TA/Prabhupada 0321 - நீ எப்பொழுதும் சக்தியின் ஆதாரத்துடன் இணைந்து இருக்கவேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0321 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 12:57, 25 April 2018



Lecture on SB 1.15.28 -- Los Angeles, December 6, 1973

சைதன்ய மஹாப்ரபு கூறுகிறார், தகுந்த நடத்தையும் இருக்கவேண்டும். எப்படி கற்பிக்க பட்டிருக்கிறதோ அப்படியே. ஆபனி ஆசாரி, பிறகு தான் நீ மற்றவர்களுக்கு கற்பிக்கலாம். நீ அப்படி நடக்காவிட்டால், உன் வார்த்தைக்கு மதிப்பே இருக்காது. (இடைவேளை)...


ஏவம் பரம்பரா ப்ராப்தம் (BG 4.2)


மின்விசை தோற்றுவிக்கும் இடத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், நமக்கு மின்சாரம் கிடைக்கும். இல்லாவிட்டால் வெறும் மின்சார கம்பி தான் இருக்கும். அதுக்கு என்ன மதிப்பு? கம்பி மட்டும் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இணைப்பும் இருக்கவேண்டும். இணைப்பை இழந்து விட்டால் அதுக்கு மதிப்பு இருப்பதில்லை. ஆகையால் கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் நீ எப்பொழுதும் சக்தியின் ஆதாரத்துடன் இணைந்து இருக்கவேண்டும். பிறகு நீ எங்கே சென்றாலும் அங்கு வெளிச்சம் உண்டாகும். அங்கு வெளிச்சம் தெரியும். நீ இணைப்பை இழந்தால், வெளிச்சம் இருக்காது. பல்பு இருக்கிறது, மின் கம்பியும் இருக்கிறது; சுவிட்சும் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது.


அர்ஜுனனுக்கும் அதே உணர்வு தான், அதாவது "நான் அதே அர்ஜுனன் தான். குருக்ஷேத்திரத்தின் போர்முனையில் போரிட்ட அதே அர்ஜுனன் தான் நான். நான் ஒரு புகழ் பெற்ற மாவீரனாக இருந்தேன், என் வில்லும் அதே வில் தான், என் அம்பும் அதே அம்பு தான். ஆனால் இப்பொழுது அதுக்கு செயலற்றதாகிவிட்டது, ஏனென்றால் கிருஷ்ணருடன் தொடர்பு இல்லை. கிருஷ்ணர் இல்லை." ஆக அவர் கிருஷ்ணரின் சொல்லை ஞாபகப்படுத்திக் கொண்டார். குருக்ஷேத்திரத்தில் அவனுக்கு கற்பித்த அதே வார்த்தைகள். கிருஷ்ணருக்கும் அவரது சொல்லுக்கும் வித்தியாசம் கிடையாது. அது பூரணமானது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் கூறினதை நீ புரிந்துகொண்டால், உடனேயே கிருஷ்ணருடன் நீ இணைக்கப்படுகிறாய். இது தான் செயல்முறை. அர்ஜுனரையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுகிறார்


ஏவம் சிந்தயதோ ஜிஷ்ணோ: க்ருஷ்ண-பாத-ஸரோருஹம்


கிருஷ்ணரை, போர்முனையில் அவர் அளித்த கற்பித்தலை நினைத்தபோது, உடனேயே அவர் சாந்தம் ஆனார். அமைதியை உணர்ந்தார். இது தான் செயல்முறை. நமக்கு கிருஷ்ணருடன் நித்தியமான நெருங்கிய உறவு இருக்கிறது. அது கற்பனையானதல்ல. இவ்வாறு நீ எப்பொழுதும் கிருஷ்ணருடன் தொடர்பு வைத்திருந்தால், எந்த சஞ்சலமும் ஏற்படாது. அமைதி.


யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத


நீ அந்த நிலையை அடைந்தால் அதுவே மீஉயர்ந்த பலன், மீஉயர்ந்த ஆதாயம், யம் லப்த்வா ச, பிறகு எந்த விதமான ஆதாயத்துக்காகவும் உனக்கு ஆசை இருக்காது. உனக்கு மீஉயர்ந்த ஆதாயம் கிடைத்ததாக நீ கருதுவாய். அமைதி. யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத யஸ்மின் ஸ்தித


மேலும் அந்த நிலையில் நீ உன்னை அசையாத வைத்திருந்தால், பிறகு குருணாபி து:கேன ந (BG 6.20-23)


மாபெரும் துயரங்களுக்கு மத்தியிலும் நீ தளர்ந்து போகாமல் இருப்பாய். அது தான் அமைதி. அது தான் அமைதி. சிறிதளவில் கஷ்டங்களாலையே தளர்ந்து போவதல்ல. நீ உண்மையிலேயே கிருஷ்ண உணர்வில் நிலையாக இருந்தால், எந்த மாபெரும் அபத்தான சூழ்நிலையிலும் நீ தளர்ந்து போக மாட்டாய். அது தான் கிருஷ்ண உணர்வின் பக்குவமான நிலை. மிக நன்றி.