இங்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.

பிரபுபாதா: நீங்கள் கருணையுடன் எனக்கு வாய்ப்பளித்தால், பிறகு நான் உங்களுக்கு இந்த இயக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும் எவ்வாறு அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவேன் இது மிகவும் எளிமையானதாக இருந்தாலும், மக்கள் பயிற்சியற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே நாம் கூட்டாக சேர்ந்து முயற்சி செய்வோம். மக்கள் இதனை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடையட்டும்.

இந்திய அதிகாரி: மிக்க நன்றி சுவாமிஜி, உலகம் முழுக்க ஒரு நீண்ட கடினமான வேலையை செய்துள்ள உங்களுக்கு இந்த வருகை மிகுந்த வெற்றிகரமான ஒன்றாக அமையும் என்று நம்புகிறோம்....

பிரபுபாதா: இந்த இடத்தின் தலைவர்களை பார்க்க நான் விரும்புகிறேன்.

இந்திய அதிகாரி: ஆம், நிச்சயமாக.

பிரபுபாதா: ஏனெனில், இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டால், பிறகு என்னுடைய குறிக்கோள் வெற்றி அடையும். இந்திய அதிகாரி : பார்ப்பதற்கான வாய்ப்பை நாம் பெறுவோம்.

பிரபுபாதா: ஆம். யத்3 யத்3 ஆசரதி ஷ்2ரேஷ்ட:2 தத் தத்3 ஏவேதரோ ஜன: (ப.கீ 3.21). பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: தலைவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே சாமானிய மக்களும் பின்பற்றுவார்கள்

இந்திய அதிகாரி: பின்பற்றுவார்கள் (தெளிவாக கேட்கவில்லை) நல்லது, ஆம்.

பிரபுபாதா: எனவே மொரிஷியஸின் தலைவர்கள், இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால், பிறகு அது அனைவருக்கும் மிகுந்த நன்மை அளிப்பதாக அமையும் என்பது நிச்சயம்.

இந்திய அதிகாரி: அனைவருக்கும், ஆம். மொரிஷியஸ் வாழ் மக்கள், நமது எல்லா நண்பர்கள் மற்றும் NBC டிவி சார்பாகவும் மிக்க நன்றி சுவாமிஜி. இதோ இதன் தலைமை அதிகாரி இங்கு இருக்கிறார். மேலும் உங்களுக்கு மிக்க நன்றி.

பிரபுபாதா: நன்றி.