TA/Prabhupada 0609 - நீங்கள் இவ்வளவு பேர் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0609 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Arr...")
(No difference)

Revision as of 04:56, 28 April 2018



Arrival Lecture -- Los Angeles, May 18, 1972

என் அன்புக்குரிய ஆண்கள் மற்றும் பெண்களே, ஆறு வருடங்களுக்கு முன்பு நான் உங்கள் தேசத்திற்கு வந்திருந்தேன், தனியாக, இந்த ஜால்ராக்களுடன். இன்று நீங்கள் இவ்வளவு பேர் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது தான் என் வெற்றி. பகவான் சைதன்ய மகாபிரபுவின் முன்னறிவிப்பு:


ப்ரதவீதெ ஆசே யதா நகராதி க்ராம், ஸர்வத்ர ப்ரசார ஹொய்பே மோர நாம (CC Antya 4.126)


பகவான் சைதன்யரின் ஆசை என்னவென்றால் "எல்லா நகரங்களிலும், பூமியின் மேற்பரப்பில் உள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும், என் நாமம் பிரசாரம் செய்யப்படும்." அவர் கிருஷ்ணரே தான், ஸ்வயம் க்ருஷ்ண, க்ருஷ்ண சைதன்ய-நாமினே, வெறும் தன் பெயரை கிருஷ்ண சைதன்ய என மாற்றி இருக்கிறார். ஆக அவர் முன்னறிவிப்பு பொய் ஆகாது. அது நிச்சயம். ஆக என் திட்டம் என்னவாக இருந்தது என்றால் "நான் அமெரிக்காவுக்கு செல்வேன். அமெரிக்கா உலகத்தை வழிநடத்தும் நாடு. அமெரிக்காவின் புதிய தலைமுறையை நம்பிக்கை அளித்தால் , அவர் அதை ஏற்றுக்கொள்வார்கள்." எனக்கு வயதாகிவிட்டது. என் எழுவதாவது வயதில் நான் இங்கு வந்திருந்தேன்; இப்போது என் வயது எழுபத்தி ஆறு. ஆக எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை இருக்கிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஒன்றில் எனக்கு ஒரு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். ஆகையால் சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் அமெரிக்க இளம் ஆண்கள், பெண்கள், புத்திசாலிகள், கிருஷ்ணரின் அனுகிரகம் பெற்றவர்கள். நீங்கள் வறுமையில் இல்லை. உங்களிடம் நிறைய வளவசதிகள் இருக்கின்றன, அந்தஸ்து இருக்கிறது. மூலப்பொருள் அளவில் உங்களிடம் நிறைந்தது இருக்கிறது. நீங்கள் தயவுசெய்து இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை தீவிரமாக எடுத்துகொண்டால், உங்கள் நாடு காப்பாற்றப்படும், பிறகு இந்த உலகமே காப்பாற்றப்படும்.