TA/Prabhupada 0376 - பஜஹு ரே மன பாடலின் பொருள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0376 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Pur...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0375 - La teneur et portée de Bhajahu Re Mana, partie 2|0375|FR/Prabhupada 0377 - La teneur et portée de Bhajahu Re Mana|0377}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0375 - பஜஹு ரே மன பாடலின் பாகம் 2 பொருள்|0375|TA/Prabhupada 0377 - பஜஹு ரே மன பாடலின் பொருள்|0377}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|KwZ9C5gyF6o|பஜஹு ரே மன பாடலின் பொருள்<br />- Prabhupāda 0376}}
{{youtube_right|jvkWfqAgK6g|பஜஹு ரே மன பாடலின் பொருள்<br />- Prabhupāda 0376}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 33: Line 33:




''ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ'' ([[Vanisource:SB 9.4.18|SB 9.4.18]])
''ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ'' ([[Vanisource:SB 9.4.18-20|ஸ்ரீமத் பாகவதம் 9.4.18]])





Latest revision as of 19:32, 29 June 2021



Purport to Bhajahu Re Mana -- Los Angeles, January 7, 1969

பஜஹு ரே மன, ஸ்ரீ நந்த-நந்தன அபய-சரணாரவிந்த ரே. இந்த பாடல், ஒரு பெரிய கவிஞரும் வைஷ்ணவருமான கோவிந்த தாசரால் எழுதப்பட்டது. நீ உன் மனதை கட்டுப்பட்டில் வைத்திருந்தால், உன் மனமே உனக்கு சிறந்த தோழனாக இருக்கும், என்று பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் உன்‌ மனம் கட்டுக்கடங்காமல் இருந்தால், அதுவே உனக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கும். ஆக நாம் தோழர்களையும் எதிரிகளையும் தேடிச் செல்வதற்கு அவசியமில்லை, இருவரும் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். நம்மால் மனதின் நட்பை பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், பக்குவத்தின் மீயுயர்ந்த நிலைக்கு உயரலாம். ஆனால் மனதை ஒரு எதிரியாக உருவாக்கினால், நரகத்துக்கு செல்லும் பாதையில் எந்த தடையும் இருக்காது. ஆகையால் கோவிந்த தாச தாக்குர் தன் மனதை உபதேசிக்கிறார். யோகீகள் உடலை வளைத்து பல்வேறு முறைகளால் மனதை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அதுவும் அங்கிகாரம் பெற்றது தான். ஆனால் நீண்டகாலம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும், மேலும் சிலசமயங்களில் தோல்வியையும் சந்திக்க வேண்டியிருக்கும. அதிகபட்சம் தோல்வி தான். விஸ்வாமித்திரரைப் போன்ற ஒரு பெரிய யோகியே தோல்வியடைந்தார் என்றால் இந்த சின்னஞ்சிறிய அறிவற்ற யோகிகளைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன? ஆக கோவிந்த தாசர் அறிவுறுத்துகிறார், "உன் மனதை வெறும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்தினாலே போதும். மனம் தானாகவே அடங்கிவிடும்." கிருஷ்ண பக்தியைத் தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபட வாய்ப்பு இல்லாவிட்டால், மனம் எனக்கு எதிரி ஆகமுடியாது. அது இயல்பாகவே எனக்கு நண்பன் ஆகிவிடும். அது தான் ஸ்ரீமத் பாகவதத்தின் அறிவுறுத்தல்:


ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ (ஸ்ரீமத் பாகவதம் 9.4.18)


அரசர் அம்பாரிசர், முதலில் தன் மனதை கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்தினார். அதுபோலவே, இங்கேயும், கோவிந்த தாச தாக்குர், தன் மனதை கேட்கிறார்: "என் அன்பு மனமே, நீ தம்மை அபய-சரணாரவிந்த என்ற தாமரை பாதங்களில் ஈடுபடுத்திக்கொள்." அது தான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் பெயர். அபய என்றால் பயமற்ற. கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் சரணடைந்தால் உடனேயே நீ பயமற்றவன் ஆகலாம். ஆக அவர் அறிவுறுத்துகிறார் "என் அன்பு மனமே, நீ கோவிந்தனின் தாமரை பாதங்களின் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள். பஜஹு ரே மன ஸ்ரீ நந்த-நந்தன. அவர் "கோவிந்த" என அழைக்கவில்லை. அவர் கிருஷ்ணரை "நந்த மக்ராஜரின் மகனே." என்று அழைக்கிறார். "அந்த தாமரை பாதங்களில் பயம் என்பதற்கு இடமே கிடையாது, அதனால் உனக்கு மாயையின் தாக்குதலிலிருந்து இனிமேல் எந்த பயமும் இருக்காது." "ஓ, நான் அனுபவிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றதே. கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் எப்படி என்னால் மனதை ஒருமுகப்படுத்த முடியும்?" அதற்கு கோவிந்த தாசர் அறிவுறுத்துகிறார், "இல்லை, இல்லை." துர்லப மானவ-ஜனம. "நீ உன் வாழ்க்கையை அவ்வாறு வீணாக்காதே. இந்த மனித பிறப்பு என்பது மிகவும் அரிதானது. பற்பல கோடிக்கணக்கான பிறவிகளுக்கு பிறகு உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது." துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. "ஆகையால் நீ வேறு எங்கும் செல்லாதே. நீ வெறும் தூய பக்தர்களின் தொடர்பில் இரு." தாரஹ எய் பவ-ஸிந்து ரே." பிறகு உன்னால் அறியாமை கடலைத் தாண்டிச் செல்ல முடியும்." "ஓ, நான் என் மனதை எப்போதும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தினால், பிறகு எப்படி என்னால் என் குடும்பத்தை, என் மற்ற செல்வங்களை அனுபவிக்க முடியும்?" அதற்கு கோவிந்த தாசர் கூறுகிறார், எய் தன யௌவ்வன. "உனக்கு உன் செல்வத்தையும் இளமையையும் அனுபவிக்க ஆசை இருக்கிறது," எய் தன யௌவ்வன, புத்ர பரிஜன, "மேலும் உனக்கு நட்பு, நேசம் மற்றும் குடும்பம், இவைகளால் நிறைந்த சமுதாயத்தை அனுபவிக்க ஆசை இருக்கிறது, ஆனால் நான் கூறுவது என்னவென்றால், "இத்தே கி ஆச்சே பரதீதி ரே, "இந்த அர்த்தமற்ற விஷயங்களில் தைவீக இன்பம் இருப்பதாக நினைக்கிறாயா? இல்லை, எதுவும் கிடையாது. இது வெறும் மாயை." எய் தன யௌவ்வன புத்ர பரிஜன, இத்தே கி ஆச்சே பரதீதி ரே. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே, தாரஹ எய் பவ-ஸிந்து ரே. ஷீத ஆதப பாத பரிசன எய் தின ஜாமினி ஜாகி ரே. விபஃலே ஸேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகி ரே கோவிந்த தாசர் தன் மனதிற்கு ஞாபகப்படுத்துகிறார்: "உனக்கு பௌதீக சுகத்தின் அனுபவம் இருக்கிறது. பௌதீக சுகம் என்றால், உடலுரவு என்பது தான் பௌதீக சுகத்தின் இலக்கு. எவ்வளவு நேரம் இந்த உடலுறவினால் ஏற்படும் சுகம் நீடிக்கும் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" சபல. "மினுமினுப்பது போல். சில வினாடிகள். அவ்வளவு தான். ஆனால் அதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறாயா? ஷீத ஆதப. "பனிமழைக்காக கவலைப்படுவதில்லை. சுட்டெரிக்கும் வெப்பத்திற்காக கவலைப்படுவதில்லை. கொட்டும் மழைக்காக கவலை இல்லை. இரவில் பணியாற்றுவதற்கு கூட கவலை இல்லை. இரவும் பகல் முழுவதும் நீ உழைக்கிறாய். இறுதியில் பலன் என்ன? வெறும் அந்த மினுமினுக்கும் இன்பத்தின் ஒரு நொடிக்காக. இதற்காக உனக்கு வெட்கமாக இல்லையா?" ஆக


ஷீத ஆதப பாத பரிசன, எய் தின ஜாமினி ஜாகி ரே


தின என்றால் பகல், மற்றும் ஜாமினி என்றால் இரவு. ஆக "பகலும் இரவும், நீ இவ்வளவு கடுமையாக உழைக்கிறாய். எதற்காக?" சபல ஸுக-லப லாகி ரே. "வெறும் அந்த மினுமினுக்கும் இன்பத்திற்காக." பிறகு அவர் கூறுகிறார், எய் தன யௌவ்வன புத்ர பரிஜன, இத்தே கி ஆச்சே பரதீதி ரே. "வாஸ்தவத்தில் இந்த வாழ்க்கையையோ, இளமையையோ, குடும்பத்தையோ, சமுதாயத்தையோ அனுபவிப்பதில் எந்த இன்பமும் இல்லை, அதாவது நித்தியமான இன்பம், தைவீக இன்பம், எந்த இன்பமும் இல்லை, எந்த தைவீக இன்பமும் இல்லை."

ஆகையால் கமல-தல-ஜல, ஜீவன தலமல. "மேலும் நீ எத்தனை காலம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க போகிறாய் என்பது உனக்கு தெரியாது. ஏனென்றால் அது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீ தள்ளாடும் நிலையில் இருக்கிறாய். தாமரை இலையில் தண்ணீரைப் போல் தான். அது சாய்கிறது. எந்த நொடியிலும் அது கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. ஆக நம் வாழ்க்கையும் சாய்ந்துக் கொண்டிருக்கிறது. எந்த நிமிடமும் அது சரிந்து உடையலாம். நாம் தற்செயலாக சந்தித்திருக்கலாம், எதோ ஒரு அபாயம் ஏற்பட்டு எல்லாம் முடித்துவிடலாம். ஆகையால் வாழ்க்கையை அப்படி வீணாக்காதே. "பஜஹு ஹரி-பத நீதி ரே. "எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டிரு. அது தான் உன் வாழ்க்கையின் வெற்றியாகும்." மேலும் இந்த கிருஷ்ண பக்தியில் எப்படி பணியாற்றுவது? அவர் அறிவுறுத்துகிறார், ஷ்ரவண கீர்த்தன, ஸ்மரண வந்தன, பாத-ஸேவன தாஸ்ய ரே. இந்த ஒன்பது திருப்பணிகளில் எதாவது ஒன்றை பின்பற்றலாம். உன்னால் அனைத்து முறைகளையும் பின்பற்றமுடிந்தால், சிறந்தது. இல்லாவிட்டால் அதில் எட்டு பணிகளை செய்யலாம். ஏழோ, ஆறோ, ஐந்தோ, நான்கோ பணிகளை ஏற்கலாம். ஆனால் அவையில் ஒரு பணியை செய்தாலும், வாழ்க்கையின் இலக்கு நிறைவேறும். அந்த ஒன்பது முறைகள் எவை? ஷ்ரவணம் கீர்த்தனம். தகுதியுள்ள அதிகாரிகளிடமிருந்து கேட்பது. பிறகு ஜெபிப்பது. ஷ்ரவணம் கீர்த்தனம். ஸ்மரணம். நினைத்திருப்பது. வந்தனம், வணங்குவது. ஷ்ரவண கீர்த்தனம், ஸ்மரணம் வந்தன, பாத-ஸேவனம். அவர் தாமரை பாதங்களில் ஒரு நித்திய தாசனாக பணியாற்றுவது. பூஜன ஸகீ-ஜன. அல்லது குறைந்தபட்சம் கிருஷ்ணரை ஒரு நண்பனாக நேசிக்க முயற்சி செய். ஆத்ம-நிவேதன. அல்லது கிருஷ்ணருக்காக அனைத்தையும் கைவிடவேண்டும். அது தான் பக்தித் தொண்டின் முறையாகும், மற்றும் கோவிந்த தாசர் அத்தகைய கிருஷ்ண பக்தி நிறைந்த திருப்பணியை செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்.