TA/Prabhupada 0097 - நான் வெறுமனே முழுச்செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள்: Difference between revisions

(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
(No difference)

Latest revision as of 05:21, 12 July 2019



His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Appearance Day, Lecture -- Los Angeles, February 7, 1969

நாம் கடினமாக போராடி இந்த இயக்கத்தை வளர தூண்டுதலாக இருந்தும், நமக்கும், உங்களுக்கும் தொண்டர்கள் கிடைக்கவில்லை என்றால், கிருஷ்ணர் திருப்தியாக இருப்பார். நம்முடைய வேலை கிருஷ்ணரை திருப்திபடுத்துவதாகும். அதுதான் பக்தி. ரிஷிகென ரிஷிகெஸ-சேவனம் பக்திர் உச்யதெ. (சி.சை.மத்ய 19.170). பக்தி என்றால் ஒருவர் தன் புலன்கள் அனைத்தையும் அவர் திருப்திக்கு ஈடுபடுத்த வேண்டும். பௌதிக வாழ்க்கையென்றால் புலன்களின் திருப்தி தனக்கே: "எனக்கு இது பிடிக்கும். எனக்கு இது பிடிக்கும். நான் ஏதாவது செய்யவேண்டும்." நான் ஏதாவது பாட வேண்டும் அல்லது ஏதாவது ஜெபிக்க வேண்டும், ஏதாவது உண்ண வேண்டும், அல்லது எதையாவது தொடவேண்டும், அல்லது ஏதாவது ருசிக்க வேண்டும். இந்த ஏதாவது என்றால், அப்படி என்றால் இந்த புலன்களை பயன்படுத்தல். அதுதான் ஜட வாழ்க்கை. "நான் அப்படிப்பட்ட மென்மையான தோலைத் தொட வேண்டும். நான் அப்படிப்பட்ட, சுவையான உணவு என்றழைக்கப்படுவதை, ருசிக்க வேண்டும். நான் இவ்வாறு நுகர வேண்டும். நான் இவ்வாறு நடக்க வேண்டும்." அதே மாதிரி - நடப்பது, ருசிப்பது, தொடுவது, அல்லது வேறு ஏதாவது - கிருஷ்ணருக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். வேறு எதையாவது தொடுவதற்கு பதிலாக, பக்தர்களின் புனிதமாக்கப்பட கமலப் பாதங்களை தொட்டால், அந்த தொடுதல் பயன் அளிக்கும். பயனற்றதை உண்பதற்கு பதிலாக, நாம் ப்ரசாதம் உண்டால், அது நன்மை அளிக்கும். வேறு எதையாவது நுகர்வதைவிட, கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட மலரை நாம் முகர்ந்தால், எதுவும் தடைப்படாது. நீங்கள் உங்கள் பாலின்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்பினால், ஆம், நீங்கள் கிருஷ்ணர் உணர்வு குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஈடுபடலாம். எதுவும் தடுக்கப்படாது. வெறுமனே தூய்மைப் படுத்தப்படும். அவ்வளவுதான். இதுதான் முழு நிகழ்ச்சி நிரல். "இதை நிறுத்துங்கள்" என்ற கேள்விக்கு இடமே இல்லை. நிறுத்த முடியாது. எவ்வாறு நிறுத்த முடியும்? ஒருவேளை நான் மனித இனமாக இருந்து, யாராவது இவ்வாறு கூறினால், "ஓ, நீங்கள் சாப்பிடக் கூடாது," அது சாத்தியமா? நான் கண்டிப்பாக உண்ண வேண்டும். ஆகையால் அங்கே நிறுத்த வேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை. அதை தூய்மைப்படுத்துவதே கேள்வியாகும். மேலும், மற்றொரு தத்துவம் யாதெனில், நான் சொல்வதாவது, வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக அதை நிராகரிக்க வேண்டும், அதை வெறுமையாக்குங்கள், எவ்வாறு என்றால், அவர்கள் சொல்வது போல், "சும்மா எதிர்பார்ப்பு இல்லாதவராகுங்கள்." அவர்கள் ஆதரிப்பார்கள். நான் எவ்வாறு எதிர்பார்ப்பு இல்லாதவராக முடியும்? எதிர்பார்ப்பு அங்கே இருக்க வேண்டும். ஆனால் நான் எதிர்பார்ப்பது கிருஷ்ணரை. ஆகையால் இது சிறந்த முறை. மேலும் மற்றவர்கள் இதை கருத்தூன்றி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அல்லது அவர்கள் நம் தத்துவத்தை ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் அதற்கு முயற்சி செய்தால், அது உங்கள் வேலை. கிருஷ்ணர் திருப்தி கொள்வார். நம் ஆச்சார்யர்கள் திருப்தி அடைவார்கள், குரு மஹாராஜ் திருப்தி அடைவார். மேலும் யஸ்ய ப்ரசாதாத் பகவத், அவர்கள் திருப்தி கொண்டால், பிறகு உங்கள் வேலை நிறைவு பெறும். மற்றவர்கள் திருப்தியடைந்தார்களா இல்லையா என்பது தேவையில்லை. நீங்கள் ஜெபிப்பதால் சில பொதுமக்கள் திருப்தி அடைகிறார்கள் - இல்லை, அதில் நாம் அக்கறை கொள்ளவில்லை. அவர் திருப்தி கொள்ளலாம் அல்லது அதிருப்தி கொள்ளலாம். ஆனால் நான் முறைப்படி ஜெபித்தால், பிறகு என் முன்னோர்கள், ஆச்சார்யர்கள் திருப்தி கொள்வார்கள். அதுதான் என் வேலை, முடிந்துவிட்டது, நான் என் சொந்த முறையில் புனையவில்லை. ஆகையால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் கிருஷ்ணர் பல நல்ல ஆண்களையும் பெண்களையும் எனக்கு உதவி செய்ய அனுப்பியுள்ளார். இந்த மங்களகரமான நாளில் ஆசீர்வாதம் பெறுங்கள். மேலும் என்னுடையது என்று எதுவும் இல்லை. நான் வெறுமனே முழுச் செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள். நான் உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் என் குரு மஹாராஜிடமிருந்து கேட்டு அறிந்துவை. நீங்களும் வெறுமனே அதே வழியை பின்பற்றுங்கள், பின் நீங்களும் ஆனந்தம் அடைவீர்கள், மேலும் உலகமும் ஆனந்தமாக இருக்கும், கிருஷ்ணரும், அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.