TA/Prabhupada 1054 - விஞ்ஞானி, தத்துவஞானி, அறிஞர்கள் - அனைவரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்
750522 - Conversation B - Melbourne
பிரபுபாதர்: எனவே இந்த ஐக்கிய நாடு தோல்வி காணும், அதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அது தோல்வி காணும்.
பாப் பார்ன்: அது தோல்வியடைவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை.
பிரபுபாதர்: ஹ்ம்?
பாப் பார்ன்: அது தோல்வியடைவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. நான் நினைக்கவில்லை ... உலகம் முழுவதும் நிச்சயமாக விஷயங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். அவர்கள் எந்த திட்டத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தது.
பிரபுபாதர்: இல்லை, என்ன மாறுகிறது? அவர்கள் மீண்டும் போருக்கு தயாராகி வருகின்றனர். எங்கே மாறுகிறது? ஒரு சிறிய தூண்டுதல், போர் நடக்கலாம்.
ரேமண்ட் லோபஸ்: ஆம், ஆனால் மக்கள் இப்போது மாறுகிறார்கள். நீங்கள் இளைஞர்களைப் பெறுகிறீர்கள், பல ஆண்டுகளில் முதல் முறையாக, விழிப்புடன் இருக்கிறார்கள், மற்றும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியே உள்ள விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர், அவர்களின் சொந்த தனிப்பட்ட நிலை அல்லது அது எதுவாக இருந்தாலும். மக்கள், இளைஞர்கள் இப்போது வறுமை போன்ற விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் பங்களாதேஷ் மற்றும் பலவற்றில் ஆர்வமாக உள்ளனர். இது நன்றாக இருக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டிருக்கிறீர்கள் நான் நன்றாக இருக்கிறேன், என்னுடையதை நான் கவனிப்பேன்," என்ற எண்ணம் பெற்றவர்கள், ஒட்டுமொத்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல். உங்களிடம் வெவ்வேறு கருத்துக்கள், வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கும் வரை, நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது பிடிபட மிகவும் கடினமாக இருக்கும்.
பிரபுபாதர்: ஆம், அது முதலில் ஒன்றுபட வேண்டும். அந்த... முதல் விஷயம் என்னவென்றால், எல்லாமே கடவுளுக்கு சொந்தமானது என்பதை எல்லோரும் நம்ப வேண்டும் அல்லது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு கடவுளைப் பற்றிய கருத்தாக்கம் கூட இல்லை. அது... தற்போதைய தருணத்தில் ஒட்டுமொத்த மனித சமுதாயமும், பெரும்பான்மை, அவர்கள் கடவுளற்றவர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட். அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. விஞ்ஞானி, தத்துவவாதி, அறிஞர்கள்-அனைவரும் கடவுளற்றவர்கள். கடவுளை எவ்வாறு மறுப்பது என்பது விஞ்ஞானிகளின் சிறப்பு வேலை. "எல்லாமே விஞ்ஞானம். எல்லாவற்றையும் நாம் அறிவியலால் செய்ய முடியும். கடவுளின் தேவை இல்லை." என்று அவர்கள் கூறுகிறார்கள். ஹூ?
வாலி ஸ்ட்ரோப்ஸ்: நான் இனிமேல் அப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை. அவர்கள் இன்னும் நிறைய அறிவொளி பெற்றவர்கள்.
பிரபுபாதர்: இனி இல்லையா?
வாலி ஸ்ட்ரோப்ஸ்: சரி, சில வட்டங்களில், ஆம், நான் நினைக்கிறேன்.
பிரபுபாதர்: அது ஒருபோதும் இல்லை, ஆனால் அவர்கள் அதை உணர்ந்தால், அது மிகவும் நல்லது.
ரேமண்ட் லோபஸ்: ஆனால் விஞ்ஞானிகள் கடவுளின் விருப்பத்திற்கு நேர்மாறாக செயல்படுகிறார்கள் என்று நீங்கள் கூற முடியாது.
பிரபுபாதர்: ஆம், அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள். ஓ, ஆம். நான் பல விஞ்ஞானிகளை சந்தித்தேன். "விஞ்ஞான முன்னேற்றத்தால் எல்லாவற்றையும் நாங்கள் தீர்ப்போம்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்." அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்.
ரேமண்ட் லோபஸ்: ஆனால் அவர்கள் ...
பிரபுபாதர்: ஒரு பெரிய கோட்பாடு, வேதியியல் கோட்பாடு இருப்பதைப் போல. ஒரு பெரிய விஞ்ஞானி ... பெரியவர் அல்லது சிறியவர், அவர் எதுவாக இருந்தாலும் அவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ரேமண்ட் லோபஸ்: அவர் நடுத்தர அளவிலானவர். (சிரிக்கிறார்)
பிரபுபாதர்: ஹூ?
ரேமண்ட் லோபஸ்: அவர் நடுத்தர அளவிலானவர்.
பிரபுபாதர்: ஆம். வேதியியல் கலவையால், வேதியியல் பரிணாமத்தால், ரசாயனங்களிலிருந்து, வாழ்க்கை வந்துள்ளது என்ற கோட்பாட்டை அவர் உருவாக்கி வருகிறார். டார்வின் கோட்பாடும் அதுதான். இது அவர்களின் ... பெரிய, பெரிய விஞ்ஞானிகள், அவர்கள் மிகவும் முட்டாள்கள், வாழ்க்கை ஜடப்பொருளில் இருந்து வந்தது என்னும் அளவிற்கு. ஆதாரம் எங்கே? அவர் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் விரிவுரை செய்து கொண்டிருந்தார், ஒரு மாணவர் இருந்தார், அவர் என் சீடர், அவர் அதற்கு சவால் விடுத்தார். நீங்கள் ரசாயனங்கள் பெற்றால், நீங்கள் வாழ்க்கையை தயாரிக்க முடியுமா? " அந்த பதில், "என்னால் சொல்ல முடியாது." ஏன்? இந்த கோட்பாட்டை நீங்கள் வைக்கிறீர்கள், வாழ்க்கை ரசாயனத்திலிருந்து வந்தது. எனவே அறிவியல் என்றால் அவதானிப்பு மற்றும் பரிசோதனை. ரசாயனங்கள் ஒரு வாழ்க்கையை உருவாக்கியுள்ளன என்பதை இப்போது சோதனை முறையில் நிரூபிக்கவும்.
ரேமண்ட் லோபஸ்: அவர்கள் முயற்சி செய்கிறார்கள். (சிரிக்கிறார்)
பிரபுபாதர்: அது மற்றொரு முட்டாள்தனம். நீங்கள் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது சட்டத்தரணியாகவோ இருக்க முயற்சிக்கும்போது, நீங்கள் சட்டத்தரணி என்று அர்த்தமல்ல. நீங்கள் சட்ட மாணவராக இருக்கும்போது "நான் பாரிஸ்டர்" அல்லது "வக்கீல்" என்று சொல்ல முடியாது. நீங்கள் சொல்ல முடியாது. நீங்கள் முயற்சிக்கிறீர்கள், அது மற்றொரு விஷயம். ஆனால் அவர்கள் முயற்சிக்கும்போது, அவர்கள் தலைவர் பதவியை எடுத்துக்கொள்கிறார்கள். அதுதான் தவறானது. அது விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீமத்-பாகவதம், அந்தா யதாந்தைர் உபனீயமானா: (ஸ்ரீ.பா. 7.5.31): "ஒரு குருடன் இன்னும் பல குருடர்களை வழிநடத்த முயற்சிக்கிறான். " அத்தகைய வழிநடத்துதலின் பயன்பாடு என்ன? தலைவர் குருடராக இருந்தால், அவர் மற்ற குருடர்களுக்கு எப்படி நல்லது செய்வார்?
பாப் பார்ன்: பீத்தோவன் காது கேளாதவர்.
பிரபுபாதர்: ஹ்ம்? பாப் பார்ன்: பீத்தோவன் காது கேளாதவர்.
பிரபுபாதர்: அது என்ன?
மதுத்வினா: பீத்தோவன், சிறந்த இசையமைப்பாளர், அவர் காது கேளாதவர்.
பாப் பார்ன்: குறைந்தது, அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி.
ரேமண்ட் லோபஸ்: ஆனால் நன்மைக்காக மக்கள் நல்லதைச் செய்ய முடியாதா?
பிரபுபாதர்: ஆனால் எது நல்லது என்று அவருக்குத் தெரியாது.
ரேமண்ட் லோபஸ்: ஆனால் சில விஷயங்கள் உள்ளன ...
பிரபுபாதர்: எனவே நான் குருடு என்று சொல்கிறேன். எது நல்லது என்று அவருக்குத் தெரியாது. கடவுளைப் புரிந்துகொள்வதே உண்மையான நன்மை. அதுவே உண்மையான நன்மை.
ரேமண்ட் லோபஸ்: ஆனால் நீங்கள் செய்யாத சில விஷயங்கள் உள்ளன ... அவை நல்லது, நீங்கள் தாமாகவே நல்லது என்று ஏற்றுக்கொள்ளலாம். இப்போது, ஒரு வயதான பெண்மணியை ஒரு கார் மோதுவதை கண்டால், நீங்கள் சென்று அவளுக்கு உதவுங்கள். இப்போது சில விஷயங்கள் தாமாகவே நல்லது, நான் நினைக்கிறேன், கடவுளைப் பற்றிய எந்தவொரு கருத்தும் அவர்களுக்கு இல்லையென்றாலும், மக்கள் எதிர்வினையாற்றி நல்ல காரியத்தைச் செய்வார்கள்.
பிரபுபாதர்: இல்லை. உங்களுக்கு உண்மையான தளம் கிடைக்காவிட்டால், நீங்கள் எவ்வாறு நல்லதைச் செய்ய முடியும்? எங்கள் மதுத்விஷ மகாராஜா உங்களுக்கு கடமைப்பட்டதைப் போல. அவர்கள் சட்ட விவகாரங்களில் சில நன்மைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு வழக்கறிஞராக, சட்டப்பூர்வ மனிதராக இல்லாவிட்டால், அதை எவ்வாறு செய்ய முடியும்? நல்லது செய்ய உங்களுக்கு மனம் இருக்கிறது, ஆனால் நீங்கள் ஒரு வழக்கறிஞராக இல்லாவிட்டால், நீங்கள் எப்படி செய்ய முடியும்?
வாலி ஸ்ட்ரோப்ஸ்: ஆனால் செய்ய நிறைய வழக்கறிஞர்கள் இருப்பார்கள் ...
பிரபுபாதர்: இல்லை, அது வேறு விஷயம். நான் உங்களைப் பற்றி பேசுகிறேன். ஒருவருக்கு எது நல்லது என்று தெரியாவிட்டால், அவன் எப்படி நன்மை செய்வான்? முதல் வேலை என்னவென்றால், நல்லது எது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். பின்னர் அவர் ஏதாவது நல்லது செய்ய முடியும். இல்லையெனில், குரங்கைப் போல குதிப்பதால் என்ன பயன்? அவர் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், சட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியும்; நீங்கள் நல்லது செய்ய முடியும். ஆனால் ஒரு சாதாரண மனிதர் வழக்கறிஞர் அல்லாத ஒரு மனிதர், அவர் எப்படி நல்லதைச் செய்ய முடியும்? எனவே, சமூகத்திற்கு நன்மை செய்ய தன்னைத் தலைவராகக் காட்டிக் கொள்ளும் எவரும், நல்லது எது என்பதை அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.