TA/Prabhupada 0077 - நீங்கள் விஞ்ஞானரீதியாகவும் தத்துவரீதியாகவும் கற்கலாம்: Difference between revisions

No edit summary
 
(No difference)

Latest revision as of 03:49, 27 May 2021



Ratha-yatra -- San Francisco, June 27, 1971

கிருஷ்ணர் சொல்கிறார், யாரெல்லாம் இடைவிடாது 24 மணிநேரமும் கிருஷ்ண பக்தி சேவையில் ஈடுபடுத்தி கொள்கிறார்களோ, இந்த மாணவர்களை போல, கிருஷ்ண பக்தி சங்கத்தின் உறுப்பினர்கள் 24 நான்கு மணி நேரமும் கிருஷ்ண பக்தி சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுவதை நீங்கள் பார்க்கலாம் கிருஷ்ண பக்தியில் இது மிக முக்கியமானது. அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இருக்கிறார்கள் ரதயாத்ர உற்சவம் அதில் ஒன்று. அன்று ஒருநாள் ஆவது நீங்கள் அனைவரும் கிருஷ்ண பக்தியில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள் என்றால், இது ஒன்றே பயிற்சி. நீங்கள் இந்த பயிற்சியை உங்களின் வாழ்நாள் முழுதும் பயின்றால், நீங்கள் இறக்கும் தருவாயில், அதிர்ஷ்ட வசமாக பகவானை நினைவு கூர்ந்தால், உங்களின் வாழ்க்கை வெற்றி பெற்றுவிடும். அந்த பயிற்சி தேவை படுகிறது. ஜ்ந் ஜ்ந் வாபி ஸ்மரன் லோக்கே தியாஜந்தே களேவரம் நாம் நமது உடலை விட்டு விட வேண்டும். அது நிச்சயம். இறக்கும் தருவாயில், பாகவானை நினைவு கூர்ந்தால், அந்த கணமே, நீங்கள் கிருஷ்ணரூடைய ஹிருத்ய கமலத்தில் இடம் பெறுவீர்கள். பகவான் கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனாலும் அவருக்கென ஒரு மிக உயரிய இருப்பிடம் இருக்கிறது. அதுதான் கோலோக விருந்தவன். உடல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உடல் என்பது உணர்ச்சி மயமானது. உணர்வுகளுக்கு மேலே இருப்பது மனம். அது மிக நுட்பமானது. அதுவே உணர்வுகளை கட்டுப்படுத்துவது. மனத்திற்கு மேலே இருப்பது அறிவு. அறிவுக்கு மேலே இருப்பது ஆன்மா. நம்மிடம் எந்த ஒரு குறிப்புகளும் இல்லை. ஆனால் இந்த பக்தி யோக முறையை நாம் பின்பற்றினோம் என்றால், மெதுவே 'நான்' என்பதின் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும். "நான்" என்பது உடல் அன்று. பொதுவாக, பெரிய மேதைகள், தத்துவ வல்லுநர்கள், அறிவியல் வல்லுநர்கள் அனைவருமே உடல் என்கிற ரீதியிலேயே நினைக்கின்றனர். அனைவருமே "நான்" என்பது உடல் என்றே நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. நாம் வெறும் இந்த உடல் மட்டுமல்ல. நான் விளக்குகிறேன். உடல் என்பது உணர்ச்சிகள் வயப்பட்டது. ஆனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மனது. மனத்தை கட்டுப்படுத்துவது அறிவு. மேலும் அந்த அறிவை கட்டுப்படுத்துவது ஆன்மா. அது உங்களுக்கு தெரியாது. ஆன்மாவை புரிந்து கொள்ளக்கூடிய கல்விமுறை இந்த உலகத்தில் எங்கேயும் இல்லை. இது மனிதர்களாக பிறந்த அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தேவை. மனித இனம்,விலங்குகள் போல நேரத்தை வீண் செய்வதற்கு அல்ல வெறுமனே சாப்பிடுவது, தூங்குவது, கலவு செய்வது, சண்டையிடுவது. இது விலங்குகளின் வாழ்க்கை. இந்த விஷயங்களை புரிந்துகொள்ள மேம்பட்ட மனித அறிவை பயன்படுத்த வேண்டும். நான்... நான் என்பது என்ன? நான் ஒரு தெய்வீக ஆன்மா. நான் ஒரு தெய்வீக ஆன்மா என்பதை புரிந்துகொண்டு விட்டால் உடல் பற்றிய சித்தாந்தம், உலகத்தின் பேரழிவிக்கு மிக பெரிய பங்களிப்பு செய்துள்ளது. உடல் பற்றிய வாழ்க்கை சிந்தனையில், "நான் இந்தியன்".... "நீங்கள் அமெரிக்கர்கள்" இப்படியே இன்னும் சில சில சிந்தனைகள்... ஆனால் நாம் அனைவரும் ஒன்றே. நாம் தெய்வீக ஆன்மா. நாம் அனைவரும் கிருஷ்ணர், ஜெகந்தாத் நித்திய சேவகர்கள். ஆகவே, இன்றைய நாள் இனிய நாள். மங்களகரம் நிறைந்த நாள். இன்றைய நாளில்தான் பகவான்கிருஷ்ணர் இந்த பூமியில் இருந்திருக்கிறார். குரூஷேத்திரதில் நடந்த சூரியகிரகன விழாவில் கலந்து கொண்டார். அண்ணன் பலராமனும், தங்கை ஸுபத்ரா உடன் இருந்தார்கள். அவர்கள் குரூஷேத்திரத்தை பார்வையிட வந்து இருந்தார்கள். குரூஷேத்திர பூமி இன்னும் இந்தியாவில் இருக்கிறது. நீங்கள் என்றாவது ஒருநாள் இந்தியாவிற்கு செல்லும் போது குரூஷேத்திர பூமியை நீங்களும் பார்க்கலாம். ஆகவே, இந்த ரதயாத்ர விழா கொண்டாடப்படுவது, கிருஷ்ணர்,பலராம் மற்றும் ஶுபத்ரா ஆகியோரின் குரூஷேத்திர விஜத்தின் நினைவாகவே சைதன்ய மகா பிரபு, பகவான் ஜெகநாத் நினைத்து பரவச நிலையில் இருந்தார். ஆகவே, ராதா ராணி போலஅவர் மிகவும் அன்பான மனோநிலையில் இருந்தார் "கிருஷ்ணா மீண்டும் விருந்தாவனுக்கு வந்துவிடு" என்றே அழைத்தார். ஆகவே, ரத யாத்திரைக்கு முன்பு பரவசத்தில் நடனம் ஆடினார். எங்களது சங்கத்தின் மூலம் பிரசுரிக்க பட்ட புத்தகங்களை நீங்கள் படித்தீர்கள் என்றால், உங்களால் அதை புரிந்து கொள்ள முடியும். அதில் சைதன்ய மகா பிரபுவின் போதனைகள் என்ற புத்தகம், மிக முக்கியமான புத்தகம். நீங்கள் கிருஷ்ண பக்தி வழி முறையை தெரிந்து கொள்ள எண்ணினால், எங்களிடம் போதுமான அளவு புத்தகம் உள்ளது. நீங்கள் அறிவியல் மற்றும் தத்துவபூர்வமான முறையிலும் படிக்கலாம். ஆனால், ஒருவேளை உங்களுக்கு புத்தகம் படிப்பதற்கு ஆர்வம் இல்லை என்றால், கிருஷ்ணர் நாமன்களை மட்டுமே ஜெபம் பண்ண முற்பட்டால், மெதுவாக அனைத்தும் உங்களுக்கு புரியவரும். அப்பொழுது, உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்வீர்கள். இந்த விழாவில் கலந்து கொண்டதற்காக எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். இப்பொழுது கிருஷ்ணாவின் நாமன்களை ஜெபம் செய்துகொண்டே ஜெகந்நாத் சுவாமியை பின்தொடர்வோம். ஹரே கிருஷ்ணா..