TA/Prabhupada 0251 - கோபியர்கள் கிருஷ்ணரைச் சேர்ந்த நித்தியமாணவர்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0251 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0250 - Agissez pour Krishna, Dieu, pas pour votre intérêt personnel|0250|FR/Prabhupada 0252 - Nous nous pensons indépendants|0252}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0250 - கிருஷ்ணருக்காகச் செயல்புரியுங்கள், பகவானுக்காக செயல்புரியுங்கள், உங்கள் தனிப்பட்ட ஆ|0250|TA/Prabhupada 0252 - நாம் சுதந்திரமானவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்|0252}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|SqOjpXLObI4|Krishna had 16,108 wives, and almost in each time He had to fight, to gain the wife<br />- Prabhupāda 0251}}
{{youtube_right|kJNqp3e8TWE|கோபியர்கள் கிருஷ்ணரைச் சேர்ந்த நித்தியமாணவர்கள்<br />- Prabhupāda 0251}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 29: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
எனவே பகவத் கீதை நமக்கு அளிக்கும் முழு போதனையும் இது தான்: நீங்கள் தமக்கெனச் செயல்படக் கூடாது;  கிருஷ்ணருக்காக மட்டும் செயல்பட வேண்டும். எனவே போர் புரிவதும் கிருஷ்ணருக்காக,   ஏதேனும் அருவருப்பான செயலைச் செய்தாலும் கிருஷ்ணருக்காகவே செய்ய வேண்டும்… கோபியர்கள் போல .... கோபியர்கள் கிருஷ்ணரிடம் சொக்கிப் போயிருந்தனர். கிருஷ்ணர் ஒரு சிறுவன், மிகவும் அழகானவன், மேலும் கோபியர்களோ இளம் பெண்கள். அது மேலோட்டமானது ... உண்மையில், கோபியர்கள் கிருஷ்ணரின் நிரந்தர கூட்டாளிகள். Ānanda-cinmaya-rasa-pratibhāvitābhiḥ (Bs. 5.37). அவர்கள் கிருஷ்ணரின் விரிவாக்கங்கள். அவர்கள் கிருஷ்ணரின் இன்பாற்றாலின் விரிவாக்கங்கள். அவர்கள் கிருஷ்ணரின் இன்பத்திற்கு பொருத்தமானவர்கள். அவர்கள் சாதாரண பெண்கள் இல்லை. ஆனால் மேலோட்டமாக, எந்த ஆபத்திலும் எப்படி கிருஷ்ணரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக ... எனவே கோபியர்கள், அவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணரால் கவரப்பட்ட போது ... கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார், அவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு அவர்கள் தம் வீட்டை விட்டு வெளியேறினர். சிலர் பூட்டி வைக்கப்பட்டனர். அவர்கள் தம் உயிரையேக்  கூடக் கொடுத்தனர். அவர்கள் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தனர். இப்போது இந்த வகையான நடவடிக்கையை, இளம் பெண்கள்... வேதப் பண்பாட்டின்படி, அவர்கள் தம் தந்தையின், கணவனின் அல்லது சகோதரனின் பாதுகாப்பிலிருந்து வெளியே போக முடியாது. இல்லை, அவர்கள் போக முடியாது. குறிப்பாக நள்ளிரவில். எனவே இது வேதக் கொள்கைக்கு விரோதமானது. பகிரங்கமாக அது ஒரு வகையான விபச்சாரமாகும். ஆனால் அது கிருஷ்ணருக்காகச் செய்யப்பட்டது என்பதால், இறைவன் சைதன்ய மஹாபிரபு இவ்வாறு பரிந்துரைக்கிறார், ramyā kācid upāsanā vraja-vadhubhiḥ kalpitā: "வ்ரஜ  கோபியர்கள் பாவித்த வழிபாட்டு முறையைவிட மேம்பட்டது வேறு எதுவும் கிடையாது. Vraja-vadhu. மிகவும் வெறுக்கத்தக்கது... ஒரு இளம் பெண் தன் கணவரின், தந்தையின் பாதுகாப்பை விட்டு மற்றொரு இளைஞனிடம் செல்வது என்பது வேத கலாச்சாரத்தின்படி, மிகவும் வெறுக்கத்தக்கதாகும். ஆனால் அப்படி இருந்தும், அது கிருஷ்ணரை மையமாகக் கொண்டதால், அது மிக உயர்ந்த வகை வழிபாடு என்று ஏற்கப்படுகிறது. அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு ஆகும். நாம் எப்படி கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்று, கிருஷ்ணரிடம் மட்டுமே எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நம் வாழ்வே வெற்றியடைந்து விடுகிறது. மேலும் மனித வாழ்க்கை... ஏனெனில் நாமும் சில கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வைகுண்டத்திலிருந்து தானே வந்தோம். Anādi karama-phale. Anādi என்றால் படைப்பிற்கு முன் என்று பொருள். வாழும் உயிரினங்களான நாம், நாம் அழிவற்றவர்கள். படைப்பும் கூட பல இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் அழிந்துவிடும், ஆனால் வாழும் உயிரினங்கள் அழிவதில்லை. Na hanyate hanyamāne śarīre (BG 2.20). அவை தொடர்ந்து இருக்கும். எனவே இந்த முழு அண்ட சராசரத்தின் வெளிப்பாடு அழிக்கப்படும் போது, வாழும் உயிரினங்கள் விஷ்ணுவின் உடலில் வந்து தங்கிவிடுகின்றன. பின்னர் மீண்டும் மற்றொரு படைப்பு நடக்கும்போது, அவை வெளியே மீண்டும் வந்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. உண்மையான ஆசையோ, எப்படி வீடு பேறு அடைவது, எப்படி தெய்வத் தலைவனை அடைவது என்பதே. எனவே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தினால், இந்த வாழ்க்கை, மனித வடிவில் இந்த வாழ்க்கை, அது மிக, மிக ஆபத்தானது. மீண்டும் நாம், பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியை ஏற்க வேண்டும். அது மட்டும் இல்லை, நாம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றால், பின்னர் மீண்டும் அங்கு முழு படைப்பின் அழிவும் ஏற்பட்டுவிடும். பின் நாம் பல இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருட காலத்திற்கு விஷ்ணுவின் உடலினுள் தங்க வேண்டிவரும். மீண்டும் நாம் வர வேண்டும். ஆக, எனவே அது anādi karama-phale  என்று அழைக்கப்படுகிறது. Anādi என்றால் "படைப்புக்கு முன்" என்று அர்த்தம். இது நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் புத்தியற்ற உயிரினங்களுக்குக் கற்பிக்கக் கிருஷ்ணரே தனிப்பட்ட முறையில் வருகிறார். கிருஷ்ணர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, மீண்டும் தெய்வத்தலைவனிடம் அழைத்துச் செல்வதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார். ஏனெனில் நான் அனைவரும் கிருஷ்ணரின் ஒரு பகுதியே. உங்கள் மகன் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்,  உங்கள், கவலை எல்லாம், "ஓ, ஏதாவது விபத்து ஏற்பட்டு விடலாம், பாவம் சின்னப் பையன் அடி பட்டி உயிரிழக்க நேர்ந்துவிடும்” என்று இருக்காதா. எனவே நீங்கள், சென்று கண்டறிய முயற்சிக்கிறீர்கள். அதேபோல், கிருஷ்ணரின் நிலையும் இதைப் போன்றது தான். நாம் இந்தப் பௌதிக உலகில் ஒவ்வொரு பிறவியிலும் அவதியுற்று வருகிறோம். Duḥkhālayam aśāśvatam ([[Vanisource:BG 8.15|BG 8.15]]). இந்த இடம் துன்பம் நிறைந்தது. ஆனால் மாயையின் ஜாலத்தால், நான்  இந்தப் பரிதாபகரமான நிலையை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று எடுத்துக் கொள்கிறோம். இது தான் மாயை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அது தான்... இந்த பொருள் உலகில் சுகம் ஏதும் இல்லை. எல்லாம் பரிதாபகரமானவை தான். இந்தப் பௌதிக உலகில் அனைத்தும் மோசமானது என்று எவ்வளவு விரைவாக நாம் புரிந்து கொள்கிறோமோ, எவ்வளவு விரைவாக நாம் இந்தப் பொருள் உலகை விட்டு, மீண்டும் வீட்டிற்குச் செல்லத் தயார் ஆகிறோமோ…, அது தான் நம் உணர்வு. இல்லையெனில், நாம் என்ன செய்தாலும்ம், தோற்கடிக்கவே படுகிறோம். ஏனெனில் நாம் நோக்கத்தையே தோலைத்துவிடுகிறோம். Na te viduḥ svārtha-gatiṁ hi viṣṇum ([[Vanisource:SB 7.5.31|SB 7.5.31]]). Durāśayā. நாம், நம்பிக்கைய்கு மேல் நம்பிக்கை வைத்து – அது ஒருபோதும் நிறைவேறாது- நாம் இங்கு மகிழ்ச்சியாக இருக்க இறையுணர்வு இல்லாமல், சில விஷயங்களை ஈடுகட்டி முயற்சிக்கிறோம். அது முடியவே முடியாது... Na te viduḥ svārtha-gatiṁ hi viṣṇuṁ durāśayā. Durāśayā என்றால் "என்றும் நிறைவேறாத நம்பிக்கை" என்று பொருள்.  
அக பகவத் கீதையின் உபதேசத்தின் மொத்த சாரமும் என்னவென்றால்: நீங்கள் சுய திருப்திக்காக செயல்படக் கூடாது;  கிருஷ்ணருக்காக மட்டும் செயல்பட வேண்டும். அக போர் புரிவதும் கிருஷ்ணருக்காக, அல்லது அதைவிட வெறுக்கத்தக்க செயலாக இருந்தாலும் சரி, கிருஷ்ணருக்காக செய்ய தயாராக... கோபியர்களைப் போல் தான். கோபியர்கள் கிருஷ்ணரால் முற்றிலும் கவரப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் மிகவும் அழகான ஒரு குமரனாக இருந்தார், மற்றும் கோபியர்களோ இளம் பெண்கள். அது வெளித்தோற்றம்... உண்மையில், கோபியர்கள் கிருஷ்ணரின் நிரந்தர துனைமையர்கள். ஆனந்த-சின்மய-ரச-ப்ரதிபாவிதாபிஹி (ப்ரஹ்ம சம்ஹிதா 5.37). அவர்கள் கிருஷ்ணரின் விரிவங்கங்கள், அவர்கள் கிருஷ்ணரின் இன்பாற்றலின் விரிவங்கங்கள். கிருஷ்ணருக்கு இன்பம் அளிப்பதே அவர்களது வாழ்வின் நோக்கம். அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல. ஆனால் அனைத்தையும் பணையம் வைத்து கிருஷ்ணரை நேசிப்பது எப்படி என்பதை,  வெறும் வெளியுலகத்திற்கு உணர்த்துவதற்காக,  நமக்குக் கற்பிப்பதற்காக... எனவே கோபியர்கள், நடு  இரவில்  கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்ட போது... கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். அவர்களும் அதை கேட்டு, ஈர்க்கப்பட்டு, தம் வீட்டை விட்டு சென்றார்கள். சிலர் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தம் உயிரை கொடுக்கவும் தயங்கவில்லை. அவர்கள் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நடத்தை இளம் பெண்களுக்கு... வேத பண்பாட்டின்படி, அவர்கள் தம் தந்தையின் அல்லது கணவனின் அல்லது சகோதரனின் பாதுகாப்பில்லாமல் வெளியே போகக் கூடாது. கூடாது, அவர்கள் போகக் கூடாது, அதுவும் நடு இரவில் போகவே கூடாது. ஆக இது வேத கொள்கைக்கு விரோதமானது. அது வெளிப்படையாகவே ஒரு வகையான விபச்சாரமாகும். ஆனால் அது கிருஷ்ணருக்காகச் செய்யப்பட்டதால், பகவான் சைதன்ய மஹாபிரபு இவ்வாறு பரிந்துரைக்கிறார், ரம்யா காசித் உபாசனா வ்ரஜ-வதுபிஹி கல்பிதா: "வ்ரஜ  கோபியர்கள் பாவித்த வழிபாட்டு முறையைவிட சிறந்தது வேறு எதுவும் கிடையாது." வ்ரஜ-வது. மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு இளம் பெண் தன் கணவரின், தந்தையின் பாதுகாப்பை விட்டு மற்றொரு இளைஞனிடம் செல்வது என்பது வேத கலாச்சாரத்தின்படி, மிகவும் கண்டனத்திற்குரியது. இருந்தாலும், கிருஷ்ணரின் திருப்தி மட்டுமே அச்செயலின் நோக்கமாக இருந்ததால், அது மிகச்சிறந்த வழிபாடு என்று ஏற்கப்பட்டுள்ளது. அது தான் கிருஷ்ண உணர்வு. எப்படி கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்பட வேண்டும், கிருஷ்ணரிடம் மட்டுமே எப்படி அன்பு செலுத்த வேண்டும், என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்ததாக அர்த்தமாகும். மேலும் மனித வாழ்க்கை... பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நாமும் வைகுண்டத்திலிருந்து தான் வந்தோம். அநாதி கரம-ஃபலே. அநாதி என்றால் படைப்பிற்கு முன்பு. உயிர்வாழிகளான நாம் நித்தியமானவர்கள். இந்த மொத்த ஜட படைப்பும் பல கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் அழிந்துவிடும், ஆனால் ஆன்மாவான உயிர்வாழிகள் நாம் அழிவதில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே ([[Vanisource:BG 2.20 (1972)|பகவத் கீதை 2.20]]). அவை தொடர்ந்து இருக்கும். ஆக இந்த முழு அண்ட சராசரமும் அழிந்தபிறகு, உயிர்வாழிகள் விஷ்ணுவின் திருமேனியில் அடைக்கலம் பெறுகின்றன. பின்னர் மீண்டும் படைப்பு நடக்கும்போது, அவை மீண்டும் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற வெளியேறுகின்றன. கடவுளிடம், அவரது திருவீட்டிற்கு எப்படி திரும்பிச் செல்வது என்பது தான் உண்மையான ஆசை. எனவேதான் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த வாய்ப்பை, இந்த மனித பிறவியை தவறாகப் பயன்படுத்தினால், அது மிக, மிக ஆபத்தானது. மீண்டும் நாம், பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியை ஏற்க வேண்டி வரும். அது மட்டும் இல்லை, நாம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற தவறினால், பின்னர் மீண்டும் முழு படைப்பின் அழிவும் ஏற்படும் மற்றும் நாம் பல கோடிக்கணக்கான வருட காலம் வரை விஷ்ணுவின் திருமேனிக்குள் தங்க வேண்டிவரும். மீண்டும் நாம் இங்கு வர வேண்டியிருக்கும். எனவே இது அநாதி கரம-ஃபலே என்று அழைக்கப்படுகிறது. அநாதி என்றால் "படைப்புக்கு முன்," என்று அர்த்தம். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அறிவற்ற உயிர்வாழிகளுக்கு கற்பிக்கக் கிருஷ்ணரே நேரடியாக வருகிறார். கிருஷ்ணர் மீண்டும் தனது திருவீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். ஏனென்றால் நாம் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்கள். ஒருவேளை உங்கள் மகன் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்,  உங்களுக்கு கவலையாக இருக்காதா, அதாவது, "ஓ, ஏதாவது விபத்து நடந்துவிடப் போகிறதே. பாவம் என் பையன் உயிரிழந்து விடுவானே." எனவே நீங்கள் சென்று அவனை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அதுபோலவே தான் கிருஷ்ணரின் நிலைமையும். நாம் இந்த பௌதிக உலகில் ஜென்மம் ஜென்மமாக, மீண்டும் மீண்டும் அவதி பட்டு வருகிறோம். துக்காலயம் அஷாஷ்வதம் ([[Vanisource:BG 8.15 (1972)|பகவத் கீதை 8.15]]). இந்த இடம் துன்பம் நிறைந்தது. ஆனால் மாயையின் ஜாலத்தால், நாம் இந்த பரிதாபத்திற்குறிய நிலையை, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கருதுகிறோம். இது தான் மாயை. ஆனால் அது... இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சி ஏதும் இல்லை. எல்லாம் துயரம் தான். இந்த பௌதிக உலகில் அனைத்தும் மோசமானது என்று எவ்வளவு சீக்கிரமாக நாம் புரிந்து கொள்கிறோமோ, எவ்வளவு விரைவாக நாம் இந்த பௌதிக உலகை விட்டு, மீண்டும் இறைவனின் திருவீட்டிற்குச் செல்லத் தயார் ஆகிறோமோ…,அது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில், நாம் என்ன செய்தாலும் அது நமக்கு தோல்வி தான். ஏனென்றால் நாம் நம் இலக்கையே தவறிவிடுகிறோம். ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் ([[Vanisource:SB 7.5.31|ஸ்ரீமத் பாகவதம் 7.5.31]]). துராஷயா. நாம், வீண் நம்பிக்கை வைத்திருக்கிறோம் – அது ஒருபோதும் நிறைவேறாது- நாம் இங்கு இறையுணர்வு இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்காக நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிலைமையை சரிகட்ட முயல்கிறோம். அது ஒருபோதும்... ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா. துராஷயா என்றால் "என்றும் நிறைவேற முடியாத நம்பிக்கை".  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:51, 29 June 2021



Lecture on BG 2.6 -- London, August 6, 1973

அக பகவத் கீதையின் உபதேசத்தின் மொத்த சாரமும் என்னவென்றால்: நீங்கள் சுய திருப்திக்காக செயல்படக் கூடாது; கிருஷ்ணருக்காக மட்டும் செயல்பட வேண்டும். அக போர் புரிவதும் கிருஷ்ணருக்காக, அல்லது அதைவிட வெறுக்கத்தக்க செயலாக இருந்தாலும் சரி, கிருஷ்ணருக்காக செய்ய தயாராக... கோபியர்களைப் போல் தான். கோபியர்கள் கிருஷ்ணரால் முற்றிலும் கவரப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் மிகவும் அழகான ஒரு குமரனாக இருந்தார், மற்றும் கோபியர்களோ இளம் பெண்கள். அது வெளித்தோற்றம்... உண்மையில், கோபியர்கள் கிருஷ்ணரின் நிரந்தர துனைமையர்கள். ஆனந்த-சின்மய-ரச-ப்ரதிபாவிதாபிஹி (ப்ரஹ்ம சம்ஹிதா 5.37). அவர்கள் கிருஷ்ணரின் விரிவங்கங்கள், அவர்கள் கிருஷ்ணரின் இன்பாற்றலின் விரிவங்கங்கள். கிருஷ்ணருக்கு இன்பம் அளிப்பதே அவர்களது வாழ்வின் நோக்கம். அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல. ஆனால் அனைத்தையும் பணையம் வைத்து கிருஷ்ணரை நேசிப்பது எப்படி என்பதை, வெறும் வெளியுலகத்திற்கு உணர்த்துவதற்காக, நமக்குக் கற்பிப்பதற்காக... எனவே கோபியர்கள், நடு இரவில் கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்ட போது... கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். அவர்களும் அதை கேட்டு, ஈர்க்கப்பட்டு, தம் வீட்டை விட்டு சென்றார்கள். சிலர் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தம் உயிரை கொடுக்கவும் தயங்கவில்லை. அவர்கள் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நடத்தை இளம் பெண்களுக்கு... வேத பண்பாட்டின்படி, அவர்கள் தம் தந்தையின் அல்லது கணவனின் அல்லது சகோதரனின் பாதுகாப்பில்லாமல் வெளியே போகக் கூடாது. கூடாது, அவர்கள் போகக் கூடாது, அதுவும் நடு இரவில் போகவே கூடாது. ஆக இது வேத கொள்கைக்கு விரோதமானது. அது வெளிப்படையாகவே ஒரு வகையான விபச்சாரமாகும். ஆனால் அது கிருஷ்ணருக்காகச் செய்யப்பட்டதால், பகவான் சைதன்ய மஹாபிரபு இவ்வாறு பரிந்துரைக்கிறார், ரம்யா காசித் உபாசனா வ்ரஜ-வதுபிஹி கல்பிதா: "வ்ரஜ கோபியர்கள் பாவித்த வழிபாட்டு முறையைவிட சிறந்தது வேறு எதுவும் கிடையாது." வ்ரஜ-வது. மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு இளம் பெண் தன் கணவரின், தந்தையின் பாதுகாப்பை விட்டு மற்றொரு இளைஞனிடம் செல்வது என்பது வேத கலாச்சாரத்தின்படி, மிகவும் கண்டனத்திற்குரியது. இருந்தாலும், கிருஷ்ணரின் திருப்தி மட்டுமே அச்செயலின் நோக்கமாக இருந்ததால், அது மிகச்சிறந்த வழிபாடு என்று ஏற்கப்பட்டுள்ளது. அது தான் கிருஷ்ண உணர்வு. எப்படி கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்பட வேண்டும், கிருஷ்ணரிடம் மட்டுமே எப்படி அன்பு செலுத்த வேண்டும், என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்ததாக அர்த்தமாகும். மேலும் மனித வாழ்க்கை... பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நாமும் வைகுண்டத்திலிருந்து தான் வந்தோம். அநாதி கரம-ஃபலே. அநாதி என்றால் படைப்பிற்கு முன்பு. உயிர்வாழிகளான நாம் நித்தியமானவர்கள். இந்த மொத்த ஜட படைப்பும் பல கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் அழிந்துவிடும், ஆனால் ஆன்மாவான உயிர்வாழிகள் நாம் அழிவதில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). அவை தொடர்ந்து இருக்கும். ஆக இந்த முழு அண்ட சராசரமும் அழிந்தபிறகு, உயிர்வாழிகள் விஷ்ணுவின் திருமேனியில் அடைக்கலம் பெறுகின்றன. பின்னர் மீண்டும் படைப்பு நடக்கும்போது, அவை மீண்டும் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற வெளியேறுகின்றன. கடவுளிடம், அவரது திருவீட்டிற்கு எப்படி திரும்பிச் செல்வது என்பது தான் உண்மையான ஆசை. எனவேதான் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த வாய்ப்பை, இந்த மனித பிறவியை தவறாகப் பயன்படுத்தினால், அது மிக, மிக ஆபத்தானது. மீண்டும் நாம், பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியை ஏற்க வேண்டி வரும். அது மட்டும் இல்லை, நாம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற தவறினால், பின்னர் மீண்டும் முழு படைப்பின் அழிவும் ஏற்படும் மற்றும் நாம் பல கோடிக்கணக்கான வருட காலம் வரை விஷ்ணுவின் திருமேனிக்குள் தங்க வேண்டிவரும். மீண்டும் நாம் இங்கு வர வேண்டியிருக்கும். எனவே இது அநாதி கரம-ஃபலே என்று அழைக்கப்படுகிறது. அநாதி என்றால் "படைப்புக்கு முன்," என்று அர்த்தம். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அறிவற்ற உயிர்வாழிகளுக்கு கற்பிக்கக் கிருஷ்ணரே நேரடியாக வருகிறார். கிருஷ்ணர் மீண்டும் தனது திருவீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். ஏனென்றால் நாம் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்கள். ஒருவேளை உங்கள் மகன் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், உங்களுக்கு கவலையாக இருக்காதா, அதாவது, "ஓ, ஏதாவது விபத்து நடந்துவிடப் போகிறதே. பாவம் என் பையன் உயிரிழந்து விடுவானே." எனவே நீங்கள் சென்று அவனை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அதுபோலவே தான் கிருஷ்ணரின் நிலைமையும். நாம் இந்த பௌதிக உலகில் ஜென்மம் ஜென்மமாக, மீண்டும் மீண்டும் அவதி பட்டு வருகிறோம். துக்காலயம் அஷாஷ்வதம் (பகவத் கீதை 8.15). இந்த இடம் துன்பம் நிறைந்தது. ஆனால் மாயையின் ஜாலத்தால், நாம் இந்த பரிதாபத்திற்குறிய நிலையை, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கருதுகிறோம். இது தான் மாயை. ஆனால் அது... இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சி ஏதும் இல்லை. எல்லாம் துயரம் தான். இந்த பௌதிக உலகில் அனைத்தும் மோசமானது என்று எவ்வளவு சீக்கிரமாக நாம் புரிந்து கொள்கிறோமோ, எவ்வளவு விரைவாக நாம் இந்த பௌதிக உலகை விட்டு, மீண்டும் இறைவனின் திருவீட்டிற்குச் செல்லத் தயார் ஆகிறோமோ…,அது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில், நாம் என்ன செய்தாலும் அது நமக்கு தோல்வி தான். ஏனென்றால் நாம் நம் இலக்கையே தவறிவிடுகிறோம். ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). துராஷயா. நாம், வீண் நம்பிக்கை வைத்திருக்கிறோம் – அது ஒருபோதும் நிறைவேறாது- நாம் இங்கு இறையுணர்வு இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்காக நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிலைமையை சரிகட்ட முயல்கிறோம். அது ஒருபோதும்... ந தே விதுஹு ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா. துராஷயா என்றால் "என்றும் நிறைவேற முடியாத நம்பிக்கை".