TA/Prabhupada 0078 - வெறுமனே, நம்பிக்கையுடன், நீங்கள் கேட்க முயற்சிக்கலாம்



Lecture on SB 1.2.16 -- Los Angeles, August 19, 1972

சோ śஉśர்ūṣஓḥ śரட்டட்āநாசிய வ்āசூதேவா-கத்ā-ருசிḥ இதற்கு முந்தைய வரியில் விளக்கப்பட்டுள்ளது. யத் அனுதிāசின்ā யுக்ட்āḥ (ஸ்ப் 1.2.15). யார் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார்களோ அவர்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கத்தி. கத்தியை போன்ற கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் விடுதலை ஆகி விடுவீர்கள். முடிச்சு இந்த கத்தியினால் வெட்டப்படும். ஆனால்... இப்பொழுது இந்த கத்தியை பெறுவது எப்படி? அந்த முறை இங்கு விளக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வெறுமனே நம்பிக்கை உடன் கேட்க முயல வேண்டும்.. நீங்கள் அந்த கத்தியை பெற்று விடுவீர்கள். அவ்வளவே.. உண்மையில், நமது இந்த கிருஷ்ண பக்தி நன்கு பரவிவருகிறது நாம் இந்த கத்தியை ஒன்றன் பின் ஒன்றாக பெற்று வருகிறோம்... வெறுமனே செவி வழியாக.. நான் இந்த இயக்கத்தை நீயுயர்க்கில் தொடங்கினேன். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். உண்மையில் நான் எந்த கத்தியும் வைத்து இருக்கவில்லை... சில மதங்களின் கொள்கைகளை போல, மத கோட்பாடுகளை ஒரு கையில் எடுத்து கொண்டும்.. இன்னொரு கையில் கத்தியை வைத்து கொண்டு , "நீ இந்த கோட்பாடுகளை ஏற்று கொள்ளவில்லை என்றால், உன் தலையை வெட்டி விடுவேன்".. இது வேறு விதமான போதனை... என்னிடமும் கத்தி உள்ளது. ஆனால் அந்த கத்தியை போன்றது கிடையாது. இந்த கத்தி மக்கள் கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கும்.. அவ்வளவே... வ்āசூதேவா-கத்ā-ருசிḥ... ஆகவே, எவ்வளவு சீக்கிரம் ருசி அவனுக்கு கிடைக்கிறதோ.... ருசி.. ருசி என்றால் சுவை.. ஆஹா..இங்கே கிருஷ்ணர் பற்றிய பேச்சு... மிக அருமை.. என்னை கேட்க விடுங்கள்.. இது அனேகமாய் உங்களுக்கு கத்தி கிடைத்ததை போன்றது.. அதுவும் உடனடியாக... அந்த கத்தி உங்கள் கையில். வ்āசூதேவா-கத்ā-ருசிḥ. ஆனால், யாரிடம் வருகிறது இந்த ருசி..? என்ன சுவை..? ஏனென்றால், நான் பல முறை விளக்கியது போல, அந்த சுவை ஒரு இனிப்பு மிட்டாய் போன்றது. அது இனிப்பாக இருக்கும் என்றுஅனைவருக்கும் அறிந்ததே.. ஆனால் நீங்கள் அதை ஒரு மஞ்சள் காமாலை நோயாளியிடம் கொடுத்தீர்கள் என்றால், அது அவருக்கு கசப்பான சுவையாகவே தோன்றும்.. மிட்டாய் இனிப்பான பண்டம் என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்க பட்டிருக்கும் ஒருவர், அந்த இனிப்பு மிட்டாய் மிகவும் கசப்பான சுவை தருவதாகவே உணருவார்.. அனைவருக்கும் தெரியும்.. அதுதான் உண்மை. ஆகவே சுவை, கிருஷ்ணர்-கதை, வாசு தேவர்-கதையை கேட்கும் சுவை... இந்த உலகியல் நோயால் பாதிக்க பட்டிருக்கும் மனிதனால் சுவைக்க முடியாது.. இந்த ருசி, சுவை. இந்த சுவை அறிய சில முதன்மையான செயல்பாடுகள் உள்ளன.. அது என்ன? முதலாவது, பாராட்டுவது... ஓ.. இது மிக அருமை.. Āதௌ śராதட்ā, śரட்டட்āநா... ஆகவே śராதட்ā .. பாராட்டுவது.. இதுதான் ஆரம்பம். பிறகு சாது சங்கம். (ஸீஸீ ம்யாட்ஹியா 22.83). பின் கூடி கலப்பது.. சரி, இந்த மக்கள் கிருஷ்ண பகவானை பற்றி பேசுகிறார்கள், ஜெபம் செய்கிறார்கள். நான் அங்கு சென்று, உட்கார்ந்து மேலும் மேலும் கேட்பது.. இது சாதுக்கள் உடனான சங்கமம்.. சாதுக்கள் பக்தியாளர்கள்.. அவர்களுடன் இணைத்து கொள்வது. இது இரண்டாவது நிலை. மூன்றாவது நிலை என்பது பஜன-கிரியா ஒருவர் நல்ல முறையில் தன்னை இணைத்து கொண்டவுடன், என் நாம் சீடராக ஆக கூடாது என்று தோன்றும். பின்பு நாம் அவர்களது விண்ணபத்தை பெறுவோம். " பிரபுபத, நீங்கள் தயவுசெய்து என்னை உங்களது சீடராக ஏற்று கொள்வீர்களா.' இதுவே பஜன-கிரீயாவின் தொடக்கம். பஜன-கிரீயாவின் அர்த்தம், கடவுளின் சேவைக்காக ஈடுபடுத்தி கொள்வது. இதுவே மூன்றாம் நிலை.