TA/Prabhupada 1049 - குரு என்றால் கடவுளின் உண்மையான சேவகன். அவரே குரு
750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia
அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், அந்த4, அவர்கள் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுப்பார்கள், அதாவது, "நீங்கள் இந்த வகையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனக்கு ஓட்டளியுங்கள். நான் உங்களுக்காக சொர்க்கத்தையே வரவழைக்கிறேன். என்னை அமைச்சர் ஆக்கங்கள்... நீங்கள் காத்துக் கொண்டிருங்கள், நான் அமைச்சர் ஆனவுடனேயே உங்களுக்கு இந்த நன்மைகளை அளிக்கிறேன்." எனவே நீங்கள் திரு நிக்ஸனைத் தேர்வு செய்தீர்கள். மறுபடியும் நீங்கள் ஏமாற்றமடைந்தீர்கள். பிறகு நாம் கோரிக்கை வைக்கிறோம், "திரு நிக்ஸன், நீங்கள் வெளியேறுங்கள்." மேலும் நாம் மற்றொரு முட்டாளை ஏற்றுக் கொள்கிறோம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் நடந்து கொண்டிருக்கிறது.... ஆனால், இந்த வகையில் நீங்கள் சரியான தகவல்களை பெற மாட்டீர்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த முட்டாள் மனிதர்கள் உங்களுக்கு ஏதாவது சத்தியம் செய்து கொடுப்பார்கள், மேலும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த அவர்களால் இயலாது. நீங்கள் மறுபடி ஏமாற்றம் அடைவீர்கள், மறுபடி மனம் வருந்துவீர்கள். பிறகு எங்கிருந்து நாம் சரியான தகவல்களை பெற வேண்டும்? அதனை வேதங்கள் கூறுகிறது, தத்3-விஜ்ஞானார்த2ம்' ஸ கு3ரும் ஏவ அபி4க3ச்சே2த் (மு. உ 1.2.12): "உங்களுக்கு சரியான தகவல்கள் வேண்டும் என்றால் அதற்கு குருவிடம் செல்லுங்கள்." மேலும் யார் அந்த குரு? அதனை சைதன்ய மஹாபிரபு விளக்குகிறார். அதாவது, ஆமார ஆஜ்ஞாய கு3ரு ஹஞா தார' ஏஇ தே3ஷ2 (சை.சரி மத்ய 7.128). அவர் கூறுகிறார், "என் ஆணையினால், நீ குரு ஆவாயாக." குரு என்றால் கிருஷ்ணரது ஆணையை நிறைவேற்றுபவர். சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணர் தான். அல்லது யார் கிருஷ்ணருடைய சேவகனோ, அவரே குரு. பரமனின் ஆணையை நிறைவேற்றாத எவரும் குரு ஆக முடியாது. எனவேதான் நீங்கள் காண்பீர்கள்..... நாம் அனைவரும் கழுதைகளாக இருக்கும் காரணத்தினால், நம்முடைய சுயநலன் என்ன என்று நமக்குத் தெரியாது, மேலும் யாராவது வந்து "நான் தான் குரு." எனலாம். "நீங்கள் எப்படி குரு ஆனீர்கள்?" "இல்லை, நான் சுயமாக பக்குவப்பட்டவன். நான் எந்தப் புத்தகத்தையும் படிக்க தேவையில்லை. நான் உன்னை ஆசீர்வதிக்க வந்திருக்கிறேன்." (சிரிப்பு) மேலும் இந்த முட்டாள் அயோக்கியர்கள், அவர்களும் அறியமாட்டார்கள், "நீங்கள் எப்படி குருவாக முடியும்?" அவன் எந்த சாஸ்திரத்தையும், பரம அதிகாரியான கிருஷ்ணரையோ பின்பற்றவில்லையென்றால் எப்படி அவன் குரு ஆக முடியும்? ஆனால் அவனை குருவாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே இந்த வகையான குரு தான் நடப்பில் உள்ளது. ஆனால், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், குரு என்றால் பரமபுருஷ பகவானின் ஆணையை நிறைவேற்றுபவர். அவர் தான் குரு. தன்னுடைய சொந்தக் கருத்துக்களை உருவாக்கும் எந்த அயோக்கியனும் குரு அல்ல. உடனடியாக அவனை உதைத்து தள்ளுங்கள். உடனடியாக, "இவன் ஒரு அயோக்கியன். இவன் குரு அல்ல." குரு இங்கு இருக்கிறார், சைதன்ய மஹாபிரபு கூறுவதைப் போல ஆமார ஆஜ்ஞாய கு3ரு ஹஞா தார' ஏஇ தே3ஷ2 (சை.சரி மத்ய 7.128). , குரு என்றால் கடவுளின் உண்மையான சேவகன். அவர் தான் குரு எனவே நீங்கள் முதலில் "நீங்கள் கடவுளின் உண்மையான சேவகன் தானா?" என்று பரிசோதிக்க வேண்டும். அவன், "இல்லை நான் கடவுள்." என்று கூறினால் உடனடியாக அவனை அவன் முகத்தில் உதைத்து விடுங்கள். (சிரிப்பு) "நீ ஒரு அயோக்கியன். நீ எங்களை ஏமாற்ற வந்திருக்கிறாய்." என்று உடனடியாக உதைத்து விடுங்கள். ஏனெனில், ஏனெனில், இதுதான் பரிசோதனை - அதாவது குரு என்றால் கடவுளின் உண்மையான சேவகன். மிக எளிது. குரு என்றால் என்ன என்பதற்கு பெரிய வியாக்கியானம் தேவையில்லை. எனவே வேத ஞானம், உங்களுக்கு வழிகாட்டுதலை தருகிறது அதாவது தத்3-விஜ்ஞானார்த2ம். ஆன்மீக வாழ்க்கையின் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், விஜ்ஞானார்த2ம்' ஸ கு3ரும் ஏவ அபி4க3ச்சே2த் (மு.உ 1.2.12), நீ ஒரு குருவை அணுக வேண்டும். மேலும் யார் குரு? குரு என்றால் கடவுளின் உண்மையான சேவகன். மிக எளிமையானது.