TA/Prabhupada 0252 - நாம் சுதந்திரமானவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்



Lecture on BG 2.6 -- London, August 6, 1973

ஆக இந்த பௌதிகவாதிகள், அந்த அளவுக்கு முட்டாள்கள், அயோக்கியர்கள், விஷமக்காரர்கள். தனது பௌதிக நடவடிக்கைகளை மென்மேலும் அதிகரிக்கின்றனர். இந்த பௌதிக நடவடிக்கைகளை அதிகரிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இல்லை. அது சாத்தியம் இல்லை. துராஷயா யே... மற்றும் அவர்களை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள்... அந்தா யதாந்தைர் உபநீயமானாஸ் தே (அ)பீஷ-தாந்த்ரயம் உரு-தாம்னி பத்தாஹ (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). நாம் அனைவரின் கைகளும் கால்களும் மிகவும் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் நாம் தம்மை சுதந்திரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஜட இயற்கையின் நியதிகளால்... இருப்பினும், நாம் சுதந்திரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானி, கடவுளை தவிர்க்க முயல்கிறான். விஞ்ஞானத்தின் உதவியால் பௌதிக பிரச்சனைகளிலிருந்து விடுபடுவான் என்று எண்ணுகிறான். அது சாத்தியம் இல்லை. நாம் ஜட இயற்கையின் பிடியில் இருக்கிறோம். ஜட இயற்க்கை என்பது கிருஷ்ணரின் செயல் நிருவாகி. மயாத்யக்ஷேண ப்ரக்ருதிஹி ஸூயதே ஸ-சராசரம்(பகவத் கீதை 9.10). ப்ரக்ருதேஹே க்ரியமாணானி குணைர் கர்மாணி சர்வஷஹ (பகவத் கீதை 3.27). ஆக நாம் அர்ஜுனரைப் போல், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று, எப்போதும் குழம்பிப்ப்போய் இருக்கிறோம். ஆனால், "நாம் கிருஷ்ணருக்காகச் செய்ய வேண்டும்," என்ற இந்த கொள்கையைக் பின்பற்றினால்... ஆக கிருஷ்ணரிடமிருந்து, அவரது பிரதிநிதியிடமிருந்து வழிகாட்டுதலை பெற்று அவ்வாறு செய்யுங்கள்; பிறகு கர்ம-பந்தனஹ ஏதும் இருக்காது. கர்மாணி நிர்தஹேதி கிந்து ச பக்தி-பாஜாம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.54). இல்லாவிட்டால், நாம் ஒவ்வொரு செயலின் எதிர்வினையாலும் கட்டுபடுத்தப்படுவோம். நம்மால் அதிலிருந்து விடுபட முடியாது. ஆக "நான் சண்டையிடுவதா வேண்டாமா," என்ற குழப்பம், அதற்கான தீர்வு விளக்கப்படும், அதாவது "ஆமாம், நீ கிருஷ்ணருக்காகச் சண்டையிட வேண்டும். பிறகு உனக்கு எந்த பாவமும் சேராது." காமஹ கிருஷ்ண-கர்மார்பணே. ஆஞ்சநேயரைப் போல் தான். அவர் பகவான் இராமசந்திரருக்காக போரிட்டார். தனக்காகப் போரிடவில்லை. அதுபோலவே தான் அர்ஜுனரும். அவரது கொடி, கபி-த்வஜம், அவரது கொடி ஆஞ்சநேயரை சின்னமாகக் கொண்டது. அது அவருக்குத் தெரியும். ஆக ஹனுமார், ஒரு மாவீரர், இராவணனுடன் போரிட்டார், ஆனால் தன் சுயநலத்தை எண்ணி போராடவில்லை. தாயார் சீதாவை எப்படி இராவணனின் பிடியிலிருந்து மீட்பது, எப்படி மொத்தக் குடும்பத்தையும் வதம் செய்து அங்கிருந்து வெளியேறி, எப்படி இராமசந்திரரின் பக்கத்தில் தாயாரை அமர வைப்பது, என்பதில் மட்டுமே அவரது ஆர்வம் இருந்தது. இது தான் ஹனுமாரின், அதாவது பக்தர்களின் கொள்கை. மற்றும் "இராமரின் பிடியிலிருந்து சீதையை எடுத்துச் சென்று அனுபவிப்பது," தான் இராவணனின் கொள்கை. இதுதான் இராவணனின் கொள்கை மற்றும் "இராவணனின் கைகளிலிருந்து சீதையை மீட்டு அவரை இராமரின் பக்கத்தில் அமரச் செய்வது," என்பது தான் ஹனுமாரின் கொள்கை. அதே சீதை தான். சீதை என்றால் லக்ஷ்மி தேவி. ஆக லக்ஷ்மி என்றால் நாராயணருக்குச் சொந்தமானவள், அதாவது இறைவனுக்குச் சொந்தமானவள். ஆக இந்த பௌதிகவாதிகள் அனைவரும், இராவணர்கள். அவர்கள் கடவுளுக்கு சொந்தமானதை அனுபவிக்க முயல்கிறார்கள். அவர்களது இந்த கொள்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக ஏதாவதொரு வழியில்... நாம் இராவணவனைப் போன்ற மனிதர்களோடு போராட முடியாது தான். அதாவது... நாம் அவ்வளவு பலசாலிகள் கிடையாது. எனவே நாம் ஒரு கையேந்தியின் கொள்கையை பின்பற்றுவோம்: "ஐயா, நீங்கள் மிகவும் நல்லவர். எங்களுக்கு ஏதாவது தானம் செய்யுங்கள். எங்களுக்கு ஏதாவது தானம் கொடுங்கள். நீங்கள் கடவுளின் சொத்தை வைத்திருப்பதால், உங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொள்கிறீர்கள், நீங்கள் நரகத்திற்குச் செல்லப் போகிறீர்கள். எனவே ஏதாவது ஒரு வழியில், நீங்கள் ஒரு ஆதரவாளர் ஆகிவிட்டால், நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்". அது தான் நம் கொள்கை. நாம் பிச்சைகாரர்கள் அல்ல. ஆனால் அது ஒரு கொள்கை. இப்போது நம்மிடம் இராவணர்களோடு போரிடும் அளவுக்கு பலம் இல்லை; இல்லாவிட்டால், நாம் போராடியே எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது சாத்தியம் இல்லை. நம்மிடம் அவ்வளவு சக்தி கிடையாது. எனவே நாம் பிச்சைக்காரனின் கொள்கையை கையாளுகிறோம். மிக்க நன்றி.