TA/Prabhupada 1052 - மாயையின் தாக்கத்தினால் 'இது எனது சொத்து' என்று நாம் சிந்திக்கிறோம்



750522 - Conversation B - Melbourne

மதுத்விஷ: ... எங்கள் மிகவும் அன்பான நண்பர்களில் ஒருவரான ரேமண்ட் லோபஸ். அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு பார்வையாளர், எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளார், மெல்போர்னில் நாங்கள், இங்கு வைத்திருந்த சில சட்ட நடவடிக்கைகளுக்காக. இது திரு. வாலி ஸ்ட்ரோப்ஸ், அவரும் நமக்கு உதவினார் மற்றும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். இவர் பாப் பார்ன், அவர் ஒரு புகைப்படக்காரர் ... மாயாப்பூர் திருவிழாவிற்கு நான் கொண்டு வந்த ஸ்ரீமூர்த்திகளின் படங்களை அவர் எடுத்துள்ளார்.

பிரபுபாதர்: ஓ, ஆம்.

மதுத்விஷ: மிகவும் அருமை. எனவே அவர் நமக்காக பல புகைப்படங்களை எடுத்துள்ளார். நாம் குறிப்பாக வாலி மற்றும் ரேமண்டிற்கு கடன்பட்டிருக்கிறோம், காவல்துறையுடனான நம் நடவடிக்கைகளில் நமக்கு நிறைய நல்ல வழிகாட்டுதல்களை வழங்கியதற்காக. ஒரு முறை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது, சிறுவர்களில் சிலர் ரத-யாத்ரா திருவிழாவைப் பற்றி கொஞ்சம் ஆர்வமாக இருந்தபோது, அவர்கள் வெளியே சென்று சட்டவிரோதமாக பல பூக்களை பறித்தார்கள். எனவே அவர்கள் பிடிபட்டனர்.

பிரபுபாதர்: சட்டவிரோதமாக? எங்கே? பூங்காவில்?

மதுத்விஷ: இல்லை ஒரு மலர் வளரும் பூந்தோட்டத்தில்.

பிரபுபாதர்: ஓ. மதுத்விஷ: எனவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டனர். ஆனால் கிருஷ்ணரின் கருணையால் ரேமண்டால் அவர்களை விடுவிக்க முடிந்தது. ஆனால் அது எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது.

ரேமண்ட் லோபஸ்: உண்மையில், அவர்கள் தவறான நபர்களைக் கொண்டிருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பிரபுபாதர்: தென்னிந்தியாவில் ஒரு பெரிய பக்தர் இருந்தார். அவர் ஒரு கருவூல அதிகாரியாக இருந்தார். எனவே அவர் கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்து மிக அருமையான கோவிலைக் கட்டினார். (சிரிப்பு) ஆம். பின்னர், அவர் பிடிபட்டார், அவரை நவாப் சிறையில் அடைத்தார். அந்த நேரத்தில் முஹம்மது மன்னர் நவாப், இரண்டு சிறுவர்கள், மிகவும் அழகாக, அவர்கள் நவாபிடம் வருவதாக அவர் கனவில் கண்டார்: "ஐயா, அவர் என்ன பணம் எடுத்தார், நீங்கள் என்னிடமிருந்து பெற்று கொண்டு அவனை விடுவிக்கலாம்." எனவே நவாப், "எனது பணம் கிடைத்தால், நான் அவரை விடுவிக்க முடியும்" என்றார். பின்னர், அவரது கனவு கலைந்த போது, ​​தரையில் இருந்த பணத்தைக் கண்டார், யாரும் அங்கு இல்லை. அவர் பெரிய பக்தர் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் உடனடியாக அவரை அழைத்தார், "நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள், இந்த பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எடுத்தது எதுவாக இருந்தாலும் சரி. இப்போது இந்த பணத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியபடி செலவு செய்யுங்கள்." பக்தர்கள் சில சமயங்களில் அப்படிச் செய்கிறார்கள். உண்மையில், எதுவும் தனியார் சொத்து அல்ல. அதுதான் நம் தத்துவம். ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் (இஸோ 1) "எல்லாம் கடவுளுக்கு சொந்தமானது." அது ஒரு உண்மை. மாயையின் தாக்கத்தினால் "இது எனது சொத்து." என்று நாம் சிந்திக்கிறோம். இந்த குஷன் என்று வைத்துக்கொள்வதைப் போல. மரம் எங்கிருந்து வந்தது? யாராவது விறகு தயாரித்திருக்கிறார்களா? யார் தயாரித்தார்கள்? அது கடவுளின் சொத்து. மாறாக, நாம் கடவுளின் சொத்தை திருடி, "என் சொத்து." என்று கூறிக் கொண்டிருக்கிறோம். பின்னர் ஆஸ்திரேலியா. ஆங்கிலேயர்கள் இங்கு வந்தார்கள், ஆனால் இது ஆங்கிலேயர்களின் சொத்தா? அது அங்கிருந்தது. அமெரிக்கா, அது அங்கிருந்தது. எல்லாம் முடிந்ததும், அது இருக்கும். நடுவில் நாம் வந்து, "இது என் சொத்து," என்று கூறிக்கொண்டு போராடுகிறோம். இல்லையா? நீங்கள் ஒரு வழக்கறிஞர், நீங்கள் சிறப்பாக தீர்மானிக்க முடியும்.

வாலி ஸ்ட்ரோப்ஸ்: அவர் பயன்படுத்திய வாதம் அதுதான்.

ரேமண்ட் லோபஸ்: இல்லை, அது (தெளிவற்றது). (சிரிப்பு)

பிரபுபாதர்: முதலில் எல்லாம் கடவுளுக்கு சொந்தமானது. ஆகவே, "இது எனது சொத்து" என்று நாம் ஏன் கூறுகிறோம்? நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் உட்கார்ந்து, "இது எனது சொத்து," என்று நீங்கள் கூறினால், அது மிகச் சிறந்த தீர்ப்பா? நீங்கள் வெளியில் இருந்து வந்திருக்கிறீர்கள், இரண்டு மணி நேரம் இங்கே உட்கார அனுமதிக்கப்படுகிறீர்கள், இது எனது சொத்து ..." என்று நீங்கள் கூறினால், இதேபோல், நாம் இங்கு வருகிறோம். நாம் அமெரிக்காவில் அல்லது ஆஸ்திரேலியாவில் அல்லது இந்தியாவில் பிறக்கிறோம், ஐம்பது, அறுபது அல்லது நூறு ஆண்டுகள் வரை இருக்கின்றோம், "இது என் சொத்து" என்று நான் ஏன் கூற வேண்டும்?